தாய் என்றுகூட பார்க்காமல் அசிங்கப்படுத்தும் பார்வதி மகன், அருணுக்கு கிடைத்த ரிவார்ட் - சிறகடிக்க ஆசை

By subhashini · 24/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, தனக்கு தெரிந்தவர்களுக்கெல்லாம் போன் செய்து கிரிஷை தேட சொன்னார். அதற்கு பின் மேனேஜரிடம் இருந்து போன் வந்தது. ரூமிற்கு சென்று ரோகினி பேசினார். அப்போது மேனேஜர், கிரிசை தேடி அலைகிறாயா? உன் மகனை நான் தான் கடத்திருக்கிறேன். 2 லட்சம் பணம் தந்தால்தான் விடுவேன் என்றார். இதனால் ரோகிணி ரொம்பவே பயந்து விட்டார். அதற்குப்பின் மீனா, இது சிந்தாமணி வேலையாக இருக்குமா? என்றார். உடனே விஜயா, அதெல்லாம் கிடையாது. நான் எதுவும் சொல்லவில்லை என்றார். அதற்குப்பின் மீனா, போலீசில் கம்பளைண்ட் கொடுக்கலாம் என்றார். ரோகினி, அதெல்லாம் வேண்டாம் என்று தடுத்து விட்டார்.

மீனாவை தனியாக அழைத்து சென்ற ரோகினி,கிரிஷை மேனேஜர் தினேஷ் கடத்தின விஷயத்தை சொன்னார். பின் தன்னுடைய முழு விவரமும் தினேஷுக்கு தெரியும் என்ற உண்மையையெல்லாம் ரோகிணி சொன்னார். இதை கேட்ட மீனா, வீட்டில் எல்லோரிடமும் உண்மையை சொல் என்றார். ஆனால், ரோகினி முடியாது என்றார். மீனா, நீ மனோஜ் போன் நம்பரை கொடுத்து பணம் கேட்க சொல் என்று ஒரு ஐடியா சொன்னார். அதற்குப் பின் தினேஷ், மனோஜ்க்கு போன் செய்து கிரிஷை கடத்தின விஷயத்தை சொல்லி பணம் கேட்டார். உடனே முத்து, பணம் தருகிறேன். கிரிஷ் இருக்கும் இடத்தைப் பற்றி எல்லாம் கேட்க சொன்னார்.

சிறகடிக்க ஆசை:

அதற்குப்பின் மனோஜ், என்னால் பணம் தர முடியாது. நீ சொன்னதால்தான் சொன்னேன் என்றார். உடனே முத்து, பணத்தை கொடுப்பது போல் அவன் சொன்ன இடத்திற்கு சென்று அவனை பிடித்து விடலாம் என்றெல்லாம் ஐடியா சொன்னார். அதற்கு பின் தினேஷ் சொன்ன இடத்திற்கு மனோஜ் வந்துவிட்டார். முத்து யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொண்டிருந்தார். பின் தினேஷ், அந்த பணத்தை எடுத்துக்கொண்டு போகும் போது முத்து அவனைப் பிடித்து விட்டார். இருந்தாலும் எப்படியோ தினேஷ் தப்பித்து விட்டார். முத்து அவர்களை துரத்திக் கொண்டே வரும்போது அருண் அங்கு வந்தார். உடனே முத்து, நடந்ததை சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அருண், அந்த திருட்டு கும்பலை தேடி செல்கிறார். முத்து கிரிசை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விடுகிறார். ரோகினி- மீனா இருவரும் சந்தோஷப்படுகிறார்கள். பின் முத்து, மனோஜ் நம்பர் எப்படி வந்தது? எதற்காக கிரிஷை கடத்தனும் என்றெல்லாம் சந்தேகப்படுகிறார்.
அதற்கு அண்ணாமலை, எனக்கும் இந்த கேள்விதான் எழுகிறது. இதில் ஏதோ பிரச்சனை இருக்கிறது. நீ சீக்கிரத்தில் அதை கண்டுபிடி என்று சொல்கிறார். உடனே ரோகினி ரொம்பவே பயப்படுகிறார். இன்னொரு பக்கம் அருண் கடத்தல் கும்பலை பிடித்துக் கொடுத்ததால் வேலை செய்யும் இடத்தில் பாராட்டியதை பற்றி வீட்டில் சொல்லி சந்தோஷப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:

சீதா, அருண் அம்மா எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். அதற்குப்பின் வீட்டுக்கு வந்த காவல்துறை அதிகாரிகள், அருணுக்கு பிரமோஷன் தருவதாக சொல்கிறார்கள். இதை கேட்டு அருண் வீட்டில் எல்லோருமே சந்தோசப்படுகிறார்கள். பின் இதைப்பற்றி சத்யா, மீனாவிடம் போன் செய்து சொல்கிறார். ஆனால், முத்துவால் தான் இந்த விஷயம் நடந்தது என்று சொல்லவில்லை. இன்னொரு பக்கம் விஜயா, நீ இந்த சிவனுடன் சேர்ந்து கொண்டு கதை எழுதுவது எனக்கு பிடிக்கவில்லை என்று தீட்டிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து சிவன், கதை எழுதி எடுத்துக்கொண்டு வருகிறார். அப்போது பார்வதியின் மகன் வருகிறார். பார்வதி, தன்னுடைய மகனை அக்கறையோடு விசாரிக்கிறார். ஆனால், பார்வதி மகன் கோபத்தில் சிவனை அதிக சென்று தாய் என்று கூட பார்க்காமல் மோசமாக திட்டி விடுகிறார். இத்தானில் பார்வதி ரொம்பவே எமோஷனலாக அழுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full