வெறுப்பை கொட்டும் விஜயா, முத்து சிறார் ஜெயிலுக்கு சென்ற காரணம் என்ன? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 14/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, க்ரிஷிடம் அந்த சிறுவனின் அப்பா பேசணும் என்று சொல்லி இருந்தார். அதற்கு பிறகு தான் அவர் முடிவெடுப்பாராம் என்றார். இதை ஒளிந்து நின்று கேட்ட ரோகிணி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். அதற்குப்பின் முத்து-மீனா இருவரும் வீட்டுக்கு கிளம்பி விட்டார்கள். இன்னொரு பக்கம் மனோஜ், கிரிஷ் செய்த வேலையை பற்றி வீட்டில் உள்ள எல்லோரிடமே சொன்னார். ரோகினி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

அப்போது மனோஜ், கிரிஷ் இப்படி இருக்க காரணம் முத்து தான். இரண்டு பேரும் ரவுடி தான் ஆக போகிறார்கள் என்று ரொம்ப மோசமாகவும் ஏளனமாகவும் பேசி இருந்தார். இதை கேட்டு முத்துவிற்கு பயங்கர கோபம் வந்து மனோஜின் சட்டையை பிடித்து சண்டைக்கு போனார். அப்போது மனோஜ், நீயும் சீர்திருத்த பள்ளிக்கு போனவ தானே என்று சொல்லி விட்டார். இதனால் முத்து மனமடைந்து நின்றார். உடனே அண்ணாமலை கோபத்தில் மனோஜை அடித்து விட்டார். பின் வீட்டில் உள்ள எல்லோரையுமே திட்டி அனுப்பி விட்டார். மீனா, முத்து வாழ்க்கையில் நடந்ததை பற்றி விசாரித்தார்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் மீனா, உங்கள் வாழ்க்கையில் நடந்தது என்ன? என்று கேட்டார். அதற்கு முத்து, தன்னுடைய ஃபிளாஷ்பேக்கை சொன்னார். அப்போது முத்துவின் சிறு வயதில் விஜயா ஒரு ஜோசியரை சந்தித்து பேசினார். அப்போது ஜோசியர், முத்து உங்களுடன் இருந்தால் உங்கள் வீட்டில் யாராவது உயிருக்கு ஆபத்து வரும். அவர் ஆறு வருடம் உங்களை விட்டு பிரிந்து இருக்கணும். அப்படி இருந்தால் உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும் என்றார். இதை பற்றி விஜயா, அண்ணாமலை இடம் சொன்னார்.

சீரியல் ட்ராக்:

இதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை என்றாலும் விஜயாவின் பயத்திற்காக ஒத்துக் கொண்டார்.
அதற்குப்பின் முத்துவை அழைத்துக் கொண்டு பாட்டியின் வீட்டிற்கு அண்ணாமலை, விஜயா வந்தார்கள். அப்போது நடந்ததை பாட்டியிடம் விஜயா சொன்னார். பாட்டியுமே ஒத்துக் கொண்டார். ஆனால், முத்து தன்னுடைய அம்மாவை விட்டு பிரியா விருப்பம் இல்லாமல் கதறி அழுதார். இருந்தாலும் ஜோசியர் சொன்னதற்காக அங்கிருந்து விஜயா கிளம்பி விட்டார்.

https://www.youtube.com/watch?v=eRR-FIWnkr4

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் முத்துவை அழைத்துப் போக விஜயா, பாட்டி வீட்டுக்கு சென்றார். ஆனால், முத்து நான் யாருடனும் போகமாட்டேன் என்று கோபப்படுகிறார். இதையெல்லாம் பார்த்து விஜயாவுக்கு பயங்கர கடுப்பாகிறது. பின் வீட்டிற்கு வந்த முத்துவை விஜயா கவனித்து கொள்ளவே இல்லை. இதனால் முத்து கோபப்படுகிறார். அதற்குப்பின் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து முத்துவை அழைத்துப் போக வருகிறார்கள். முத்து கதறி அழுந்துமே விஜயா மனம் இறங்கவில்லை. அவனை அழைத்துக் கொண்டு போங்கள் என்று சொல்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full