சத்யாவை சிக்க வைக்க சிந்தாமணி போடும் திட்டம், விஜயாவிடம் அசிங்கப்பட்ட ரோகினி - சிறகடிக்க ஆசை

சத்யாவை சிக்க வைக்க சிந்தாமணி போடும் திட்டம்

By subhashini · 9/6/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகிணியும் விஜயா பேசுவதை தாங்க முடியாமல் கோபப்பட்டார். ஒரு கட்டத்தில் விஜயா, ரோகினியை திட்டி போனை வைத்துவிட்டு மனோஜ்க்கு வார்னிங் கொடுத்தார். அது மட்டும் இல்லாமல் ரோகிணியுடன் சேர்ந்து எங்கும் போகக்கூடாது, பேசக்கூடாது என்றெல்லாம் விஜயா கண்டிஷன் போட்டார். மனோஜ் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் ரேகாவிடம் பேச முடியாததால் சத்யா கவலையில் இருந்தார். மீனா, இந்த காதல் தேவை இல்லை. தயவு செய்து உன்னுடைய வேலையை பார் என்றார். மீனாவின் அம்மாவும் சத்யாவை திட்டி அறிவுரை சொன்னார்.

மீனாவும் அவருடைய அம்மாவும் சத்யாவின் காதலுக்கு எதிராக நின்றார்கள். ரேகாவை மறக்க சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். சத்யவால் எதுவுமே பேச முடியவில்லை. பின் இதைப்பற்றி சத்யா, முத்துவிடம் சொன்னார். முத்து, எதுவாக இருந்தாலும் நான் உனக்கு துணையாக இருப்பேன். நீ முதலில் ரேகா அப்பாவிடம் உன்னுடைய காதலை சொல்லிவிடு. அதற்கு பிறகு முடிவெடுக்கலாம் என்றார். இன்னொரு பக்கம் கார்ப்பரேட் விழாவிற்கு ரோகிணி சென்றிருந்தார். விழாவில் கலந்து கொள்வதற்காக ரோகிணி, மனோஜை வர சொன்னார். அப்போது விஜயா, என்னுடைய தோழி நம் இருவரையும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சொன்னார். நாம் சிறந்த அம்மா- மகன் காண விருதை வாங்கிக் கொண்டு வரலாம் என்றார்.

சிறகடிக்க ஆசை:

மனோஜால் எதுவும் பேச முடியவில்லை தன் அம்மாவுடன் சென்றார். விஜயா சொன்ன நிகழ்ச்சியும் ரோகினி சொன்ன நிகழ்ச்சியும் ஒன்று தான். ரோகிணியை பார்த்தவுடன் விஜயா முறைத்தார். மனோஜ் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார். இன்னொரு பக்கம் ரேகாவின் அப்பாவை சந்தித்த சத்யா, தங்களுடைய காதலை பற்றி போட்டு உடைத்து விட்டார். ரேகாவின் அப்பா, எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும். எதுவாக இருந்தாலும் யோசித்து முடிவு எடுக்கிறேன் என்றார். சத்யாவும் சரி என்று அங்கிருந்து வந்து விட்டார். பின் இதைப்பற்றி சத்யா, முத்துவிடம் சொன்னார். முத்து, அவர் நல்ல முடிவு தான் சொல்லுவார் என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் விஜயா, மனோஜை அழைத்துக் கொண்டு நேராக மேடைக்கு செல்கிறார். ரோகினியால் எதுவுமே பேச முடியவில்லை. பின் அம்மா-மகனுக்கான போட்டியில் விஜயா- ரோகிணி இருவரும் கலந்து கொண்டு விருதை வெல்கிறார்கள். அப்போது மனோஜ், என்னுடைய அம்மா பேச்சை நான் மீறவே மாட்டேன் என்றெல்லாம் பேசுகிறார். இதைக் கேட்டு ரோகினிக்கு கோபம் தான் வருகிறது. அதற்குப்பின் நிகழ்ச்சியில் கணவன்- மனைவிக்கான போட்டியில் கலந்து கொள்ள வேண்டும், வாருங்கள் என்று மனோஜை அழைக்கிறார். விஜயா ரொம்ப மோசமாக ரோகிணி திட்டி விட்டு அங்கிருந்து மனோஜை அழைத்துக் கொண்டு செல்கிறார். அதற்குப்பின் முத்து-மீனா இருவரும் சத்யாவின் காதல் விவகாரத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

முத்து, நீ தைரியமாக இரு. ரேகாவின் அப்பாவிடம் பேசி இருக்கிறோம் என்று சொல்கிறார். அதற்குப்பின் சிந்தாமணி, அவருடைய கணவரும் ஹோட்டலில் சந்தித்து பேசி கொள்கிறார்கள். சத்யா தன்னிடம் சொன்ன விஷயத்தை எல்லாம் சிந்தாமணியிடம் ரேகாவின் அப்பா சொல்கிறார். சிந்தாமணி, நான் ஒரு யோசனை சொல்கிறேன். அதைப்படியே செய்யுங்கள். ரேகாவை சென்னைக்கு வர வைத்து ஒரு ரூமில் அடைத்து வைத்து விடுங்கள். போலீஸ் ஸ்டேஷனில் சத்யா தான் கடத்திவிட்டான் என்று புகார் கொடுத்து விடுங்கள். போலீஸ் பண்ணும் டார்ச்சலில் சத்யாவின் குடும்பம் ரேகாவின் பக்கம் திரும்பவே மாட்டார்கள் என்று சொல்கிறார். ரேகாவின் தந்தையும் சிந்தாமணியின் ஐடியாவிற்கு ஒத்துக் கொண்டு ரேகாவிடம் பேசுகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full