ஸ்ருதி அம்மாவால் முத்து வீட்டில் வெடிக்கும் கலவரம், ரவி என்ன செய்யப் போகிறார்? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் மனோஜை ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். அப்போது மீனா ஆரத்தி எடுக்க வந்தார். உடனே விஜயா, அதை வாங்கி மனோஜிற்கு ஆரத்தி எடுத்தார். இன்னொரு பக்கம் ஸ்ருதி ஹோட்டலில் வேலை செய்வதை பார்த்து அவருடைய அம்மா பயங்கரமாக சண்டை போட்டார். முத்து குடும்பத்தையும், ரவியையும் மோசமாக திட்டி இருந்தார். ஆனால், ஸ்ருதி எவ்வளவோ எடுத்துச் சொல்லியுமே அவர் அம்மா கேட்கவில்லை. அந்த சமயம் பார்த்து வந்த ரவியையும் திட்டி விட்டு சென்றார். இதனால் சுருதி-ரவி இடையே வாக்குவாதம் நடந்தது.
பின் முத்து, ஹாஸ்பிடலில் மனோஜ்க்கு செய்த செலவு லிஸ்ட்டை அண்ணாமலையிடம் கொடுத்தார். உடனே விஜயா, எதற்காக கொடுக்கனும்? கணக்கு பார்க்கிறாயா? என்று கேட்டார். அதற்கு அண்ணாமலை, முத்து-மீனா இருவரும் கடன் வாங்கி கொடுத்திருந்தார்கள். உங்களுடைய செலவை நீங்கள் தானே பார்க்கணும் என்று சொன்னவுடன் ரோகினி சம்மதித்தார். ஆனால், மனோஜ்-விஜயா இருவரும் ஏளனமாக பேசி இருந்தார்கள். இதனால் மீனாவிற்கு கோபம் வந்தது. கடைசியில் அண்ணாமலை, மனோஜை திட்டினார். ஆனால், விஜயா, முத்து-மீனாவை தான் திட்டிக் கொண்டிருந்தார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் ஸ்ருதியின் அம்மா, அண்ணாமலை வீட்டிற்கு வந்து ருத்ர தாண்டவம் ஆடினார். உங்களுக்கு பணம் தேவை என்றால் என்னிடம் சொல்லுங்கள். என் மகளை இரண்டு வேலை செய்ய சொல்லி கஷ்டப்படுத்தாதீர்கள் என்று ரொம்ப மோசமாக அண்ணாமலை குடும்பத்தை பேசி இருந்தார். இதையெல்லாம் கேட்ட முத்து, மீனாவால் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவரிடம் சண்டைக்கு போனார்கள். பின் ஸ்ருதி அம்மா, உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ? எழுதிக் கொள்ளுங்கள். என் மகளை வேலைக்கு அனுப்பக்கூடாது என்று செக் கொடுத்தார்.
நேற்று எபிசோட்:
உடனே முத்து, 50 கோடி செக்கில் எழுத, சுருதி அம்மா ரொம்ப பயந்துவிட்டு செக்கை வாங்கி இருந்தார். அதற்கு முத்து, உங்கள் வாய்க்கு வந்ததெல்லாம் பேச வேண்டாம். உங்கள் பணம் எங்களுக்கு தேவையில்லை என்று செக்கை கிழித்து போட்டார். அதற்கு பின் சுருதி அம்மா, ரவிக்கு ரெஸ்டாரண்ட் வைத்து தருகிறோம் என்றவுடன், எதுவாக இருந்தாலும் சுருதி- ரவி முடிவு என்றார் அண்ணாமலை. இன்னொரு பக்கம் கோவிலில் வித்யாவிடம் தன்னுடைய காதலை சொல்ல முருகன் ரொம்பவே தவித்தார். அதேபோல் அருண்-சீதா இருவரும் கோவிலுக்கு வந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் அருண், என்னுடைய காதலுக்கு எப்போது பதில் சொல்வீர்கள் என்று கேட்க, கொஞ்சம் டைம் ஆகும். உங்களால் காத்திருக்க முடியாதா? என்று சீதா கேட்கிறார். அதற்கு அருண், கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்கள் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் மீனா-முத்து இருவரும் பவானியின் வீட்டிற்கு சென்று திருமண வேலைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது திருமணத்திற்காகும் செலவை பவானி அப்பா கணக்கு போடுகிறார். அதற்குப் பின் வீட்டிற்கு வந்த ஸ்ருதி ரவியிடம் முத்து நடந்ததை சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
உடனே விஜயா, உன் மாமியார் ரெஸ்டாரன்ட் வைத்து தருகிறார். யோசித்து முடிவெடு என்று சொன்னவுடன் ரவி, நான் சொந்தமாக சம்பாதித்து தான் ரெஸ்டாரன்ட் தொடங்கினேன். யாருடைய பணமும் தேவையில்லை என்று கோபப்படுகிறார். உடனே சுருதி, என் அப்பா தந்தால் என்ன பிரச்சனை என்று கேட்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகின்றது. இதை பார்த்து விஜயா சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் முத்து, ரவி, மனோஜ் மூவரும் மாடியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது முத்து, நீ எதுவாக இருந்தாலும் யோசித்து முடிவெடு. யார் பேச்சையும் கேட்காதே என்று சொன்னவுடன் மனோஜ், முத்துவுக்கு எதிராகவே பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.