மீனா மறைத்த ரகசியத்தை கண்டுபிடிக்க முயலும் முத்து, சிக்குவாரா ரோகினி? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, வீட்டில் உண்மையை சொல்ல முடியாமல் குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய மனசாட்சி, ரோகிணி பொய் சொல்லி நடமாடினார். நீ எல்லோரிடமும் சொல்லு உண்மை தெரிந்தால் உன்னையும் தான் தப்பாக நினைப்பார்கள் என்று அவருடைய உண்மையை சொல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. இதைக் கேட்டு மீனாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. ரொம்பவே குழம்பிப் போயிருந்தார். இன்னொரு பக்கம் தங்களுடைய புதிய ஆர்டர் வாங்குவதற்காக ரோகிணி- மனோஜ் இருவருமே கம்பெனிக்கு சென்றிருந்தார்கள்.
ரோகினி, தனக்கு நடந்த முதல் திருமணத்தைப் பற்றி சொல்லி அழுதார். மீனாவுமே ரோகினியின் கதை கேட்டு வருத்தப்பட்டார். அதற்குப்பின் மீனா, உன் வாழ்க்கையில் நடந்தது பெரிய தவறு. நீ செய்த தவறுக்கு நான் குற்ற உணர்ச்சியில் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். பின் மீனா, இரவு முழுவதும் தூங்காமல் ரோகினி சொன்ன கதையைப் பற்றியே நினைத்துக் கொண்டே இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
முத்து, என்னானது என்று நடந்ததை விசாரித்தார். ஆனால், மீனா எதுவுமே சொல்லவில்லை. மறுநாள் காலையில் மனோஜ், ஒரு பெரிய ஆபீசர் போல கோர்ட் போட்டு அமர்க்களம் செய்து கொண்டிருந்தார். வழக்கம்போல ரோகினி திமிராக பேசி இருந்தார். உடனே மீனா முறைத்தவுடன் அவர் அமைதியாகி விட்டார். அண்ணாமலை, செய்திருக்கும் வேலையை ஒழுங்காக பண்ணு என்று அறிவுரை எல்லாம் சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜ் சொந்தமாக கம்பெனி ஆரம்பிப்பதை பற்றி வீட்டில் பேசுகிறார். விஜயா, இதற்கு எல்லாம் காரணம் ரோகினி வந்த நேரம் தான். நீங்கள் ரெண்டு பேருமே இன்னும் வளரனும். எனக்கு பிடித்த மருமகள் ரோகிணி தான் என்றெல்லாம் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்த்து மீனாவிற்கு பயங்கர கடுப்பாகிறது. அதற்கு பின் மீனா வேலைக்கு கிளம்பி வருகிறார். ஆனால், அங்கு அவர் கவனம் செலுத்தி எந்த வேலையுமே செய்ய முடியவில்லை. தப்பு தப்பாகவே செய்து கொண்டிருக்கிறார். இதனால் மீனாவுடன் வேலை செய்பவர்கள் எல்லோருமே விசாரிக்கிறார்கள். ஆனால், மீனாக எதுவும் சொல்லவில்லை.
சீரியல் ட்ராக்:
பின் முத்துமிடம் இதைப் பற்றி மீனாவின் தோழிகள் சொல்கிறார்கள். முத்து, மீனாவிற்கு என்ன ஆனது? என்று கவலையில் இருக்கிறார். அதற்கு பின் செல்வத்திடம் இதைப் பற்றி முத்து பேசுகிறார். கோவிலில் சாமியாடி சொன்ன வார்த்தையால் தான் மீனா இப்படி இருப்பாரோ? என்ற கேள்வி முத்துவுக்குள் எழுகிறது. இன்னொரு பக்கம் மனோஜ், தன்னுடைய புதிய கம்பெனிக்கு பிஏவை எடுக்க வேண்டும் என்று சில பேரை இன்டர்வியூ எடுக்கிறார். அப்போது ஜீவா என்று தன்னுடைய முன்னாள் காதலியின் பெயர் வைத்திருக்கும் பெண்ணை செலக்ட் செய்கிறார். பின் மனோஜ், நிறைய கனவுகளை பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். ரோகினி, உள்ளுக்குள் மீனா உண்மை சொல்லிவிடுவாளா? என்று புலம்பி கொண்டிருக்கிறார்