ரேகாவின் காதலை அறிந்து ஷாக்கான முத்து-மீனா, சத்யா எடுக்க போகும் முடிவு என்ன? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா, என்னால் நேத்து ஒரு நாள் தனிமையாக வீட்டில் இருக்க முடியவில்லை. யாரும் இல்லாததால் ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது. இப்போதுதான் உன்னுடைய நிலைமை புரிகிறது என்றார். பார்வதி, தன் நிலைமையை விஜயா புரிந்து கொண்டதால் சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் விஜயா, மனோஜ்க்கு திருமண ஏற்பாடு செய்வதற்காக தரகரை வரவைத்து பேசி இருந்தார். இன்னொரு பக்கம் மனோஜின் நண்பர் சந்தோஷ், ரோகினியை சந்தித்து உங்களை நான் காதலிக்கிறேன். இனிமேல் உங்களை மனோஜ் ஏற்றுக்கொள்ள மாட்டான். அவனுக்கு வேறு ஒரு பெண் பார்த்தார்கள். நான் உங்களை காதலிக்கிறேன் என்றெல்லாம் சொன்னார்.
ரோகினி, எந்த பதிலும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பினார். பின் அந்த இடத்தில் மனோஜ்- சந்தோஷ் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை ரோகிணி பார்த்து விட்டார். இது மனோஜ் வேலை என்று புரிந்து கொண்ட ரோகிணி, மனோஜிற்கு பாடம் புகட்ட திட்டம் போட்டார். இன்னொரு பக்கம் மீனா வேலை செய்யும் இடத்தில் ஒரு மனநல பாதிக்கப்பட்ட பையன் தவறான முடிவு எடுக்க பார்க்கிறான். அந்த சமயம் மீனா புத்திசாலித்தனமாக யோசித்து அவனை காப்பாற்றினார். அங்கிருந்தவர்கள் எல்லோரும் மீனாவை பாராட்டுகிறார்கள். அதற்குப்பின் முத்து, மீனா சமைத்துக் கொடுத்த சாப்பாட்டை வீட்டிற்கு எடுத்துட்டு வந்து எல்லாரையும் சாப்பிட கூப்பிட்டார். விஜயா- மனோஜ் இருவரும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். முத்து, ரவி, அண்ணாமலை எல்லோருமே ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
சிறகடிக்க ஆசை:
இன்றைய எபிசோட்டில் அண்ணாமலை, முத்து, ரவி எல்லோரும் மீனா சமையலை ரசித்து ருசித்து சாப்பிடுவதால் மனோஜ் தன் அம்மாவின் பேச்சை கேட்காமல் மீனாவின் சாப்பாடு சாப்பிடுகிறார். இதனால் விஜயாவிற்கு பயங்கர கோபம் வருகிறது. அதற்குப் பின் விஜயா, மனோஜ்காக பெண் பார்த்திருக்கும் விஷயத்தை சொல்கிறார். மனோஜ் ரொம்பவே சந்தோஷப்படுகிறார். அப்போது மனோஜ், ரோகிணி இடமிருந்து விவாகரத்து வாங்குவதற்கு சந்தோஷை வைத்து போட்டிருக்கும் திட்டத்தை பற்றியும் செல்கிறார். முத்து, ரவி எல்லோருமே கிண்டல் செய்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் ரோகினி, சந்தோஷை ஒரு இடத்திற்கு வரவைத்து சவுக்கடிப்பவரை வைத்து அடி வெளுத்து வாங்குகிறார். பின் சந்தோஷ், மனோஜிக்கு போன் செய்து நடந்ததை சொல்கிறார். முத்து-மனோஜ் இருவருமே அந்த இடத்திற்கு போகிறார்கள். பின் எப்படியோ அந்த நபரிடம் இருந்து சந்தோஷை முத்து காப்பாற்றினார். பின் இதெல்லாம் ரோகிணியின் வேலை என்று தெரிந்தவுடன் மனோஜ் கோபப்படுகிறார். பின் இதைப் பற்றி எல்லாம் முத்து, ரவி இருவரும் மீனா-ஸ்ருதி இடம் சொல்லி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்குப்பின் முத்து, நீத்து விஷயத்தில் ஏதாவது செய்யணும் என்று சொல்கிறார்
https://www.youtube.com/watch?v=uJsOZBT937w
சீரியல் ப்ரோமோ:
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சத்யாவின் பிறந்தநாளுக்காக ரேகா கேக் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வருகிறார். மீனா அம்மா வீட்டில் எல்லோருமே சத்யாவின் பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள். அப்போது ரேகா, இந்த நாளில் நல்ல விஷயம் சொல்லுவாய் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார். முத்து,மினாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. பின் சத்யாவிடம் அதைப்பற்றி விசாரிக்கிறார்கள். சத்யா, ரேகா என்னை காதலிப்பதாக சொன்னார்கள். நானும் அவரிடம் காதலை சொல்ல போகிறேன் என்று சொல்கிறார். இதைக் கேட்டவுடன் முத்து-மீனா ஷாக் ஆகிறார்.