கிரிஷை வைத்து விஜயா போடும் நாடகம், மீனா சொன்ன வார்த்தையால் ஆடிப்போன ரோகினி - சிறகடிக்க ஆசை

By subhashini · 10/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, நல்ல ஐடியா தந்தீர்கள். நான் எனக்கே பேய் பிடித்தது போல நடித்து மனோஜுடன் கிரிஸை பேச வைக்கிறேன் என்றார். அதற்கு மீனா, உண்மையை ஒழுங்கு மரியாதையாக வீட்டில் சொல் என்றெல்லாம் புலம்பி விட்டு அங்கிருந்து சென்றார். இன்னொரு பக்கம் நீத்து செய்த வேலையால் சுருதி- ரவிக்கிடையே வாக்குவாதம் நடந்தது. அதற்குப்பின் முத்து-மீனா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது முத்து, கணவன் மனைவிக்குள் ஒளிவு மறைவு இருக்கக்கூடாது என்று போட்டி நடப்பதாக சொன்னார்.

மீனா, எனக்கு போட்டியில் கலந்து கொள்ள விருப்பமில்லை என்றார். இன்னொரு பக்கம் ரோகினி- மனோஜ் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ரோகினி, தன் உடம்பிற்குள் கிரிஷ் அம்மாவின் ஆவி வந்தது போல டிராமா செய்து மனோஜை மிரட்டினார். மனோஜிமே பயந்து கொண்டு ஒரு ஓரமாக உட்கார்ந்து விட்டார். பின் ரோகினி, கிரிஷிடம் அன்பாக பாசமாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் உன்னை சும்மா விட மாட்டேன் என்றார். மனோஜ், பயத்தில் வெளியே சென்று கிரிஷை உட்கார வைத்து சாப்பாடு ஊட்டி விட்டு கொண்டு இருந்தார். இதை பார்த்து வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆனார்கள்.

சிறகடிக்க ஆசை

விஜயா, எதற்காக நீ இந்த வேலை செய்து கொண்டிருக்கிறாய். ஒழுங்கு மரியாதையாக எழுந்து வா என்று திட்டி இருந்தார். ஆனால் மனோஜ் எதுவும் பேசாமல் கிரிஷ் சாப்பாடு ஊட்டி விட்டார். அதற்குப் பின்
மனோஜுடன் தூங்க கிரிஷ் ரூமிற்கு வந்தார். மனோஜ் ஆரம்பத்தில் மறுத்தாலும் கிறிஸ் அம்மாவின் ஆவி வந்துடுமோ என்ற பயத்தில் அங்கேயே கிரிஷை தூங்க சம்மதித்தார். இதை எல்லாம் பார்த்து ரோகினிக்கு சந்தோசமாக இருக்கிறது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் க்ரிஷ், மனோஜின் ஷூவை பாலிஷ் போட்டுக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த முத்து, பயங்கரமாக கோவப்பட்டு மனோஜிடம் சண்டைக்கு போகிறார். மனோஜ், நான் எதுவும் செய்ய சொல்லவில்லை. பின் கிரிஷ், என்னை பள்ளியில் விடுவீர்களா? என்று கேட்கிறார். மனோஜ், முடியாது என்று மறுத்து விடுகிறார். உடனே ரோகிணி பேய் வந்தது பல முறைக்கிறார். பயத்தில் மனோஜ் ஒத்துக் கொள்கிறார். அதற்குபின் பார்வதி-சிவன் இருவருமே முத்து வீட்டிற்கு வருகிறார்கள். அவர்கள் கிரிஷை தத்தெடுத்து வளர்ப்பது தொடர்பாக அண்ணாமலையிடம் கேட்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

மனோஜ், தயவுசெய்து இந்த வீட்டை விட்டு அழைத்து செல்லுங்கள் என்கிறார். உடனே முத்து- மீனா இருவருமே அவனுக்கு பாட்டி இருக்கிறார்கள். அவர்களை மீறி அழைத்துச் செல்ல முடியாது என்று சொல்கிறார்கள். விஜயா வழக்கம் போல மீனாவை திட்டிக் கொண்டிருக்கிறார். ரோகிணியுமே க்ரிஷ் பாட்டியிடம் இதைப் பற்றி பேச வேண்டும் என்று சொல்கிறார். ஆனால், யார் பேச்சையும் விஜயா கேட்கவில்லை. கடைசியில் மீனா, கிரிஷ் இந்த குடும்பத்தை சேர்ந்தவன் என்று சொல்வதை கேட்டு விஜயாவிற்கு ஷாக்காக இருக்கிறது.

behindtalkies AMP · Quick view
View full