சிந்தாமணியின் முகத்திரையை கிழித்து எடுத்த முத்து, மீனா வண்டி என்ன ஆச்சு? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று மீனா புகார் கொடுக்கப் போனார். அப்போது அருணிடம் நடந்ததை மீனா சொன்னார். அதற்கு அருண், முத்துவை இதில் தோற்கடிக்கனும் என்றெல்லாம் நினைத்தார். இன்னொரு பக்கம் ஸ்ருதி, தன்னுடைய ஓட்டலுக்கு சமைப்பதற்காக செப்புக்கு தேர்வு நடத்திக் கொண்டிருந்தார். அதன் பின் வீட்டில் மனோஜ், தன்னுடைய ஷோரூமின் இன்னொரு பிரான்ச் ஆரம்பிப்பதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
நேற்று எபிசோட்டில் மனோஜ், ரோகினி இருவருமே தங்களுடைய தெரிந்தவர்களின் மூலம் பார்ட்னராக சேர்த்து புது பிரான்ச் ஓபன் செய்வது பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த மீனாவிடம் கடையை பற்றி அண்ணாமலை விசாரித்தார். வழக்கம் போல மனோஜ்-விஜயா இருவரும் நக்கலாக பேசினார்கள். அதற்குப்பின் மீனா, தன்னுடைய வண்டி காணாமல் போன விஷயத்தைப் பற்றி சொன்னார். முத்து, நான் கண்டுபிடிக்கிறேன் என்று அவருக்கு ஆறுதல் சொன்னார். மறுநாள் உயர் அதிகாரியை முத்து அழைத்து வந்தார்.
சிறகடிக்க ஆசை:
அப்போது செல்வத்திடம், அதிகாரி லஞ்சம் வாங்குவதை பார்த்த உயர் அதிகாரி திட்டினார். உடனே அந்த அதிகாரி, இதை எல்லாம் சிந்தாமணி தான் செய்ய சொன்னார் என்றார். பின் உயர் அதிகாரி, அவரை திட்டி அனுப்பி விட்டார். உயர் அதிகாரி, உண்மையை கண்டுபிடித்ததால் முத்துவின் செயலை பாராட்டி வீட்டிற்கு அழைத்துப் போனார். பின் மீண்டும் கடையை நடத்துவதற்கு அனுமதி தருவதாக சொன்னார். அந்த சமயம் பார்த்து அருண் அந்த இடத்திற்கு வந்தார். ஆனால், முத்து வீட்டிற்குள் இருப்பது அருணுக்கு தெரியாது. அப்போது அருண் சிபாரிசு கடிதம் தருவதால் அந்த உயர் அதிகாரி திட்டினார். பின் முத்து, அருண் தான் உதவி செய்தான் என்று சொல்லுங்க என்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் மீனாவின் அம்மா, சீதா, மீனா மூவருமே கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கோவிலுக்கு வெளியே கடையை வைப்பதற்கு அனுமதி கொடுத்து விடுவதால் மீனா அம்மாவின் அம்மா சந்தோசப்படுகிறார்கள். உடனே சீதா, அருண் தான் இதை ஏற்பாடு செய்தார் என்று சொன்னவுடன் மீனாவின் அம்மா ரொம்ப பெருமையாக அருணை பேசுகிறார். இதைக் கேட்டு மீனாவிற்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. அதற்குப்பின் மீனா வரும் வழியில் குரிசை பார்த்து விசாரிக்கிறார். அப்போது காருக்குள் இருந்த ரோகினி மீனாவை பார்த்தவுடன் ஒளிந்து கொள்கிறார்.
இன்னொரு பக்கம் சிந்தாமணியின் காரை முத்து மறைத்து வைத்து விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
சிந்தாமணி வீட்டிற்கு கிளம்புவதற்காக காரை தேடுகிறார். அப்போது வந்த முத்து, நீதான் மீனா அம்மாவின் கடையை எடுக்க சொன்ன விஷயம் தெரியும். உன் கார் வரவேண்டும் என்றால் மீனா வண்டி எங்கே என்று கேட்கிறார். அதற்கு சிந்தாமணி, மீனா வண்டியை எடுத்த ஆட்கள் இருக்கும் இடத்தை சொல்லி வருகிறார். அந்த இடத்திற்கு சென்ற முத்து, எல்லோரையும் அடித்து விட்டு வண்டி கேட்டார். அதற்கு அவர்கள், வண்டி இல்லை அதற்கான பணம் வேணும் என்றால் தந்து விடுகிறோம். ஆனால், பாதி பணம் தான் தருவேன் என்கிறார்கள். உடனே முத்து, சிந்தாமணியிடம் மீதி பணத்தை வாங்கி கொடு என்று மிரட்டுகிறார். அவர்களும் சிந்தாமணிக்கு போன் செய்து சொல்கிறார்கள்.