ரோகினி பற்றிய ரகசியத்தை அறிந்த முத்து, மீனா எடுத்த அதிரடி முடிவு- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 2/8/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான 'சிறகடிக்க ஆசை' சீரியலில் மனோஜ், மீனாவின் நகையை யாருக்கும் தெரியாமல் விற்று கவரிங் நகையை மாற்றி வைத்து இருந்த பஞ்சாயத்து ஒருவழியாக தீர்ந்தது. ஆனால், அந்த 4 லட்சத்திற்கு ரோகிணி பொறுப்பு ஏற்று 2 லட்ச ரூபாய் முத்துவிடம் கொடுத்து விட்டார். மீதி பணத்தை சீக்கிரம் தருகிறேன் என்று சொல்லி இருந்தார். அதோடு கடந்த வாரம் இந்த பிரச்சனையை முடிக்க முத்து பாட்டியை வரவழைத்து இருந்தார். பாட்டி வந்ததும் அண்ணாமலை-விஜயா பேசாமல் இருந்ததற்கு பாட்டி சமாதானம் செய்து இருந்தார்.

பின் முத்துவுக்கு, 29 லட்சத்தை மனோஜ் மாதம் மாதம் 50 ஆயிரம் கொடுக்க வேண்டும், அந்த பொறுப்பை விஜயாவிடமே பாட்டி ஒப்படைத்து விட்டு கிளப்பி விடுகிறார். கடைசியில் விஜயா ரோகினிடம், உன் அப்பாவிடம் இருந்து பணத்தை வாங்கி கொடுத்து விடு என்று புது வெடியை போட்டு விடுகிறார். ரோகினி என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறார். பின் முத்து புது காரை வாங்கி வீட்டிற்கு வருகிறார். இந்த சமயத்தில் மனோஜ்க்கு யாரோ ஒருவர் மொட்டை கடிதம் எழுதி அனுப்பி இருந்தார். அதைப் பார்த்து பயந்த மனோஜிடம், இது யாரோ பிராங்க் பண்றாங்க, நீ பயப்படாதே என்று ரோகிணி ஆறுதல் சொன்னார்.
இருந்தும் மனோஜ் பயந்து சாமியாரை பார்த்து நடந்ததை சொல்லி இருந்தார்.

சிறகடிக்க ஆசை:

அவரும் இது தான் சமயம் என்று சில பரிகாரங்களை சொல்ல மனோஜூம் அதை செய்கிறார். இதை பார்த்து வீட்டில் உள்ள எல்லோரும் கேள்வி கேட்க மனோஜ் பதில் சொல்லவில்லை. நேற்று எபிசோடில், மீனா, பச்சைப்பயிறு வைத்து வித்தியாசமான உணவை சமைத்துக் கொடுக்க, எல்லோருமே சாப்பிட்டு புகழ்ந்து பேசி இருந்தார்கள். ஆனால், முத்து மட்டும் போன் பேசிக்கொண்டு அதை கண்டுகொள்ளாமல் சென்று விட்டதால் மீனா வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம், ரோகினி தன் மகனின் பிறந்த நாளுக்காக துணி வாங்க கடைக்கு போகி இருந்தார். அதே கடைக்கு வகுப்பிற்கு வரும் மாணவர்களுக்கு துணி வாங்க விஜயா சென்று இருந்தார்.

விஜயாவிடம் தப்பித்த ரோகினி:

பின் ரோகினியை பார்த்த விஜயா, இங்கே என்ன? என்று கேட்க, அப்போது கடைக்காரர், உங்கள் மகனின் துணி பில் போட்டாச்சு என்று சொன்னவுடன் விஜயா, அதிர்ச்சியாகி என் மருமகளுக்கு மகனா? குழந்தையே இல்லையே என்று கேட்கிறார். உடனே ரோகினி ஏதோ சொல்லி சமாளித்து அந்த கடைக்காரரை அனுப்பி விடுகிறார். இன்னொரு பக்கம், வீட்டிற்கு புடவை வாங்கி வந்த முத்து, மீனாவிடம் கொடுக்கிறார். ஆனால், மீனா எதுவும் சொல்லவில்லை. பின் காலையில் நடந்ததை பற்றி பேசி இருந்தார். உடனே முத்து, மீனாவை புகழ்ந்து பேசி சமாதானம் செய்து விடுகிறார். மீனாவும், முத்து வாங்கி தந்த புடவையை கட்டி சந்தோசப்படுகிறார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில், கிரிஷ்க்காக முத்து புது டிரஸ் வாங்கி இருக்கிறார். ஹோட்டலில் ரவியிடம் ஸ்ருதி அம்மா ரெஸ்டாரண்ட் வைக்க செக் கொடுக்கிறார். இதனால் கடுப்பான ரவி, ஸ்ருதியிடம் சண்டை போட, ஸ்ருதி தன் தரப்பு நியாயத்தை சொல்லி இருந்தார். மறுநாள் ரோகினி, கிரிஷ் பிறந்த நாளிற்கு அவரை பார்க்க சென்றிருக்கிறார். பின் கிரிஷ் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் ரோகினி செய்திருக்கிறார். அந்த சமயம் பார்த்து, முத்து-மீனா இருவரும் கிரிஷ் வீட்டிற்கு வருகிறார்கள். அவர்கள் வந்த உடனே ரோகினி ஒளிந்து கொள்கிறார்.

சீரியல் ட்ராக்:

பின் புது துணியை கொடுத்து கிரிஷ்க்கு வாழ்த்துக்கள் சொல்லி அவரின் பாட்டியிடம் முத்து பேசுகிறார். கிரிஷ் அத்தை எங்கே? எதற்கும் அவர் வர மாட்டாரா? போன் பண்ணி கொடுங்கள் பேசுகிறேன் என்று இருவரும் மாத்தி மாத்தி கேட்கிறார்கள். என்ன சொல்வது என்று புரியாமல் கிரிஷ் பாட்டி தவித்தார். இறுதியில் ரோகினி பற்றிய உண்மையை முத்துவிடம் சொல்கிறார். ஆனால், ரோகினி தான் தன் மகள் என்பதை மட்டும் சொல்லவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது. நாளை எபிசோடில், முத்து- மீனா இருவரும் கிரிசை தத்தெடுத்துக் கொள்வத்து குறித்து பேசி இருக்கிறர்கள். இனி வரும் நாட்களில் கிரிஷ் பற்றிய உண்மை தெரிய வருமா? ரோகினி என்ன செய்யப் போகிறார்? போன்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது

behindtalkies AMP · Quick view
View full