மீனா அம்மாவின் கடையை மீட்க போராடும் முத்த, ரோகினிக்கு ஸ்ருதி அம்மா வைத்த செக் - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, மீனாவுக்கு ஆர்டர் தர வேண்டாம் என்றார். அதற்குப்பின் யோகா கிளாசில் பார்வதியை காதலிக்கும் நபர் போன் செய்து பேசி இருந்தார்கள். அந்த சமயம் வந்த ரோகினி, பூ ஆர்டரை பற்றி சிந்தாமணியிடம் சொன்னார். அப்போது ரோகினி, நான் உங்களுக்கு இந்த பெரிய ஆர்டர் தரணும் என்றால் நீங்கள் எனக்கு ஒரு வேலை செய்யணும். மீனா அம்மா வைத்திருக்கும் கடையை அடித்து நொறுக்க வேண்டும் என்றார். இதை கேட்டு ரோகினி சிந்தாமணி ஷாக் ஆனார்.
நேற்று எபிசோட்டில் ரோகினி சொன்ன வேலைக்கு சிந்தாமணி ஒத்துக் கொண்டார். பின் சிந்தாமணி தனக்கு தெரிந்தவர்களிடம் பேசி மீனா அம்மாவின் கடையை காலி செய்ய சொன்னார். இன்னொரு பக்கம் கோயிலில் மீனா,முத்து, சீதா, சத்யா எல்லோருமே பேசி கொண்டு இருந்தார்கள். அந்த சமயம் பார்த்து கார்ப்பரேஷனில் இருந்து வந்த சிலர், மீனா அம்மா கடையை காலி செய்தார்கள். அப்போது முத்து தட்டிக் கேட்க, அதற்கு அவர்கள், இந்த அம்மா நடத்தும் கடையில் தரமற்ற பொருட்களை தருகிறார் என்று புகார் வந்தது என்றார்.
சிறகடிக்க ஆசை:
இதனால் மீனாவின் அம்மா உடைந்து போய் விட்டார். பின் சீதா இதைப் பற்றி அருணிடம் சொன்னார். உடனே அருண், முத்துவை பழிவாங்க மனதுக்குள் திட்டம் போட்டார். அதற்குப்பின் முத்து, தன்னுடைய வீட்டில் நடந்ததை சொன்னார். சந்தோஷத்தில் விஜயா, பிரியாணி சாப்பிடணும் என்று மீனாவை சமைக்க சொன்னார். கோபப்பட்டு ஸ்ருதி, அண்ணாமலை எல்லோருமே விஜயாவை திட்டினார்கள். பின் பார்வதி வீட்டில் பிரியாணி வாங்கி வந்து மீனா வீட்டில் நடந்ததை சொல்லி சந்தோஷப்பட்டார் விஜயா.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பார்வதி, நீ செய்வது தவறு என்று சொல்லியுமே விஜயா கேட்கவில்லை. அதற்குப் பின் சிந்தாமணி, தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக போன் செய்து மீனாவின் வண்டியையும் தூக்க சொல்லி ஏற்பாடு செய்கிறார். இன்னொரு பக்கம் மீனா அம்மா ரொம்பவே அழுது புலம்பி கொண்டிருக்கிறார். அப்போது மீனா அவருக்கு ஆறுதல் சொல்லி சாப்பாடு ஊட்டி விடுகிறார்.இன்னொரு பக்கம் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் கடையை திறக்க முத்து முயற்சி செய்கிறார். அப்போது மீனா, லஞ்சம் கொடுத்தால் அந்த ஆபிஸர் கடை வைக்க ஏற்பாடு செய்வார் என்று சொல்கிறார். பின் முத்து, செல்வத்திடம் சொல்லி அந்த ஆபீஸரிடம் பேசி லஞ்சம் கொடுக்க ஏற்பாடு செய்கிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் சுருதி, தன்னுடைய ஹோட்டலுக்கு தேவையான பொருட்களை வாங்க மனோஜ் கடைக்கு போகிறார். அங்கு குறைந்த விலையில் பொருட்களை ஸ்ருதி கேட்கிறார். மனோஜ்- ரோகினி இருவருமே குறைந்த விலையில் கொடுப்பதால் புலம்பி கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து ரோகினிக்கு போன் செய்த ஸ்ருதி அம்மா, தான் கொடுத்த பணத்தை கேட்கிறார். ரோகினி, இப்போது என்னிடம் பணம் இல்லை என்று சமாளிக்கிறார். இதனால் ஸ்ருதி அம்மா திட்டி விட்டு பணத்தை சீக்கிரம் கொடுக்க சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.