ரோகினி செய்ய வேலையால் போலீசிடம் மாட்டிக் கொண்ட முத்து, அடுத்து என்ன? சிறகடிக்க ஆசை

By subhashini · 31/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா என்ன நடக்குமோ என்ற கவலையில் இருந்தார். அந்த சமயம் வந்த முத்து, ரதி- தீபன் பிரச்சனை முடிந்தது. ரெண்டு வீட்டையும் வரவைத்து பேசி சமாதானம் செய்து விட்டோம் என்று சொன்னார். அதற்கு பின் அண்ணாமலை, எந்த வேலைக்கும் போக வேண்டும் என்று சொன்னார். உடனே விஜயா, என்னால் வீட்டில் சும்மா உட்கார்ந்து இருக்க முடியாது என்று சொன்னார். அதற்கு முத்து, மீனாவிடம் சென்று பூ கட்டுங்கள் என்று சொன்னவுடன் விஜயா மோசமாக பேசினார். அதற்குப்பின் மனோஜ், ரோகினிக்காக பிட்சா வாங்கி வந்தார். உடனே ரோகினி, கிரிஷை அழைத்து உட்கார வைத்து சாப்பிட வைத்தார்.

அதை பார்த்து மீனா அமைதியாக வந்து விட்டார். பின் முத்துவிடம் நடந்ததை மீனா சொன்னார். இதை எல்லாம் கேட்ட முத்து, பார்லர் அம்மா அந்த அளவுக்கு நல்லவர்கள் கிடையாது. காரியம் எதாவது இருக்கும். அவர் ஏதோ ஒரு பெரிய விஷயத்தை மறைக்கிறார் என்று சொன்னார். இதை எல்லாம் ஒளிந்து நின்ற ரோகினி கேட்டு ஷாக் ஆனார். இன்னொரு பக்கம் தீபன்- ரதி இரு குடும்பத்தாரின் ஆட்களுமே பார்வதியின் வீட்டிற்கு சென்றார்கள். அங்கு ரதி- தீபன் வீட்டில் இருப்பவர்கள், எங்கள் மனஉளைச்சலுக்கு நஷ்ட ஈடாக 10 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்றார்கள். இதைக் கேட்டு பார்வதி அதிர்ச்சி அடைந்தார்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் கிரிஷ் வீட்டில் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது விஜயா, கிரிஷை ரொம்ப மோசமாக திட்டினார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே விஜயாவை திட்டினார்கள். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்து பார்வதி, ரதி- தீபன் வீட்டில் 10 லட்சம் ரூபாய் பணம் கேட்கும் விஷயத்தை சொன்னார். இதனால் விஜயா ஷாக் ஆனார். உடனே முத்து, மனோஜ் செய்த வேலையால் தான் அவர்கள் பணம் கேட்கிறார்கள் என்று நடந்த எல்லாவற்றையும் சொன்னார். மனோஜால் தான் இந்த பிரச்சனை. அவர் தான் பணம் கொடுக்கணும் என்று சொன்னார். உடனே மனோஜ், ரோகினியால் தான் நான் அப்படி சொன்னேன் என்றார். அதற்கு விஜயா, நீதான் மொத்த பணத்தையும் கொடுக்க வேண்டும்.

நேற்று எபிசோட்:

நான் உன்னை மன்னிக்கணும் என்றால் அந்த பணத்தை கொடு என்று சொன்னார். ரோகினி முடியாது என்று சொல்லி விஜயா கேட்கவில்லை. அதற்குப்பின் மாடியில் மனோஜ், இந்த பிரச்சனையில் இருந்து எப்படியாவது காப்பாற்று. நீ சொல்வதை செய்கிறேன் என்று கேட்டார். முத்துவுமே சம்மதித்தார். இன்னொரு பக்கம் கிச்சனில் ரோகினி பணத்தை எப்படி வெளிப்படுவது என்று தெரியாமல் புலம்பி கொண்டிருந்தார். மீனா, ஸ்ருதி இருவருமே ரோகினி செய்த தவறை சொல்லி ஆறுதல் சொன்னார்கள். அந்த சமயம் வந்த விஜயா வழக்கம்போல் ரோகினி, மீனாவை திட்டிக் கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோடில் சிட்டிக்கு போன் செய்த ரோகினி, ரதி- தீபன் விஷயத்தைப் பற்றி சொல்லி
உதவி கேட்கிறார். அதற்கு சிட்டி, எனக்கு ஏசி, பிரிட்ஜ் வேண்டும். சும்மா எல்லாம் வேலை செய்ய முடியாது என்று சொல்வதால் ரோகினியுமே ஒத்துக்கொள்கிறார். மறுநாள் காலையில் ரோகினி, எனக்கு தெரிந்த ஒருவரின் மூலம் தீபன் வீட்டில் பேச சொல்லி இருக்கிறேன் என்று மனோஜிடம் சொல்கிறார். அப்போது பிசினஸ் டெவலப்பாக ராணி, ராஜா இருவருமே சேர்ந்து மனோஜ்க்கு ஐடியா கொடுக்கிறார்கள். அதற்கு ரோகினியும் சம்மதிக்கிறார். இன்னொரு பக்கம் தீபன் வீட்டிற்கு சென்ற முத்து, பணமெல்லாம் கொடுக்க முடியாது.

சீரியல் ட்ராக்:

உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்கள் என்று சொல்கிறார். இதைக் கேட்ட தீபன் வீட்டில் உள்ளவர்கள் ரொம்ப மோசமாக பேசி திட்டுகிறார்கள். கோபத்தில் முத்துவுமே திட்டி விட்டு வருகிறார். இதை பார்த்து சிட்டியின் ஆட்கள் முத்துவின் பெயரை சொல்லி தீபன் குடும்பத்தை அடித்து போட்டு அடித்து விடுகிறார்கள். இது தெரியாமல் வீட்டிற்கு வந்த முத்து, தீபன் வீட்டில் பேசிவிட்டேன். பணமெல்லாம் கொடுக்கத் தேவையில்லை. நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்கிறார். அந்த சமயம் பார்த்து வீட்டுக்கு வந்த போலீஸ் முத்துவை கைது செய்கிறார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே பதிக்கிறார்கள். அப்போது போலீஸ், முத்து அடியாட்களை வைத்து தான் தீபன் வீட்டில் பிரச்சனை செய்திருக்கிறார் என்று சொல்கிறார்கள். முத்து நான் எந்த தவறும் செய்யவில்லை என்று சொல்கிறார். ஆனால், போலீஸ் கேட்கவே இல்லை.

behindtalkies AMP · Quick view
View full