சிந்தாமணியின் நரி ஆட்டம், மனோஜை அதிரடியாக கைது செய்த போலீஸ் - அனல் பறக்கும் சிறகடிக்க ஆசை

By subhashini · 28/4/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் வீட்டில் எல்லோரும் கையெழுத்து போட்டு கொடுத்தார்கள். அண்ணாமலை, விஜயாவின் கன்னத்திலேயே ஓங்கி அறைந்தார். நீ இவ்வளவு பெரிய துரோகத்தை செய்வாய் என்று நான் நினைக்கவே இல்லை. இந்த வீட்டை மீட்க போவது முத்து-மீனா தான். ஆனால், மனோஜ்க்கு இந்த வீட்டில் இருந்து ஒரு சல்லி பைசா கூட கிடையாது என்றார். இதனால் மனோஜ்க்கு கோவம் தான் வருகிறது. அதற்குப்பின் அண்ணாமலை ரொம்பவே வருத்தத்தில் இருந்தார். விஜயா பேச வருகிறார். அண்ணாமலை எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பினார்.

முத்து-மீனா இருவரும் வீட்டை எப்படி மீட்பது என்று பேசிக் கொண்டிருந்தார்கள். முத்து, இரண்டு பேருமே கஷ்டப்பட்டு சம்பாதித்தால் இந்த பிரச்சனையை முடிந்தவரை முடிக்க பார்க்கலாம் என்றார். மீனாவும் என்னனலாம் செய்யலாம் என்று ஒரு பேப்பரில் எழுதி வைத்தார். பின் இருவரும் தங்களுடைய வீட்டை மீட்டெடுக்க போராடுகிறார்கள். இருவரும் சீக்கிரமாகவே வேலைக்கு கிளம்பி சென்றார்கள். இருவரும் ரொம்பவே கடினமாக உழைத்துக் கொண்டிருந்தார்கள். மீனாவிடம் வேலை செய்பவர்கள் அரசாங்கம் நடத்தும் ஒரு பெரிய பொருட்காட்சிக்கு பூ கொடுக்கும் ஆர்டர் கிடைத்திருக்கிறது.

சிறகடிக்க ஆசை:

அதன் மூலம் நிறைய லாபம் கிடைக்கும் என்று சொன்னார். மீனாவுமே சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் நிறைய வாடகையை எடுத்துக்கொண்டு முத்து சென்றார். இன்னொரு பக்கம் விஜயா, வீட்டை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது மனோஜ், பிரியாணி வாங்கி வந்து தன்னுடைய அம்மாவை சாப்பிட கூப்பிட்டார். கோபத்தில் விஜயா, வீடு என்ன ஆகுமோ என்று தெரியவில்லை. உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பில்லையா என்று மனோஜை அடி விழுது வாங்கினார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சிந்தாமணி, முத்து-மீனாவை நிம்மதியாக வேலை செய்யவிட்டால் அவர்கள் சீக்கிரமாகவே கடனை அடைத்து விடுவார்கள். அதனால் அவர்கள் ஏதாவது ஒரு பிரச்சனையில் சுற்றிக் கொண்டிருக்கணும். மனோஜின் மீது போர்ஜரி கேஸ் போட்டு விடு என்று சொல்கிறார். பைனான்சியர், போலீசில் மனோஜின் மீது போர்ஜரி கேஸ் போட்டு விடுகிறார். முத்து வீட்டுக்கு வந்த போலீஸ், மனோஜை அதிரடியாக கைது செய்கிறார்கள். பைனான்சியர் கொடுத்த புகாரை சொல்கிறார். வீட்டில் எல்லோரும் எடுத்து சொல்லி புரிய வைத்துமே போலீஸ் கேட்கவே இல்லை.

சீரியல் ட்ராக்:

மனோஜை இழுத்துக் கொண்டு செல்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து அண்ணாமலைக்கு பயங்கர கோபம் தான் வருகிறது. விஜயா, தன் மகனின் நிலைமை நினைத்து கஷ்டப்படுகிறார். இதை அறிந்த சிந்தாமணி ரொம்பவே சந்தோஷப்படுகிறார். ரோகிணி, சிந்தாமணியை சந்தித்து எமோஷனலாக ஆழுகிறார். சிந்தாமணி, உனக்காக தான் செய்தேன். நீ பணம் செலவு பண்ணி மனோஜை வெளியே கொண்டு வர முயற்சி செய். அது மனோஜ்க்கு தெரிய வேண்டும். அப்போதுதான் நீங்கள் இருவரும் சேருவீர்கள் என்று ஒன்றுக்கு இரண்டாக ஏற்றி விடுகிறார். இன்னொரு பக்கம் முத்து-மீனா இருவரும் வக்கீலை சந்தித்து மனோஜ் நிலைமையை எடுத்து சொல்லி புரிய வைக்கிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full