முத்துவை அவமானப்படுத்திய அருண், ஸ்ருதி அப்பாவிடம் ரவி வைத்த கண்டிஷன் - சிறகடிக்க ஆசை

By subhashini · 3/2/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரவி, முத்துவின் சட்டையை பிடித்து சண்டைக்கு போனார். வீட்டில் உள்ள எல்லோருமே ரவியை தடுத்தார்கள். இருந்தாலும் கோபத்தில் ரவி, முத்துவை திட்டி நடந்தது எல்லாம் சொன்னார். முத்து, நான் எதுவும் செய்யவில்லை என்றார். இருந்தாலும் ரவி கேட்கவில்லை. அண்ணாமலை, மீனா இருவரும் முத்துவை நம்புகிறார்கள். இதை யார் செய்தது? என்று கண்டுபிடிக்கணும் முத்து-மீனா இருவரும் பேசிக்கொண்டார்கள். இன்னொரு பக்கம் தனக்கு கிடைத்த புது ஆர்டரை ரோகினி, மனோஜிடம் பேசி இருந்தார்.

ஸ்ருதியை சந்தித்த மீனா, நீத்துவுக்கு நடந்ததை எல்லாம் சொன்னார். ஸ்ருதியின் அப்பா, அம்மா இருவரும் முத்து தான் இதை செய்திருப்பான் என்றார்கள். மீனா, அதெல்லாம் இல்லை. யாரோ செய்த வேலை என் கணவர் மீது பழி வந்து விட்டது என்றார். சுருதியும் மீனா சொல்வதை நம்புகிறார். இன்னொரு பக்கம் முத்து, செல்வம் இந்த வேலையை செய்திருப்பானா? என்று விசாரித்தார். இதனால் செல்வம் கோபப்பட்டு முத்துவிடம் சண்டைக்கு போனார். செல்வம், நீதான் இதெல்லாம் செய்வாய் என்று சொல்லி இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி செல்வம் அங்கிருந்து கிளம்பி விட்டார்.

சிறகடிக்க ஆசை:

பின்வரும் வழியில் அருணின் அம்மா மீது செல்வம் காரை மோதி விட்டார். அருணின் அம்மா இறந்து விட்டார். இதை மீனா பார்த்துவிட்டு பதறிப் போய் கத்துகிறார். அங்கிருந்தவர்கள் செல்வத்தை அடித்தார்கள். பின் மீனா, முத்து- சீதாவிற்கு நடந்ததை சொன்னார். பின் அருணின் வீட்டில் எல்லோருமே இரங்கலை தெரிவித்து சென்றார்கள். அருண் தன் அம்மா இறந்த சோகத்தில் இருக்கிறார். அந்த சமயம் பார்த்து முத்து வந்தார். கோபத்தில் அருண், முத்துவை திட்டி வெளியே தள்ளினார். தன் அம்மாவின் இறப்புக்கு முத்து தான் காரணம் என்று அருண் சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அருண், இவனால் தான் என் அம்மா இறந்துவிட்டார். அவன் என் அம்மாவை பார்க்க கூடாது என்று பிரச்சனை செய்கிறார். எல்லோரும் எடுத்துச் சொல்லியும் அருண் கேட்கவில்லை. இதனால் முத்து பிரச்சனை வேண்டாம் என்று அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
இன்னொரு பக்கம் ஸ்ருதியின் வீட்டிற்கு வந்த இரண்டு ரவுடிகள், கடையையும் நீத்துவையும் அடித்த விஷயத்தை பற்றி பேசுகிறார்கள். தன் அப்பா தான் இந்த வேலையை செய்தது என்று அறிந்த சுருதி கோபப்பட்டு தன்னுடைய அப்பாவிடம் சண்டை போடுகிறார். செல்வத்தின் மனைவி, குழந்தை இருவரும் முத்துவை சந்தித்து பேசுகிறார்கள். முத்துவும் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைக்கிறார்.

சீரியல் ட்ராக்:

அந்த சமயம் பார்த்து மீனாவிற்கு போன் செய்த ஸ்ருதி, தன் அப்பா செய்த வேலையை எல்லாம் செல்கிறார். பின் வீட்டில் மீனா, சுருதியின் அப்பா செய்த கேவலமான காரியத்தை சொல்கிறார். இதனால் விஜயாவால் எதுவுமே பேச முடியவில்லை. இன்னொரு பக்கம் உண்மை அறிந்த ரவி, சுருதியின் வீட்டிற்கு சென்று அவருடைய அப்பா- அம்மா இருவரிடம் சண்டை போடுகிறார். அது மட்டும் இல்லாமல் கடையை அடித்து நொறுக்கியதற்கும், நீத்துவின் காலை உடைத்ததற்கும் ஒன்பது லட்சம் செலவாகி இருக்கிறது. அது நீங்கள் தான் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். ஸ்ருதியின் அப்பாவால் எதுவுமே பேச முடியவில்லை.

behindtalkies AMP · Quick view
View full