ரோகினி போட்ட திருட்டு பழியால் மனோஜுக்கு ராஜா, ராணி ஜோடி வைத்த ஆப்பு - பரபரப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினியின் தோழி, என்னுடைய மகன் செருப்பு தான் என்று சொல்லி சமாளித்து விட்டார். அதற்குப்பின் வித்யா, எத்தனை நாட்கள் தான் இப்படி பொய் சொல்லப் போகிறாய். தயவு செய்து உண்மையை சொல் என்றார். இதனால் கோபப்பட்டு ரோகினி, வித்யாவை திட்டினார். அதற்குப்பின் வித்யாவின் வீட்டிற்கு நோட்டீஸ் கொடுக்க விஜயா வருவதை பார்த்து மீண்டும் ரோகினி, கிரிஷ் இருவருமே ஒளிந்து கொண்டார்கள். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த முத்து, விஜயாவின் யோகா கிளாஸ் பற்றி எல்லோரிடமே சொல்லி சந்தோஷப்பட்டார்.
எல்லோருமே யோகாவை பதறி கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். அதற்கு விஜயாவுமே ஏதேதோ பதில் சொல்லி சமாளித்தார். அதன் பின் விஜயா நோட்டீஸ் கொடுத்திருக்கும்போது லட்சுமியை பார்த்திருந்தார். விஜயா அவரிடம் பேச போவதற்குள் அவர் சென்று விடுகிறார். அதைப்பற்றி மீனாவிடம் விஜயா சொல்ல, ரோகினி ஷாக் ஆனார். அதற்குப் பின் ரோகினி, வித்யாவிற்கு போன் செய்து என் அம்மா வந்தால் தயவு செய்து எனக்கு போன் செய். கிரிஷை பத்திரமாக பார்த்துக் கொள் என்றெல்லாம் சொன்னார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் கிரிஷ் பாட்டி வீட்டிற்கு முத்து-மீனா சென்று இருந்தார்கள். ஆனால், அங்கு வீட்டை காலி செய்து விட்டதாக ஓனர் சொன்னார். அதோடு அந்தப் பையனை அழைத்துக் கொண்டு அவருடைய அம்மா சாப்பிட போவதாக சொன்னார். உடனே முத்து-மீனா இருவருமே அந்த ஹோட்டலுக்கு போனார்கள். அதற்குள் கிரிஷ்- ரோகினி இருவரும் சென்று விட்டார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் தங்களுடைய புது ரெஸ்டாரண்டை திறப்பதற்கான கார்டை ஸ்ருதி, அண்ணாமலையிடம் காண்பித்தார். அதற்குப்பின் வீட்டில் உள்ள எல்லோரிடமும் கார்டை கொடுத்து ஸ்ருதி அழைத்தார்.
நேற்று எபிசோட்:
மறுநாள் காலையில் முத்து, தன் மாமியாரிடம் பணம் கொடுக்க சொல்லி இருந்தார். பின் மீனா, அருண் வீட்டிற்கு போனார். அப்பொழுது மீனா, தன்னுடைய அம்மாவிடம் பணத்தை கொடுத்தார். இதையெல்லாம் பார்த்து கடுப்பான அருண், எதற்கு தேவையில்லாமல் செய்கிறீர்கள்? நான் பார்த்துக் கொள்ள மாட்டேனா, என்னை அசிங்கப்படுத்துகிறீர்களா? என்று முத்து மீது இருந்த கோபத்தை மீனா மீது காண்பித்தார். மீனாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. உடனே அருண் அம்மா, அவருடைய மருமகன் கொடுத்தார். இதில் என்ன பிரச்சனை என்று சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அருண், முத்து பணத்தை வாங்க கூடாது என்று சொல்வதால் மீனாவின் அம்மாவும் எதுவும் சொல்லாமல் பணத்தைக் கொடுத்து விடுகிறார். மீனாவும் அமைதியாக வந்து விடுகிறார். அதற்குப்பின் மீனா, அருண் வீட்டில் நடந்ததை சொல்ல, முத்து அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை. இதனால் மீனா, முத்துவை நினைத்து ரொம்ப பெருமைப்படுகிறார். இன்னொரு பக்கம் ரெஸ்டாரன்ட் திறப்பதற்காக அழைப்பிதழ் கார்டை நீத்து, ரவிக்கு கொடுக்கிறார் ஸ்ருதி. இதை பார்த்து நீத்துக்கு பெரிய ஷாக். உடனே ரவி, எதற்காக இப்படி எல்லாம் செய்து கொண்டிருக்கிறாய். கொஞ்சம் அமைதியாக இரு, பார்த்து கொள்ளலாம் என்கிறார். அதற்கு சுருதி, உன்னிடம் சொல்லி தான் எல்லாம் செய்தேன்.
சீரியல் ட்ராக்:
ஹோட்டலுக்கு நீதான் செப் என்று கேட்டார். அதற்கு ரவி முடியாது என்று மறுக்கிறார். இதையெல்லாம் பார்த்த நீத்து, ரவியை இந்த ஓட்டலை விட்டு அனுப்பக்கூடாது. அதற்கு ஏதாவது திட்டம் போடணும் என்று யோசிக்கிறார். இன்னொரு பக்கம் ராஜா- ராணி இதுவருமே தன்னுடைய வக்கீலுடன் வந்து மனோஜிடம் பேசுகிறார்கள். அப்போது வக்கீல், நீங்கள் ராணி இடம் தவறாக நடந்து கொண்டதற்காக போலீசில் புகார் கொடுப்பேன் என்று மிரட்டுகிறார். ரோகினி, மனோஜ்காக சப்போர்ட் செய்து பேசுகிறார். ஆனால், அந்த வக்கீல் கேட்கவே இல்லை. நீங்கள் அவர்கள் மீது போட்ட திருட்டுப்பழிக்கு பணத்தை கொடுத்து விடுங்கள். ஆதாரத்தை கோட்டில் காண்பிப்பேன் என்றெல்லாம் மிரட்டுகிறார். இதனால் வேறு வழி இல்லாமல் ரோகினி- மனோஜ் இருவரும் தவணை முறையில் பணம் தருவதாக ஒத்து கொள்கிறார்கள். பின் ரோகினி கிரிஷை வேறொரு புது ஸ்கூலில் சேர்த்து விடப் போகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது