ரோகினி சொன்ன பிளாஸ்பேக், மீனா எடுத்த முடிவு என்ன? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 19/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலை, பாட்டி எல்லோருமே அவர்களை வரவேற்றார்கள். அதற்குப்பின் வீட்டில் உள்ள எல்லோருமே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சாப்பிடும் போது மனோஜ், முட்டையை சோத்தில் மறைத்து வைத்துவிட்டு எனக்கு முட்டை வைக்கவில்லை என்றார். உடனே, கிரிஷ் உண்மையை சொன்னார். இதனால் அண்ணாமலை, பாட்டி திட்டிக் கொண்டிருந்தார்கள். முத்து, இந்த வீட்டிலேயே பொய் சொல்லி மறைப்பது மனோஜ் தான் என்றார். இதையெல்லாம் கேட்டு ரோகிணி உள்ளுக்குள்ளே ரொம்பவே பதறிக் கொண்டு இருந்தார்.

தீபாவளி பண்டிகை முடிந்து எல்லோரும் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். அப்போது ரோகினி, தயவு செய்து உண்மையை வீட்டில் சொல்லாதீர்கள். எங்கள் ரெண்டு பேருடைய உயிர் உங்கள் கையில் தான் இருக்கிறது என்றெல்லாம் சொன்னார். இதை கேட்டு மீனாவிற்கு பயங்கர கோபம் வருகிறது. ரோகினியை திட்டி விட்டார். இன்னொரு பக்கம் பார்வதி-சிவன் இருவரும் சேர்ந்து குழந்தைகளுக்கு கதை சொல்லும் வீடியோவை எடுத்துக் கொண்டிருந்தார்கள். இதை பார்த்து விஜயாவிற்கு பயங்கர கோபம் வந்தது. அப்போது சிவன், நம்முடைய வீடியோ மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி இருக்கிறது என்று கேக் வெட்டி கொண்டாடினார். அந்த சமயம் பார்த்து சிந்தாமணி தன்னுடைய மகளை அழைத்துக் கொண்டு வந்தார்.

சிறகடிக்க ஆசை:

சிந்தாமணியின் மகள் ரேகா எல்லோரைப் பற்றியும் தெரிந்து வைத்துக் கொண்டு நல்ல சகஜமாக பேசிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் மீனா, வீட்டில் உண்மையை சொல்ல முடியாமல் குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய மனசாட்சி, ரோகிணி பொய் சொல்லி நடமாடுகிறார். நீ எல்லோரிடமும் சொல்லு உண்மை தெரிந்தால் உன்னையும் தான் தப்பாக நினைப்பார்கள் என்று அவருடைய உண்மையை சொல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. இதைக் கேட்டு மீனாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. ரொம்பவே குழம்பிப் போயிருக்கிறார். இன்னொரு பக்கம் தங்களுடைய புதிய ஆர்டர் வாங்குவதற்காக
ரோகிணி- மனோஜ் இருவருமே கம்பெனிக்கு சென்றிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் ரோகினி, தனக்கு நடந்த முதல் திருமணத்தைப் பற்றி சொல்லி அழுகிறார். மீனாவுமே ரோகினியின் கதை கேட்டு வருத்தப்படுகிறார். அதற்குப்பின் மீனா, உன் வாழ்க்கையில் நடந்தது பெரிய தவறு. நீ செய்த தவறுக்கு நான் குற்ற உணர்ச்சியில் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். பின் மீனா, இரவு முழுவதும் தூங்காமல் ரோகினி சொன்ன கதையைப் பற்றியே நினைத்துக் கொண்டே இருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

முத்து, என்னானது என்று நடந்ததை விசாரிக்கிறார். ஆனால், மீனா எதுவுமே சொல்லவில்லை. மறுநாள் காலையில் மனோஜ், ஒரு பெரிய ஆபீசர் போல கோர்ட் போட்டு அமர்க்களம் செய்து கொண்டிருக்கிறார். வழக்கம்போல ரோகினி திமிராக பேசுகிறார். உடனே மீனா முறைத்தவுடன் அவர் அமைதியாகி விடுகிறார். அண்ணாமலை, செய்திருக்கும் வேலையை ஒழுங்காக பண்ணு என்று அறிவுரை எல்லாம் சொல்கிறார். இத்தனம் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full