பிரச்சனையில் சிக்கி கொண்ட பார்வதி, ரோகினி மீது சந்தேகப்படும் முத்து - சிறகடிக்க ஆசை

By subhashini · 29/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, ஒவ்வொரு நாளும் இவனை நினைத்து பயமாக இருக்கிறது. மாட்டிக்கொள்வானா தெரியல? எப்படியாவது உன்னை வீட்டுக்கு அழைத்து போகணும் என்றெல்லாம் சொன்னார். அதற்குப்பின் விஜயாவை பார்ப்பதற்காக பார்வதி, சிந்தாமணி இருவருமே வந்தார்கள். அப்போது சிந்தாமணி, விஜயாவை பயமுறுத்தும் மாதிரியே பேசி இருந்தார். உடனே மீனா, என் கணவர் இருக்கும்போது யாரும் எதுவும் செய்ய முடியாது என்று சொன்னார். பின் சிந்தாமணி, முத்து- மீனா இருவரையுமே ஏளனமாக பேச, ஸ்ருதி சப்போர்ட் செய்தார். பின் சிந்தாமணி சென்ற பிறகு ஸ்ருதியின் அம்மா, விஜயாவிடம் நலம் விசாரித்தார்.

ஸ்ருதியின் அம்மா, இங்கிருந்தால் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்து கொண்டே இருக்கும். கேரளாவில் எங்களுக்கு சொந்தமான போட்ஹவுஸ் இருக்கிறது. அங்கு சென்று விடுங்கள் என்று சொன்னார். உடனே ரவி, அதெல்லாம் தேவையில்லை. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்னார். இன்னொரு பக்கம் ஷோரூமில் மனோஜ் எல்லோரிடமே எரிந்து விழுந்து கொண்டிருந்தார். இதை பார்த்த ரோகினி, அத்தைக்கு இருக்கும் பிரச்சனையை நாம் தீர்த்து வைக்கலாம். இதனால் அத்தை மனசு மாறி நம் இருவரையும் ஏற்றுக்கொள்வார் என்றெல்லாம் சொல்ல, மனோஜூம் சரி என்றார். இன்னொரு பக்கம் மீனா, தீபன் இடம் பேசி வர வைத்தார்.

சிறகடிக்க ஆசை:

இன்னொரு பக்கம் ரதியின் வீட்டிற்கு சென்ற மனோஜ், இந்த குழந்தையை கலைத்துவிட்டு. ரதிக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கலாம் என்று ஏடாகூடமாக பேசினார். இதைக் கேட்ட ரதி குடும்பத்தினர் மனோஜை அடித்து கட்டிப்போட்டு வைத்தார்கள். என்ன செய்வதென்றே புரியாமல் ரோகினி அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் மீனா சொன்ன இடத்திற்கு வந்த தீபன், முத்துவை அடி வெளுத்து வாங்கினார். அப்போது தீபன், நான் ரதியை உண்மையாக காதலிக்கிறேன். ஆனால், என்னுடைய வீட்டில் தான் ஒத்துக் கொள்ளவில்லை என்று சொன்னார். இதனால் முத்து, உன்னுடைய அப்பா- அம்மாவை ரதி வீட்டிற்கு வரச்சொல்லி நான் சொல்வதைப் போல் செய் என்று சொன்னார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட் முத்து-மீனா இருவருமே ரதியின் வீட்டிற்கு சென்று ரதி - தீபன் இருக்குடும்பத்தினரையும் பேச வைத்தார்கள். ஆனால், இருவருமே பயங்கரமாக சண்டை போட்டார்கள். ஒரு கட்டத்தில் கோவப்பட்ட முத்து, பேசி முடிவெடுக்கலாம் தேவையில்லாமல் சண்டை போட வேண்டாம் என்று சொன்னார். பின் தீபன்- ரதி இரு குடும்பமே பேசி இருவருக்குமே திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார்கள். அதற்குப்பின் ரதியின் பெற்றோர்கள், முத்துவிற்கு நன்றி சொல்லி மனோஜ் செய்த வேலையை சொன்னார்கள். பின் ரூமில் மனோஜை கட்டிப்போட்டு இருப்பதை பார்த்து முத்து கழட்டி விட்டார். அதோடு ரதி குடும்பத்திடம் மனோஜ் செய்த வேலைக்காக முத்து மன்னிப்பு கேட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜயா என்ன நடக்குமோ என்ற கவலையில் இருக்கிறார். அந்த சமயம் வந்த முத்து, ரதி- தீபன் பிரச்சனை முடிந்தது. ரெண்டு வீட்டையும் வரவைத்து பேசி சமாதானம் செய்து விட்டோம் என்று சொல்கிறார். அதற்கு பின் அண்ணாமலை, எந்த வேலைக்கும் போக வேண்டும் என்று சொல்கிறார். உடனே விஜயா, என்னால் வீட்டில் சும்மா உட்கார்ந்து இருக்க முடியாது என்று சொல்கிறார். அதற்கு முத்து, மீனாவிடம் சென்று பூ கட்டுங்கள் என்று சொன்னவுடன் விஜயா மோசமாக பேசுகிறார். அதற்குப்பின் மனோஜ், ரோகினிக்காக பிட்சா வாங்கி வருகிறார். உடனே ரோகினி, கிரிஷை அழைத்து உட்கார வைத்து சாப்பிட வைக்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதை பார்த்து மீனா அமைதியாக வந்து விடுகிறார். பின் முத்துவிடம் நடந்ததை மீனா சொல்கிறார். இதை எல்லாம் கேட்ட முத்து, பார்லர் அம்மா அந்த அளவுக்கு நல்லவர்கள் கிடையாது. காரியம் எதாவது இருக்கும். அவர் ஏதோ ஒரு பெரிய விஷயத்தை மறைக்கிறார் என்று சொல்கிறார். இதை எல்லாம் ஒளிந்து நின்ற ரோகினி கேட்டு ஷாக் ஆகிறார். இன்னொரு பக்கம் தீபன்- ரதி இரு குடும்பத்தாரின் ஆட்களுமே பார்வதியின் வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு ரதி- தீபன் வீட்டில் இருப்பவர்கள், எங்கள் மனஉளைச்சலுக்கு நஷ்ட ஈடாக 10 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்கிறார்கள். இதைக் கேட்டு பார்வதி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full