அருணின் சுழ்ச்சியால் முத்துவை கைது செய்த போலீஸ், உண்மைக்காக போராடும் மீனா - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து- மீனா இருவரும் எப்படி ஆவது லைசன்ஸ் வாங்க வேண்டும் என்று போராடி இருந்தார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் மனோஜ் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது விஜயாவிடம் மனோஜ், ரோகினி தன்னை பார்க்க கடைக்கு வந்த விஷயத்தை சொன்னவுடன் விஜயா கோபப்பட்டார். பின் விஜயா, எதற்காக கடைக்கு போனாய்? இனிமேல் அவனை பார்க்க சென்றால் நடப்பதே வேறு என்று ரோகினியை திட்டி விட்டார். பின் ரோகினி, நம்முடைய விஷயத்தை எதற்காக உன் அம்மாவிடம் சொல்கிறாய். நமக்கென்று ஒரு பர்சனல் இருக்காது.
எனக்காக சப்போர்ட் செய்ய மாட்டாயா? என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். ஆனால், மனோஜ் அதை பற்றி எல்லாம் கேட்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இதனால் ரோகினி, அந்த இடத்தை விட்டு சென்று விட்டார். இன்னொரு பக்கம் முத்து அவருடைய நண்பர்கள் சரக்கு வாங்கி கொடுத்து அவரை குடிக்க வைத்தார்கள். பின் குடித்துவிட்டு முத்துவை அருண் வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். அங்கு முத்துவின் நண்பர்கள் கல் எடுத்து அருண் வீட்டின் முன்பு அடித்தார்கள். இதையெல்லாம் பார்த்து அருண் மொபைலில் ரெக்கார்ட் செய்தார். பின் வெளியே வந்த அருண், முத்துவிடம் பேசி இருந்தார். முத்து-அருண் இடையே கோபமாக வாக்குவாதம் நடக்குது. இதையெல்லாமே முத்து வாக்குவாதம் செய்தார்கள்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் அருண், இங்கிருந்து கிளம்பவில்லை என்றால் போலீஸ் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார்கள் என்று மிரட்டி இருந்தார். வேறு வழியில்லாமல் முத்து தன்னுடைய நண்பர்களை அழைத்துக் கொண்டு சென்று விட்டார். இதையெல்லாம் தூரமாக நின்று பார்த்த சத்யா, மீனாவிற்கு போன் செய்து தகவல் சொன்னார். பின் முத்து வீட்டுக்கு குடித்து வந்ததை பார்த்த மீனா பயங்கரமாக சண்டை போட்டார். பிரச்சனை இருந்தால் குடிப்பது தான் தீர்வா? என்றெல்லாம் கோபப்பட்டார். ஆனால், முத்து வேதனையில் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார்.
நேற்று எபிசோட்:
மறுநாள் காலையில் முத்து, வீட்டு வேலையெல்லாம் செய்தார். இதை பார்த்த விஜயா ரொம்ப சந்தோஷப்பட்டு முத்துவை ஏளனம் செய்தார். இதனால் கோபத்தில் மீனா முத்துவைத் திட்டி இருந்தார்.
இதை பார்த்த விஜயா, ஷாக்காகி அமைதியாகி விட்டார். அதற்குப்பின் சிட்டி, ரோகினியை போன் செய்து வரவைத்தார். அப்போது சிட்டி, என்னிடம் ரொம்ப பழமையான நகை இருக்கு. இதன் மதிப்பு 3 லட்சம். ஆனால், எனக்கு ஒரு லட்சத்திற்கு தந்தார்கள். இதை நீங்கள் வாங்கி கொள்ளுங்கள். நீங்கள் செய்த உதவிக்கு தான் தருகிறேன். பணம் பொறுமையாக தாருங்கள் என்று சொன்னார். ரோகினியும் நம்பி விட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரி வீட்டிற்கு சென்று இருக்கிறார் மீனா. அஅங்கு அவர், உன் கணவன் குடித்துவிட்டு அருண் வீட்டின் முன்பு கல் எடுத்து அடித்து தகராறு செய்திருக்கிறார். இதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று முத்துவை திட்டுகிறார். பின் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த மீனா, அங்கு ஒரு போலீஸ் அதிகாரிக்கு தன் கணவரின் காரை ஓட்டி சென்று தான் அடிபட்டது என்ற உண்மை தெரிகிறது. பின் மீனா, அவரிடம் கெஞ்சி கேட்டு,அழுது புலம்பி உண்மையைக் கேட்கிறார். ஆனால், அவர் கீழே விழுந்ததாக பொய் சொல்கிறார். அதற்கு பின் வெளியே மீனா, கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு உதவி செய்கிறார். இதை அந்த போலீஸ் பார்க்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் முத்துவை போலீஸ் அழைத்து வருகிறார்கள். மீனாவை போலீஸ் ஸ்டேஷனில் முத்து பார்த்தவுடன் கோபப்படுகிறார். பின் அந்த அதிகாரி, நீ அருண் வீட்டிலேயே கல் அடித்து பிரச்சனை செய்வாயா? என்று சொல்லி முத்துவை கைது செய்ய சொல்கிறார்கள். உடனே மீனா, போலீசிடமும் கெஞ்சி கதறுகிறார். அப்போது மனம் தாங்காமல் அந்த கையில் அடிபட்ட போலீஸ், உண்மையிலேயே வண்டியில் பிரேக் பிடிக்கவில்லை. அதன் மூலம் தான் எனக்கு அடிபட்டது என்று சொல்கிறார். அருண் வேண்டாம் என்று கண்ணால் சைகை பண்ணுகிறார். ஆனால், அந்த போலீஸ் கேட்காமல் உண்மையை சொல்லி விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.