மீனாவை நினைத்து சோகத்தில் இருக்கும் முத்து, சந்தோஷத்தில் ரோகினி -சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா செய்த துரோகத்தை நினைத்து முத்து ரொம்பவே வருத்தப்பட்டு புலம்பி கொண்டிருந்தார். அந்த சமயம் மீனா வீட்டிற்கு வர, முத்து கோபப்பட்டு பயங்கரமாக திட்டி இருந்தார். ஆனால், மீனா எதுவும் பேசாமல் அண்ணாமலையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அதற்கு அண்ணாமலை, நீ இப்படி செய்வ என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றார். உடனே மீனா, சீதா-அருண் திருமணம் செய்ததற்கான காரணத்தைப் பற்றி சொன்னார். இதுதான் சந்தர்ப்பம் என்று விஜயா, மனோஜ், ரோகினி மூவருமே முத்துவும், மீனாவையும் பிரிப்பதற்காக சதி வேலைகளை செய்தார்கள்.
ஒரு கட்டத்தில் முத்து, இது எனக்கும் என் பொண்டாட்டிக்கும் நடக்கும் பிரச்சனை. யாரும் தலையிட தேவையில்லை. நீ வீட்டை விட்டு வெளியே போ என்று சொன்னார். இதனால் மீனா எதுவும் பேசாமல் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார். இன்னொரு பக்கம் அருண், என்ன இருந்தாலும் நீ முத்துவுக்கு முக்கியத்துவம் கொடுத்து மண்டபத்தை விட்டு போயிருக்கக் கூடாது என்று பேசி இருந்தார். அந்த சமயம் பார்த்து மீனா தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்தார். அப்போது மீனாவின் அம்மா, உன் தங்கை வாழ்க்கைக்காக உன்னுடைய வாழ்க்கையை இழந்து விட்டாயே என்று ரொம்ப எமோஷனலாக அழுது புலம்பி இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
மொட்டை மாடியில் மனோஜ், உன் பொண்டாட்டி இதைத் தவிர உன்னிடம் என்னவெல்லாம் மறந்தாள் என்று கேட்டுப்பார் என்றார். முத்துவுமே மீனாவிற்கு போன் செய்து என்னிடம் என்ன மறைத்தாய்? என்று கேட்டார். ஆனால், மீனா எதுவும் சொல்லாமல் போனை வைத்து விட்டார். விடாமல் முத்து போன் செய்து கொண்டே இருந்தார். மறுநாள் காலையில் போதை தெளிந்தவுடன் முத்து, மீனா பெயரை சொல்லி கத்திக் கொண்டிருந்தார். அப்போது அண்ணாமலை, நேற்று நடந்த விஷயத்தை மறந்து விட்டாயா? நீதானே மீனாவை வீட்டை விட்டு துரத்தினாய் என்று சொன்னவுடன் முத்து எனக்கு தெரியும் என்றார். அதற்குப்பின் விஜயா, மீனாவின் பெயரை கூப்பிட்டுக் கொண்டிருந்தார்.
கடந்த வாரம் எபிசோட்:
உடனே விஜயா, ரோகினையை காபி போட சொன்னார். ரோகினி போட்ட காபி குடித்தவுடன் விஜயா கீழே துப்பிவிட்டு இதெல்லாம் ஒரு காஃபியா? இந்த வீட்டு வேலைக்காரியிடம் கற்றுக்கொள்ள வேண்டியதுதானே என்று திட்டினார். உடனே முத்து, மீனா என் பொண்டாட்டி. அவள் இந்த வீட்டு வேலைக்காரி கிடையாது. அவளைப் பற்றி அவமரியாதயாக பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்றவுடன் விஜயா ஷாக் ஆகினார். பின் விஜயா, மீண்டும் மோசமாக மீனாவை பற்றி பேசி இருந்தார். இதனால் ,கொந்தளித்த முத்து நான் என் மனைவியை என்ன வேண்டுமானாலும் சொல்லுவேன். நீங்கள் அவளைப் பற்றி தவறாக பேசக்கூடாது. என் மனைவிக்கும் எனக்கும் நடக்கும் சண்டையில் நீங்கள் யாரும் தலையிடக்கூடாது என்று சொன்னவுடன் விஜயா வாயை பிளந்து விட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரோகினி, உன் தம்பி மீனா மீது கோபமாக இருந்தாலும் அவளுக்காக சப்போர்ட் செய்து பேசுகிறார். ஆனால், நீ எனக்கு எப்பவுமே சப்போர்ட் செய்வதில்லை என்று வருத்தப்படுகிறார். இதனால் மனோஜ் ஆறுதலாக ரோகினி இடம் பேசுகிறார். பின் இருவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கும் போது விஜயா வருகிறார். உடனே ரோகினி ஒளிந்து கொள்கிறார். அப்போது மனோஜ், நான் போனில் பேசிக் கொண்டிருந்தேன் என்று பொய் சொல்லி சமாளிக்கிறார். அதை நம்பி விஜயா போய் விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
மனோஜ் தனக்காக சப்போர்ட் செய்தது நினைத்து ரோகினி சந்தோசப்படுகிறார். அதற்குப்பின் முத்து, மீனா வீட்டில் இல்லாததால் சாப்பிடாமல் சரியாக தூங்காமல் இருக்கிறார். இன்னொரு பக்கம் சீதா, தன்னுடைய மாமியார் வீட்டிற்கு கிளம்ப தயாராக இருக்கிறார். அப்போது அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லோரும் சீதாவிற்கு அறிவுரை சொல்கிறார்கள். அதோடு முத்துவை ரொம்ப பெருமையாக பேசுகிறார்கள். இதையெல்லாம் கேட்டு அருண் மனதுக்குள்ளே கோபப்பட்டு கொண்டிருக்கிறார். சீதாவும் முத்துவிற்கு ஃபோன் செய்து மாமியார் வீட்டுக்கு கிளம்புவதை பற்றி சொன்னவுடன் அவருமே அறிவுரை சொல்கிறார். அதற்குப்பின் முத்து, தன்னுடைய நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறது மீனா சாப்பாடு கொண்டு வந்த விஷயத்தை சொன்னவுடன் அவர் உள்ளுக்குள் சந்தோஷப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.