ரோகினி இடம் ருத்ர தாண்டவம் ஆடிய விஜயா, முத்து செய்த தரமான சம்பவம் - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் உயர் அதிகாரி, லஞ்சம் வாங்கியவரை திட்ட அனுப்பி விட்டார். உயர் அதிகாரி, உண்மையை கண்டுபிடித்ததால் முத்துவின் செயலை பாராட்டி வீட்டிற்கு அழைத்துப் போனார். பின் மீண்டும் கடையை நடத்துவதற்கு அனுமதி தருவதாக சொன்னார். அந்த சமயம் பார்த்து அருண் அந்த இடத்திற்கு வந்தார். ஆனால், முத்து வீட்டிற்குள் இருப்பது அருணுக்கு தெரியாது. அப்போது அருண் சிபாரிசு கடிதம் தருவதால் அந்த உயர் அதிகாரி திட்டினார். பின் முத்து, அருண் தான் உதவி செய்தான் என்று சொல்லுங்க என்றார்.
நேற்று எபிசோட்டில் கோவிலுக்கு வெளியே கடையை வைப்பதற்கு அனுமதி கொடுத்து விடுவதால் மீனா அம்மாவின் அம்மா சந்தோசப்பட்டார்கள். உடனே சீதா, அருண் தான் இதை ஏற்பாடு செய்தார் என்று சொன்னவுடன் மீனாவின் அம்மா ரொம்ப பெருமையாக அருணை பேசி இருந்தார். இதைக் கேட்டு மீனாவிற்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. அதற்குப்பின் மீனா வரும் வழியில் குரிசை பார்த்து விசாரித்தார். அப்போது காருக்குள் இருந்த ரோகினி மீனாவை பார்த்தவுடன் ஒளிந்து கொண்டார். இன்னொரு பக்கம் சிந்தாமணியின் காரை முத்து மறைத்து வைத்து விட்டார்.
இன்றைய எபிசோட்:
சிந்தாமணி வீட்டிற்கு கிளம்புவதற்காக காரை தேடினார். அப்போது வந்த முத்து, நீதான் மீனா அம்மாவின் கடையை எடுக்க சொன்ன விஷயம் தெரியும். உன் கார் வரவேண்டும் என்றால் மீனா வண்டி எங்கே என்று கேட்டார். அதற்கு சிந்தாமணி, மீனா வண்டியை எடுத்த ஆட்கள் இருக்கும் இடத்தை சொல்லி வந்தார். அந்த இடத்திற்கு சென்ற முத்து, எல்லோரையும் அடித்து விட்டு வண்டி கேட்டார். அதற்கு அவர்கள், வண்டி இல்லை அதற்கான பணம் வேணும் என்றால் தந்து விடுகிறோம். ஆனால், பாதி பணம் தான் தருவேன் என்றார்கள். உடனே முத்து, சிந்தாமணியிடம் மீதி பணத்தை வாங்கி கொடு என்று மிரட்டினார். அவர்களும் சிந்தாமணிக்கு போன் செய்து சொன்னார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் ரோகிணிக்கு போன் செய்த சிந்தாமணி, முத்துவிற்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது. அவன் என்னிடம் பணத்தை கேட்டு மிரட்டுகிறான். அவன் போலீசுக்கு போனால் நான் உன்னுடைய பெயரை தான் சொல்லுவேன். 40 ஆயிரம் பணத்தை நீயே கொடுத்து விடு என்று சொல்கிறார். பின் ரோகினி, மனோஜிடம் வித்யா கல்யாணத்திற்காக ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை வாங்கி சிந்தாமணி இடம் கொடுத்து விடுகிறார். அதற்குப்பின் சிந்தாமணி, முத்துவிடம் பணத்தை கொடுத்துவிட்டு இனிமேல் நான் நேரடியாகவே மீனாவிடம் மோதுகிறேன். அவளை இந்த தொழிலை விட்டு ஓட வைக்கிறேன் என்றெல்லாம் சவால் விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்கு பதிலுக்கு பதில் முத்துவுமே சவால் போடுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் மனோஜ், ரோகினி வாங்கிய பணத்தை பற்றி சொல்கிறார். இதனால் கோபப்பட்ட விஜயா ருத்ர தாண்டவம் ஆடி ரோகினியை வெளுத்து வாங்குகிறார். ரோகினியால் எதுவுமே பேச முடியவில்லை. அந்த சமயம் வந்த முத்து, மீனா வண்டி விஷயத்தை பற்றி சொல்கிறார். அதோடு இந்த விஷயம் எல்லாம் செய்தது சிந்தாமணி தான் என்று சொல்கிறார். எல்லோருமே சாக் ஆகிறார்கள். ஆனால், விஜயா அதைப்பற்றி பெரிதாக கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்கிறார். பின் மீனாவிற்கு புது வண்டி வாங்குவதை பற்றி பேசுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.