ஸ்ருதி அம்மா செய்த வேலையால் ரவியிடம் கலாட்டா செய்யும் ரவுடிகள், கொந்தளித்த முத்து - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் செல்வம் தன்னுடைய மச்சான் உடன் பைக்கில் வந்து கொண்டிருந்தார். ஹெல்மெட் போடாததால் அருண், முத்து மீது இருந்த கோபத்தில் செல்வத்தையும் அவருடைய மச்சானையும் ரொம்ப மோசமாக நடத்தினார். அதோடு முத்துவை அந்த இடத்திற்கு வர வைக்க சொன்னார். இன்னொரு பக்கம் மீனா, லட்சுமியை பார்த்து பேசினார். அப்போது லட்சுமி, கிரிஷை அவருடைய அம்மா அழைத்து சென்று விட்டார். நீங்கள் எனக்காக செய்த உதவிக்கு நன்றி. என்னை மன்னித்து விடுங்கள் என்று அங்கிருந்து சென்று விட்டார். பின் வீட்டிற்கு வந்த மீனா, லட்சுமியை சந்தித்த விஷயத்தை பற்றி எல்லோரிடமும் சொன்னார்.
மீனா, கிரிஷ் அம்மா துபாய் எல்லாம் போகவில்லை. இங்குதான் எங்கேயோ இருக்கிறார். நம்மிடம் இருந்து கிரிஸ் பாட்டி மறைக்கிறார் என்று சொல்கிறார். உடனே விஜயா, யார் எங்கு போனால் என்ன? அவர்அவர் வேலையை பாருங்கள் என்று திட்டி விட்டு செல்கிறார். அதற்குப்பின் முத்து, சீக்கிரமாகவே கிரிஷிற்கு பின்னால் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கலாம் என்கிறார். இதை எல்லாம் கேட்டு ரோகினி அமைதியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் அருண் தன்னுடைய மச்சானை அடித்ததை நினைத்து செல்வம் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
சிறகடிக்க ஆசை:
பின் இதைப்பற்றி முத்துவிடம் சொல்ல வேண்டாம் என்று செல்வம் தன்னுடைய நண்பர்களிடம் சொன்னார். அந்த சமயம் வந்த முத்து, செல்வத்திடம் பேசினார். பின் செல்வத்திற்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை முத்து அறிந்துகொண்டு விசாரித்தார். உடனே செல்வத்தின் நண்பர்கள், நடந்த விஷயத்தை சொன்னார்கள். இன்னொரு பக்கம் அருண், உன் மாமாவின் நண்பன் செல்வம் ஹெல்மெட் போடாமல் லஞ்சம் கொடுத்து மரியாதை இல்லாமல் நடந்து கொண்டார் என்று ஒரு கதையை சொல்ல, இதை சீதாவும் நம்பி விட்டார்.
நேற்று எபிசோட்:
பின் ஹாஸ்பிடலில் இருக்கும் சீதாவை சந்தித்த முத்து, அருணிற்கு கோபம் என்றால் என்னிடம் காண்பிக்க சொல். செல்வம் தவறு செய்தால் அதற்கு சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கணுமோ அதை எடுக்க சொல். தேவையில்லாமல் அடிக்க வேண்டாம் என்று சொன்னார். இதற்கு சீதா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் க்ரிஷ் ஒழுங்காக சாப்பிடவில்லை அடம்பிடிக்கிறார் என்று ஸ்கூலில் இருந்து போன் செய்தார்கள். இதனால் கோபப்பட்ட ரோகினி, நீ இப்படியே சொல்பேச்சை கேட்கவில்லை என்றால் நானும் எங்காவது போய் விடுவேன் என்று சொன்னார். இதனால் பயந்து போன கிரிஷ், நான் சாப்பிடுகிறேன் ஒழுங்காக இருக்கிறேன் என்று சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரோகினிக்கு தலை வலிக்கிறது என்று மனோஜ் தைலம் தேடி பார்க்கிறார். இதை பார்த்த விஜயா வழக்கம்போல் என்ன நடந்தது என்று விசாரிக்காமல் ரோகிணியை திட்டி விட்டு செல்கிறார். இன்னொரு பக்கம் ரவி வேலை செய்யும் ஹோட்டலில் சில ரவுடிகள் குடித்துக்கொண்டு பிரச்சனை செய்கிறார்கள். ரவி சொல்லியும் அவர்கள் திமிராக பேசுகிறார்கள். இதனால் முத்துவை ரவி வரவைக்கிறார். முத்து, அந்த ரவுடிகளை வெளுத்து வாங்க, அந்த ரவுடிகள் ஸ்ருதி அம்மா சொல்லி தான் இதை எல்லாம் செய்தோம் என்கிறார்கள். கோபத்தில் ரவி, எதற்காக உன் அம்மா இப்படி எல்லாம் செய்தார்கள்? என்று நடந்ததை சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
ஸ்ருதி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் என் அம்மாவிடம் கேள் என்கிறார். பின் மீனாவும் ரவிக்காக சப்போர்ட் செய்து ஸ்ருதியிடம் பேசுகிறார். இன்னொரு பக்கம் கிரிஷ் படிக்கும் ஸ்கூலில் இருந்து சில ஆசிரியர்கள் பொருள் வாங்குவதற்காக மனோஜ் கடைக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் மனோஜிடம் நன்றாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அந்த ஆசிரியர், மனோஜை சிறப்பு விருந்தினராக தங்கள் பள்ளிக்கு அழைக்கிறார். அதற்குப்பின் தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்ற சுருதி, ரவி ஹோட்டலில் நடந்த விஷயத்தை பற்றி கேட்கிறார். அதற்கு ஸ்ருதி அம்மா, நீத்து சரியில்லை. ரவியை உன்னிடம் கொண்டு வந்து சேர்க்க தான் இப்படியெல்லாம் செய்தேன் என்கிறார். சுருதி, நீ செய்த வினையால் என் வாழ்க்கையே போய்விடும் போல இருக்கிறது என்று கோபப்பட்டு கத்துகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது