விஜயாவுக்காக ரிஸ்க் எடுக்கும் முத்து, கிரிஷால் பிரச்சனையில் சிக்குவாரா ரோகினி? சிறகடிக்க ஆசை

By subhashini · 25/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா, அந்தப் பொண்ணு இப்படி செய்வாள் என்று நான் நினைத்து பார்க்கவே இல்லை ரொம்ப என்று புலம்பினார். இன்னொரு பக்கம் முத்து- மீனா இருவருமே கிரிஷை அழைத்துக் கொண்டு ரோகினியின் அம்மாவை பார்க்க ஹாஸ்பிடலுக்கு சென்றிருந்தார்கள். அங்கு ரோகினி அம்மா, இனி கிரிஷ் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னார். ஆனால், முத்து-மீனா இருவருமே கேட்கவில்லை. நீங்கள் குணமடையும் வரை கிரிஷை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்னார்கள். இதையெல்லாம் ரோகிணி ஒளிந்து நிண்டு கேட்டுக்கொண்டார்.

அதற்குப்பின் வீட்டில் கிரிஷ் யாருக்கும் தெரியாமல் ரோகிணியின் ரூமிக்க போனார். அப்போது ரோகினி, நீ இங்கே வராதே, வெளியே போ என்று கிரிஷை அடிக்க, அந்த சமயம் வந்த மீனா, எதற்காக கிரிஷை அடித்தீர்கள் என்று ரோகினிடம் சண்டை போட்டார். அப்போது முத்து, ரோகினி அடித்தாரா? என்று கேட்டதற்கு, கிரிஷ் இல்லை என்று பொய் சொல்லி சமாளித்தார். அதற்குப்பின் வித்யாவிற்கு ஃபோன் செய்த ரோகினி, கிரிஷ் கொஞ்ச நாள் உன்னுடைய வீட்டில் இருக்கட்டும் என்று கேட்க, வித்யா என்னால் முடியாது. நீ உண்மையை சொல்லு தேவையில்லாத பிரச்சனையில் மாட்டிக்கொள்ளாதே என்று அறிவுரை சொன்னார்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் வீட்டில் ரதி ரதியின் பெற்றோர்கள், உறவினர்கள் எல்லோருமே விஜயா வீட்டிற்கு வந்து ப்ரச்சனை செய்தார்கள். அப்போது அவர்கள் ரொம்ப மோசமாக விஜயாவை திட்டினார்கள். அது மட்டும் இல்லாமல் விஜயாவை ரதியின் அம்மா அடிக்கவே போனார். உடனே மீனா தடுத்து நிறுத்தி, என் அத்தை மீது கை வைத்தால் உண்டு இல்லை என்று செய்து விடுவேன் என்று மிரட்டினார். விஜயா இதையெல்லாம் பார்த்து ஆடிப் போய்விட்டார். பின் ரதியின் உறவினர்கள், இந்த அம்மா கிளாஸ்சில் தான் என் மகள் தப்பு செய்திருக்கிறாள். அந்தப் பையன் வீட்டில் கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

நேற்று எபிசோட்:

எல்லாத்துக்கும் காரணம் இந்த அம்மா தான். வகுப்பை எடுப்பதை விட்டு தேவையில்லாத வேலை எல்லாம் செய்கிறார் என்று இன்னும் கோபப்பட்டு திட்டினார்கள். இதனால் முத்து, ரதியின் குடும்பத்தை சமாதானப்படுத்தி இந்த பிரச்சினையை நான் தீர்க்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தார். விஜயாவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். பின் அண்ணாமலை, இந்த பிரச்சனையை முத்துவால் தான் தீர்க்க முடியும். நீ எதைப் பற்றியும் யோசிக்காதே என்று சொன்னார். உடனே முத்து, என் உயிரை கொடுத்தாவது உங்களை நான் காப்பாற்றுவேன் என்று ரொம்ப எமோஷனலாக பேசினார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து, ரதி விஷயமாக நான் வெளியே போகிறேன். க்ரிஷ் அவருடைய பாட்டியை பார்க்க போகணும் என்று சொல்கிறான். யார் அழைத்து செல்வது என்று கேட்கிறார். உடனே விஜயா, ரோகினியை பார்த்து இதை போற வழியில் எங்கேயாவது தொலைத்திட்டு வா. பிரச்சனை முடியும் என்று ரொம்ப மோசமாக பேசுகிறார். இதனால் அண்ணாமலை- முத்து இருவருமே கோபப்பட்டு விஜயாவை திட்டுகிறார்கள். அதற்குப்பின் முத்துவிடம் மீனா, பார்வதி ஆண்டியிடம் நான் ரதியை காதலித்தவன் நம்பரை வாங்கித் தருகிறேன் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் கிரிஷை அழைத்துக் கொண்டு ரோகினி தன்னுடைய அம்மாவை பார்க்க போகிறார். அங்கு கிரிஷ், எனக்கு அந்த வீடு ரொம்ப பிடித்திருக்கிறது.

சீரியல் ட்ராக்:

எல்லோருமே என்னிடம் பேசுகிறார்கள். ஜாலியாக இருக்கிறது. நான் அங்கேயே இருக்கிறேன் என்றெல்லாம் பேசுகிறார். அதற்கு ரோகினி, ஒவ்வொரு நாளும் இவனை நினைத்து பயமாக இருக்கிறது. மாட்டிக்கொள்வானா தெரியல? எப்படியாவது உன்னை வீட்டுக்கு அழைத்து போகணும் என்றெல்லாம் சொல்கிறார். அதற்குப்பின் விஜயாவை பார்ப்பதற்காக பார்வதி, சிந்தாமணி இருவருமே வருகிறார்கள். அப்போது சிந்தாமணி, விஜயாவை பயமுறுத்தும் மாதிரியே பேசுகிறார். உடனே மீனா, என் கணவர் இருக்கும்போது யாரும் எதுவும் செய்ய முடியாது என்று சொல்கிறார். பின் சிந்தாமணி, முத்து- மீனா இருவரையுமே ஏளனமாக பேச, ஸ்ருதி சப்போர்ட் செய்கிறார். பின் சிந்தாமணி சென்ற பிறகு ஸ்ருதியின் அம்மா, விஜயாவிடம் நலம் விசாரிக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full