பார்வதி சொன்ன வார்த்தையால் ஆடிப்போன விஜயா, வெளுத்து வாங்கிய மீனா - சிறகடிக்க ஆசை

By subhashini · 25/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ், என்னால் பணம் தர முடியாது. நீ சொன்னதால்தான் சொன்னேன் என்றார். உடனே முத்து, பணத்தை கொடுப்பது போல் அவன் சொன்ன இடத்திற்கு சென்று அவனை பிடித்து விடலாம் என்றெல்லாம் ஐடியா சொன்னார். அதற்கு பின் தினேஷ் சொன்ன இடத்திற்கு மனோஜ் வந்துவிட்டார். முத்து யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொண்டிருந்தார். பின் தினேஷ், அந்த பணத்தை எடுத்துக்கொண்டு போகும் போது முத்து அவனைப் பிடித்து விட்டார். இருந்தாலும் எப்படியோ தினேஷ் தப்பித்து விட்டார். முத்து அவர்களை துரத்திக் கொண்டே வரும்போது அருண் அங்கு வந்தார். உடனே முத்து, நடந்ததை சொன்னார்.

அருண், அந்த திருட்டு கும்பலை தேடி சென்றார். முத்து கிரிசை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்டார். பின் முத்து, மனோஜ் நம்பர் எப்படி வந்தது? எதற்காக கிரிஷை கடத்தனும் என்றெல்லாம் சந்தேகப்பட்டார். அதற்கு அண்ணாமலை, எனக்கும் இந்த கேள்விதான் எழுகிறது. இதில் ஏதோ பிரச்சனை இருக்கிறது. நீ சீக்கிரத்தில் அதை கண்டுபிடி என்றார். உடனே ரோகினி ரொம்பவே பயப்பட்டார். இன்னொரு பக்கம் அருண் கடத்தல் கும்பலை பிடித்துக் கொடுத்ததால் வேலை செய்யும் இடத்தில் பாராட்டியதை பற்றி வீட்டில் சொல்லி சந்தோஷப்பட்டார்.

சிறகடிக்க ஆசை:

அதற்குப்பின் வீட்டுக்கு வந்த காவல்துறை அதிகாரிகள், அருணுக்கு பிரமோஷன் தருவதாக சொன்னார்கள். இதை கேட்டு அருண் வீட்டில் எல்லோருமே சந்தோசப்படுகிறார்கள். பின் இதைப்பற்றி சத்யா, மீனாவிடம் சொன்னார். இன்னொரு பக்கம் விஜயா, நீ இந்த சிவனுடன் சேர்ந்து கொண்டு கதை எழுதுவது எனக்கு பிடிக்கவில்லை என்றார். அந்த சமயம் பார்த்து சிவன், கதை எழுதி எடுத்துக்கொண்டு வந்தார். அப்போது பார்வதியின் மகன் வருகிறார். பார்வதி, தன்னுடைய மகனை அக்கறையோடு விசாரிக்கிறார். ஆனால், பார்வதி மகன் கோபத்தில் சிவனை அதிக சென்று தாய் என்று கூட பார்க்காமல் மோசமாக திட்டி விட்டார். இதனால் பார்வதி ரொம்பவே எமோஷனலாக அழுதார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சித்தார்த், இந்த வயசில் உனக்கு இந்த காதல் தேவையா? என்று தன்னுடைய அம்மா என்று கூட பார்க்காமல் மோசமாக திட்டிக் கொண்டிருக்கிறார். உடனே அந்த இடத்திற்கு வந்த முத்து, சித்தார்த்தை திட்டுகிறார். சித்தார்த், இதையெல்லாம் உன்னுடைய அம்மா விஜயா தான் என்று சொன்னது என்றவுடன் பார்வதிக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. சித்தார்த், மீண்டும் மீண்டும் சிவன்- பார்வதி நட்பை ரொம்ப கொச்சைப்படுத்தி பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் கோவப்பட்ட முத்து, சித்தார்த்தை அடித்து விடுகிறார். பின் மீனா, பார்வதி ஆண்டியின் நட்புக்கு நீங்கள் தகுதியானவரே கிடையாது.

சீரியல் ட்ராக்:

இப்படி கேவலமாக நடந்து கொள்வதா? என்று மாமியார் என்று கூட பார்க்காமல் விஜயாவை எதிர்த்து பேசுகிறார். கடைசியில் பார்வதி, என்னைக்கி நீ புரிந்து கொள்கிறாயோ அன்னைக்கு என்னை அம்மா என்று கூப்பிடு. எனக்கு என்னுடைய நட்புதான் முக்கியம் என்று சொல்லிவிடுகிறார். இதனால் சித்தார்த் கிளம்பி விடுகிறார். பின் பார்வதி, என் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறான நட்பு நீதான். நீ இனிமேல் என்னை பார்க்க வராதே. உன்னுடைய கிளாஸ் இங்கு நடத்த வேண்டாம். வெளியே சென்று விடு என்று விஜயாவை திட்டிய அனுப்பி விடுகிறார். வீட்டுக்கு வந்த விஜயா, நடந்ததை சொல்லாமல் முத்து-மீனா என்னுடைய நட்பை பிரித்து விட்டார்கள் என்றெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார். வீட்டில் உள்ள எல்லோருக்குமே குழப்பமாக இருக்கிறது.

behindtalkies AMP · Quick view
View full