கிரிஷின் நிலைமையை அறிந்து முத்து எடுத்த முடிவு, ரோகினி என்ன செய்ய போகிறார்? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியர் மிரட்டியதால் கிரிஷ் ரொம்பவே பயந்து விட்டார். இதனால் யாருக்கும் தெரியாமல் பள்ளிக்கூடத்தில் இருந்து கிரிஷ் ஓடி விட்டார். இதை அறிந்த ஆசிரியர், கிரிஷின் கார்டியனுக்கு போன் செய்து தகவல் சொன்னார். மகேஸ்வரி, ரோகினிக்கு போன் செய்து நடந்ததை சொன்னார். இதனால் ரோகிணி ரொம்பவே பயந்து விட்டார். பின் ரோகினி, கிரிஷை தேடி சென்றார். இன்னொரு பக்கம் முத்து சவாரியில் ஒரு நபரை இறக்கிவிட்டு நின்று கொண்டிருந்தார்.
அந்த சமயம் பார்த்து வந்த கிரிஷ், முத்து கார் என்று தெரியாமல் அவருடைய கார் டிக்கியில் எரி ஒளிந்து கொண்டார். இதை அறியாமல் முத்துவும் காரை எடுத்துக் கொண்டு சென்றார். பின் முத்து வரும் வழியில் மீனாவையும் அழைத்துக் கொண்டு வந்தார். அப்போது அண்ணாமலையின் நண்பர் ரோட்டில் இருப்பதை பார்த்த முத்து, அவர்களையும் வீட்டில் கொண்டு போய் விட்டு உதவி செய்தார். அதற்குப்பின் மீனாவின் அம்மா வீட்டிற்கு முத்து கிளம்பினார். இன்னும் அந்த சமயத்தில் ரோகினி, மீனாவிற்கு போன் செய்தார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் ரோகினி, கிரிஷ் பார்த்த மாதிரி இருக்கிறது என்று உண்மை தெரிந்து கொள்வதற்காகத்தான் மீனாவிடம் போன் செய்தார். மீனா, முத்துவிடம் கிரிஷ் இல்லை என்று தெரிந்தவுடன் ரோகினி வருத்தப்பட்டார். அதற்குப்பின் கிரிஷை கண்டுபிடிக்க ரொம்பவே கஷ்டப்பட்டு கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் முத்து-மீனா இருவருமே மீனாவின் வீட்டிற்கு சென்று விட்டார்கள். அப்போது முத்து, கார் டிக்கியை திறக்கும்போது கிரிஷ் இருப்பதை பார்த்து ஷாக் ஆனார். பின் கிரிஷ் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி இருந்தார்.
நேற்று எபிசோட்:
கிரிஷ், கண் விழித்து இது உங்களுடைய கார் என்று எனக்கு தெரியாது. ஸ்கூலில் என்னை போலீசில் பிடித்துக் கொடுப்பேன் என்று மிரட்டினார்கள் என நடந்ததை சொன்னார். பின் முத்து, பாட்டியை ஊருக்கு அனுப்பிவிட்டு கிரிஷ் உடைய அம்மா இவனை ஹாஸ்டலில் சேர்த்து விட்டு எங்கேயே சென்று விட்டார் என்றார். அதற்கு அப்புறம் மீனா வீட்டில் எல்லோரும் க்ரிஷ் அம்மா பற்றி விசாரித்தார்கள். ஆனால், கிரிஷ் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கிரிஷ் நிலைமையை புரிந்து கொண்டு முத்து- மீனா இருவருமே ஸ்கூலுக்கு சென்று இருக்கிறார்கள். அப்போது ஸ்கூலில் இருந்த ரோகினி, முத்துவை பார்த்தவுடன் ஒளிந்து கொள்கிறார். பின் ஸ்கூலில் முத்து,கிரிஷ் காணாமல் போய் கிடைத்த விஷயத்தை பற்றி சொன்னவுடன் ஆசிரியரும் சந்தோஷப்பட்டு அவருடைய கார்டியனிடம் சொல்கிறார். பின் மகேஸ்வரி ஸ்கூலுக்கு வருகிறார். அப்போது கிரிஷ் எங்கே? என்று கேட்டதற்கு முத்து, அவன் பயந்து போயிட்டான். வீட்டில் இருக்கிறான். கிரிஷ் அம்மாவை நான் பார்க்க வேண்டும் என்கிறார். அதற்கு மகேஸ்வரி, அவர் வேலையாக இருக்கிறார். கிரிஷை கொண்டுவந்து ஸ்கூலில் விடுங்கள் என்று சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்கு முத்து, அவன் கொஞ்சம் பயம் தெளிந்த பின்பு கொண்டு வந்து விடுகிறேன் என்கிறார் .இதையெல்லாம் அறிந்த ரோகினி வீட்டில் கிரிஷ் தன்னுடைய தோழியின் தோழி மகன் என்று ஒரு புது கதையை கிளப்பி விட்டிருக்கிறார். இதை நம்பிய குடும்பம் முத்துவிடம் கிரிசை பற்றி விசாரிக்கிறார்கள். அப்போது முத்து, பையன் மீது அக்கறை இல்லாத அவரிடம் கிரிசை விட முடியாது. கிரிஷை பள்ளிக்கூடத்தில் விடனும் என்றால் அவர் அம்மாவை பார்த்து தீரனும். அதற்குப் பிறகுதான் அவனை ஸ்கூலில் விட முடியும் என்றெல்லாம் சொல்கிறார். இதையெல்லாம் கேட்டு என்ன செய்வது என்று புரியாமல் ரோகினி பயந்து போயிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது