முத்து விரித்த வலையில் சிக்கிய விஜயா, மீனாவுக்கு கிடைத்த ஆதாரம் - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, நான் சொல்வதை போல செய். அவர்களை கிரிசிடம் பழக விடாதே என்று தன்னுடைய அம்மாவை மிரட்டி விட்டு சென்றார். அதற்குப்பின் மீனா, விழாக்கள் நேரங்களில் பூவை கொடுத்து காசை வீணாக்குவதற்கு பதில் புது புதிதாக பழங்களைக் கொடுக்கலாம் என்று யோசித்தார். பின் அந்த புது பிசினஸ் ஐடியாவை முத்து விடம் சொன்னார் மீனா. பின் வீட்டில் இதைப் பற்றி முத்து சொன்னார். வழக்கம்போல மனோஜ்- விஜயா இருவருமே ஏளனமாக மீனாவை பேசி இருந்தார்கள். ஆனால் அண்ணாமலை திட்டி மீனாவை ஆசீர்வாதம் செய்தார்.
நேற்று எபிசோட்டில் மீனாவின் புது பிசினஸை பற்றி அறிந்தவுடன் ஆர்டர் வந்தது. இதனால் மீனா ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் மீனா, தன்னுடைய புது ஆர்டர் பற்றி சீதாவிடம் சொன்னார். அப்போது அருண், நீங்கள் அடுத்தடுத்து உங்கள் பிசினசில் முன்னேற வேண்டும். ஆனால், முத்து தான் கடைசிவரை டிரைவர் ஆக இருக்கனும். அவரை மதித்து சாப்பாடு கூட போடமாட்டார்கள் என்று ரொம்ப ஏளனமாக பேசி இருந்தார். அதற்கு மீனாவும் தக்க பதிலடி கொடுத்தார்.
சிறகடிக்க ஆசை:
அதற்குப்பின் விஜயா, டாக்டர் பட்டத்திற்காக ரத்த தானம் கொடுப்பதை பற்றி வீட்டில் சொன்னார். வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆனார்கள். பின் விஜயா, வீட்டில் எல்லோரையும் ரத்த தானம் கொடுக்க பார்வதி வீட்டிற்கு வர சொன்னார். அதற்குப்பின் மீடியாவில் இருந்து வந்தவர்கள் விஜயா ஏற்பாடு செய்த ரத்த தானத்தை பேட்டி எடுத்தார்கள். விஜயா செய்யும் ஒவ்வொரு செயலும் வீட்டில் எல்லோருக்குமே அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி ஆனது. தான் நல்லவன் போலவே விஜயா, பேட்டி கொடுத்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜயா, தன்னுடைய குடும்பத்தை பற்றியும் மருமகள்கள் பற்றியும் ரொம்ப பெருமையாக பேசுகிறார். இதைக் கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து டாக்டர் பட்டம் கொடுக்கும் நபருமே அந்த இடத்திற்கு வந்து விஜயாவின் செயல்களை எல்லாம் பாராட்டி பேசுகிறார். அதற்குப்பின் முத்து, தன்னுடைய அம்மாவின் செயல்களைப் பற்றி பார்வதியிடம் விசாரிக்கிறார். அப்போது பார்வதி, டாக்டர் பட்டத்திற்காக தான் விஜயா இப்படி எல்லாம் செய்கிறார் என்பதை சொல்கிறார். பின் இதைப்பற்றி முத்து-மீனா இருவருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அப்போது முத்து, ஏமாற்று வேலை செய்து டாக்டர் பட்டத்தை பெறக்கூடாது. இதற்கு நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்கிறார். அடுத்த நாள் விஜயா வாயிலேயே உண்மையை வரவைற்பதற்காக முத்து சில வேலைகளை செய்கிறார். விஜயாவுமே முத்து விரித்த வலையில் சிக்கி கொள்கிறார். இதையெல்லாம் மீனா விஜயாவிற்கே தெரியாமல் வீடியோ எடுத்து விடுகிறார். அதற்குப்பின் மீனாவை, விஜயா பயங்கரமாக திட்டி வேலை வாங்குவது எல்லாம் முத்து வீடியோ எடுத்து வைக்கிறார். அதற்குப்பின் முத்து பிச்சைக்காரர் வேடம் போட்டு விஜயா பக்கத்தில் போய் நிற்கிறார். உடனே விஜயா, பயங்கரமாக திட்டி அனுப்புகிறார். அதை மீனா வீடியோ எடுத்து வைத்துக் கொள்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது