சீதாவிடம் சகுனி வேலை செய்யும் அருண், கோபத்தில் கொந்தளித்த முத்து - சிறகடிக்க ஆசை

By subhashini · 21/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ராஜா- ராணி இருவருமே தன்னுடைய வக்கீலுடன் வந்து மனோஜிடம் பேசினார்கள். அப்போது வக்கீல், நீங்கள் ராணி இடம் தவறாக நடந்து கொண்டதற்காக போலீசில் புகார் கொடுப்பேன். நீங்கள் அவர்கள் மீது போட்ட திருட்டுப்பழிக்கு பணத்தை கொடுத்து விடுங்கள். ஆதாரத்தை கோட்டில் காண்பிப்பேன் என்றெல்லாம் மிரட்டினார். இதனால் வேறு வழி இல்லாமல் ரோகினி- மனோஜ் இருவரும் தவணை முறையில் பணம் தருவதாக ஒத்து கொண்டார்கள். பின் ரோகினி, கிரிஷை வேறொரு புது ஸ்கூலில் சேர்த்து விடப் போனார்.

நேற்று எபிசோட்டில் கிரிஷை புது ஸ்கூலில் ரோகினி சேர்த்து விட்டார். அதோட கிரிஷை ஹாஸ்டலில் தங்கி படிக்குமாறு ஏற்பாடு செய்தார். இது எல்லாம் பார்த்த க்ரிஷ் ஹாஸ்டல் போக மாட்டேன் என்று அடம் பிடிக்க, வலுகட்டாயமாக கிரிஷை விட்டு வந்து விட்டார் ரோகினி. இதையெல்லாம் ஒளிந்து நின்று பார்த்த தன் அம்மாவை ரோகினி பார்த்துவிட்டார். பின் ரோகினி கோபப்பட்டு சண்டை போட்டார். உடனே லட்சுமி, நீ கிரிஷை பார்த்துக் கொள்வாய் என்று நினைத்தேன். ஆனால், இவ்வளவு மோசமாக நடந்து கொள்வாய் என்று எனக்கு தெரியாது என்றார். ரோகினி, கிரிஷ் ஹாஸ்டலில் இருக்கட்டும். அவனை பார்த்துக்கொள்ள எனக்கு தெரியும். உன் வேலையை பார் என்று திட்டி விட்டு சென்று விட்டார்.

சிறகடிக்க ஆசை:

இன்னொரு பக்கம் செல்வம் தன்னுடைய மச்சான் உடன் பைக்கில் வந்து கொண்டிருந்தார். ஹெல்மெட் போடாததால் அருண், முத்து மீது இருந்த கோபத்தில் செல்வத்தையும் அவருடைய மச்சானையும் ரொம்ப மோசமாக நடத்தினார். அதோடு முத்துவை அந்த இடத்திற்கு வர வைக்க சொன்னார். இன்னொரு பக்கம் மீனா, லட்சுமியை பார்த்து பேசினார். அப்போது லட்சுமி, கிரிஷை அவருடைய அம்மா அழைத்து சென்று விட்டார். நீங்கள் எனக்காக செய்த உதவிக்கு நன்றி. என்னை மன்னித்து விடுங்கள் என்று அங்கிருந்து சென்று விட்டார். பின் வீட்டிற்கு வந்த மீனா, லட்சுமியை சந்தித்த விஷயத்தை பற்றி எல்லோரிடமும் சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் மீனா, கிரிஷ் அம்மா துபாய் எல்லாம் போகவில்லை. இங்குதான் எங்கேயோ இருக்கிறார். நம்மிடம் இருந்து கிரிஸ் பாட்டி மறைக்கிறார் என்று சொல்கிறார். உடனே விஜயா, யார் எங்கு போனால் என்ன? அவர்அவர் வேலையை பாருங்கள் என்று திட்டி விட்டு செல்கிறார். அதற்குப்பின் முத்து, சீக்கிரமாகவே கிரிஷிற்கு பின்னால் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கலாம் என்கிறார். இதை எல்லாம் கேட்டு ரோகினி அமைதியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் அருண் தன்னுடைய மச்சானை அடித்ததை நினைத்து செல்வம் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

முத்து-அருண் சர்ச்சை:

பின் இதைப்பற்றி முத்துவிடம் சொல்ல வேண்டாம் என்று செல்வம் தன்னுடைய நண்பர்களிடம் சொல்கிறார். அந்த சமயம் வந்த முத்து, செல்வத்திடம் பேசுகிறார். ஆனால், செல்வத்தால் சகஜமாக பேச முடியவில்லை. பின் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை முத்து அறிந்துகொண்டு விசாரிக்கிறார். உடனே செல்வத்தின் நண்பர்கள், நடந்த விஷயத்தை சொல்கிறார்கள். இதனால் முத்து கோபப்படுகிறார். இன்னொரு பக்கம் அருண், உன் மாமாவின் நண்பன் செல்வம் ஹெல்மெட் போடாமல் லஞ்சம் கொடுத்து மரியாதை இல்லாமல் நடந்து கொண்டார். உன் மாமா முகத்திற்காகத்தான் நான் அமைதியாக இருந்தேன். இல்லை என்றால் நடந்திருப்பதே வேறு என்று ஒரு கதையை கட்டுகிறார். இதை சீதாவும் நம்பி விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

பின் ஹாஸ்பிடலில் இருக்கும் சீதாவை சந்தித்த முத்து, அருணிற்கு கோபம் என்றால் என்னிடம் காண்பிக்க சொல். செல்வம் தவறு செய்தால் அதற்கு சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கணுமோ அதை எடுக்க சொல். தேவையில்லாமல் அடிக்க வேண்டாம் என்று சொல்கிறார். இதற்கு சீதா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் க்ரிஷ் ஒழுங்காக சாப்பிடவில்லை அடம்பிடிக்கிறார் என்று ஸ்கூலில் இருந்து போன் செய்கிறார்கள். இதனால் கோபப்பட்ட ரோகினி, நீ இப்படியே சொல்பேச்சை கேட்கவில்லை என்றால் நானும் எங்காவது போய் விடுவேன் என்று சொல்கிறார். இதனால் பயந்து போன கிரிஷ், நான் சாப்பிடுகிறேன் ஒழுங்காக இருக்கிறேன் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full