நீத்துவிற்கு வார்னிங் கொடுத்த முத்து, ரோகினி வலையில் சிக்குவாரா மனோஜ்? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து- மீனா இருவரும் ஸ்ருதியிடம் பேசுவதற்கு அண்ணாமலை இடம் கேட்டார். அண்ணாமலையும் ரவியின் வாழ்க்கைக்காக பேசுவதற்கு ஒத்துக்கொண்டார். இன்னொரு பக்கம் ரோகினி, ஆர்டரை கேன்சல் செய்த ஷோரூமில் சென்று பேசி இருந்தார். ஆனால், அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. பின் ரோகினி, நீங்கள் ஆர்டர் கொடுத்தால் என்னுடைய விவாகரத்து நின்றுவிடும். தயவு செய்து கொடுங்கள் என்றெல்லாம் மீண்டும் டிராமா போட்டார்.
சிந்தாமணி, விஜயா இருவரும் பார்வதி வீட்டிற்கு வந்தார்கள். அப்போது விஜயா,- ஸ்ருதி ரவி விஷயத்தை பற்றி சொன்னார். பார்வதி ரொம்பவே வருத்தப்பட்டு ஆறுதல் சொன்னார். அப்போது சிந்தாமணி, உங்கள் வீட்டில் ஒரு பூஜை செய்யுங்கள். எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்றார். பின் பூஜை செய்வதற்கான ஏற்பாடுகளை விஜயா, சிந்தாமணியை செய்ய சொன்னார். அதற்குப்பின் மீனாவிற்கு புது ஆர்டர் கிடைத்ததால் அந்த இடத்தில் பூக்கடையை திறக்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே மீனாவின் கடை திறப்பு விழாவிற்கு சென்றிருந்தார்கள்.
சிறகடிக்க ஆசை:
வழக்கம்போல் விஜயா, மீனாவையும் அவருடைய தொழிலையும் கிண்டல் அடித்து பேசி இருந்தார். பின் அந்த இடத்திற்கு ரோகிணி வந்தார். ரோகினியை பார்த்தவுடன் மொத்த குடும்பமும் கொந்தளிக்கிறது.
விஜயா, எதற்காக வந்தாய்? என்று கேட்டார். மீனா, மேனேஜர் வர சொன்னார் என்று சொல்லிவிட்டு ஓரமாக போய் நிற்கிறார். பின் அந்த இடத்திற்கு பிளாட்டின் மேனேஜர் வந்தார். அவர் முத்து,மீனாவிடம் பேசிவிட்டு பூஜையை தொடங்க சொன்னார். கடை திறக்கும் பூஜையை சிறப்பாக செய்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நல்லபடியாக மீனாவின் பூக்கடையை அண்ணாமலை- விஜயா இருவரும் சேர்ந்து திறந்து வைக்கிறார்கள். அதற்குப்பின் மனோஜிடம் மேனேஜர், இந்த எல்லா பில்டிங்க்கும் உங்களுடைய ஷோரூமில் இருந்து பொருள்களை வாங்குகிறோம். அதற்கு காரணம் ரோகினி தான். ரெண்டு பேரும் சேர்ந்து இந்த ஆர்டரை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். இதை பார்த்து விஜயாவிற்கு பயங்கர கோபம் வருகிறது. ரோகினி, அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் லைஃபிலும் நான்தான் பார்டர் என்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் விஜயா, மனோஜ் இருவரும் வக்கீலை சந்தித்து நடந்ததை சொல்கிறார்கள். வக்கீல், இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால், அவருடன் நெருங்கி பழக வேண்டாம். அது தான் தேவை என்று அறிவுரை சொல்கிறார். இன்னொரு பக்கம் முத்து, செல்வம் இருவரும் நீத்து, ரெஸ்டாரன்ட்க்கு சென்று பேசுகிறார்கள். நீத்து, நான் ரவியை காதலிப்பேன் என்று தெளிவாக சொல்கிறார். முத்து, இனி நீ சுருதி- ரவி வாழ்க்கையில் தலையிட்டால் நீயும் உன் கடையும் இருக்க மாட்டாய் என்று மிரட்டி விட்டு வருகிறார். அதற்குப்பின் ஷோரூமிற்கு ரோகினி மார்டன் உடையில் கவர்ச்சியாக வந்திருக்கிறார். இதை பார்த்த மனோஜ் கண்டுகொள்ளாமல் இருக்க முயற்சி செய்தார்.