ரோகினியின் முதலை கண்ணீரால் நீதிபதி கொடுத்த தீர்ப்பு, ஷாக்கில் மனோஜ் - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 13/4/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, தன்னுடைய வாக்குறுதிகளை எல்லாம் எழுதி வீட்டில் உள்ள எல்லோரிடமே சொன்னார். வழக்கம்போல மனோஜ், விஜயா இருவரும் அதை கிண்டல் கேலி செய்தார்கள். அண்ணாமலை, உனக்கு பிடிக்கவில்லை என்றாலும் அமைதியாக இரு என்றார். அதற்கு பின் முத்து-மீனா இருவரும் தீவிரமாக பிரச்சாரத்தில் இறங்கினார்கள். இன்னொரு பக்கம் சிந்தாமணி மக்களை தன் பக்கம் கவர்வதற்காக எல்லோருக்குமே புடவை வேஷ்டி எல்லாம் வாங்கி கொடுத்தார். இதையெல்லாம் பார்த்து மீனா, சிந்தாமணியை எப்படியாவது எதிர்கொள்ள ஒரு நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்றார்.

முத்து- ஸ்வேதா- ஸ்ருதி- ரவி எல்லோருமே அதைப்பற்றி தான் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது மீனா, வியாபாரிகளின் பிள்ளைகளுக்கு இலவசமாக டியூஷன் எடுக்கலாம் என்றார். ஸ்வேதா, நானே இலவசமாக எடுக்கிறேன் என்றார். இதைப் பற்றி மீனா தன்னுடன் வேலை செய்பவர்களிடம் சொன்னார். எல்லோருமே மீனாவின் திட்டத்தை பாராட்டினார்கள். இதை அறிந்த சிந்தாமணி லஞ்சம் கொடுத்து எல்லோரையும் தன் பக்கம் விலைக்கு வாங்க திட்டம் போட்டார். இதெல்லாம் கவனித்த ரேகா, இந்த தேர்தலில் நிற்காதீர்கள் என்று தடுக்கின்றார். ஆனால் சிந்தாமணி கேட்கவில்லை.

சிறகடிக்க ஆசை:

இன்று எபிசோட்டில் தேர்தலில் மீனா வெற்றி பெற்று விடுகிறார். இதனால் கோபத்தில் சிந்தாமணி கொதிக்கிறார். மீனாவை எப்படியாவது தலைவி பதவியில் இருந்து விலக்கி, அவளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று சிந்தாமணி திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் நீத்துவின் கடை திறப்பு விழாவிற்கு ரவி போகாமல் இருப்பதற்காக சுருதியை அழைத்துக்கொண்டு டூர் போக சொல்கிறார் மீனா. பின் சுருதி-ரவி இருவரும் டூர் கிளம்பி போகிறார்கள். பின் ரெஸ்டாரண்டை மீனா- முத்து இருவரும் பார்த்துக் கொள்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அப்போது வந்த நீத்து, ரவி எங்கே? என்று ஓட்டலில் பிரச்சனை செய்கிறார். மீனா, இருவரும் டூர் சென்றிருக்கிறார்கள் என்கிறார். கோபத்தில் நீத்து, முத்து-மீனா இருவரையும் மோசமாக பேசுகிறார். ஒரு கட்டத்தில் மீனா, நீத்துவின் கன்னத்திலேயே பளார் என்று அறைந்து வெளியே துரத்துகிறார். இன்னொரு பக்கம் கோர்ட்டில் மனோஜ் விவாகரத்து வழக்கு நடக்கிறது. அப்போது ரோகிணி, கிரிஷை அழைத்துக் கொண்டு வருகிறார். நீதிபதியும் விசாரிக்கிறார். அப்போது ரோகிணி, என்னிடம் பணம் இல்லை. ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறேன். மனோஜை திருமணம் செய்து கொள்ள நான் நிறையவே கடன் பட்டு விட்டேன் என்று ரொம்ப எமோஷனலாக அழுது நடிக்கிறார்.

https://youtu.be/0u0K7YqkUmo?si=I40UOI8wOruEVIYW

சீரியல் ப்ரோமோ:

behindtalkies AMP · Quick view
View full