மீனாவை பழிவாங்க ரோகினி-சிந்தாமணி செய்யும் சதி வேலை, முத்துவுக்கு தெரிய வருமா? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ராஜா, தன்னிடம் இருக்கும் ஆதாரத்தை காண்பித்தார். இப்படி மாற்றி மாற்றி மனோஜின் மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகள் எழுந்து கொண்டு இருந்தது. அதற்கு வீட்டில் எல்லோருமே மனோஜை திட்டினார்கள். ஆனால், விஜயா மட்டும் நம்பவில்லை. உடனே முத்து, இதற்கு ஒரே வழி மனோஜ் -ராணியை கல்யாணம் செய்ய வேண்டும். ராணி இந்த வீட்டு மருமகளாக வேண்டும் என்றார். இதை கேட்டு ராணி அதிர்ச்சியானார். மனோஜ், ராணி கழுத்தில் தாலி கட்ட வேண்டும். இது தான் முடிவு என்று முத்து சொன்னார்.
இதனால் கோபப்பட்ட ராஜா, முத்துவிடம் சண்டைக்கு போனார். உடனே ராணி, உண்மையை உளறி விட்டார். மனோஜ், ராணியிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது. அப்போது ராஜா, நாங்கள் பணத்தை திருடவில்லை. ஆனால், எங்கள் மீது பழி போட்டார்கள். அதற்காகத்தான் இப்படி எல்லாம் செய்தேன் என்றார். முத்து, இவர்கள் பணத்தை திருடவில்லை. ஆனால், இவர்கள் செய்தது தவறுதான் என்று ஒரு பேப்பரில் இனி இந்த தவறு செய்ய மாட்டோம் என்று எழுதி போட்டோ எடுத்துக் கொண்டார்.
சிறகடிக்க ஆசை:
அதற்குப்பின் முத்து, பணத்தை மனோஜ்-ரோகினி இருவரில் ஒருவர் தான் எடுத்திருக்க வேண்டும். உண்மையை கண்டுபிடிக்கிறேன் என்றார். அதற்குப்பின் மனோஜ்- ரோகினி இருவருமே நன்றி கூட சொல்லவில்லை என்று கடுப்பாகி மீனா புலம்பிக்கொண்டிருந்தார். ஆனால், முத்து அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதற்குப்பின் கோவிலில் வித்யா- முருகன் இருவருமே தங்களுடைய திருமண பத்திரிக்கையை முத்து-மீனாவிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கினார்கள். அப்போது மீனா, கிரிஸ் அம்மாவை பற்றி விசாரித்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் வித்யா, நான் மகேஸ்வரி இடம் கேட்டு கிரிஷ் அம்மாவின் நம்பரை வாங்கி தரேன் என்று ஏதோ சொல்லி சமாளித்து விடுகிறார். அதற்குப்பின் மகேஸ்வரி வீட்டிற்கு பத்திரிக்கை வைக்க வித்யா வருகிறார். அப்போது அங்கு வந்த ரோகினியிடம் தன்னுடைய திருமணத்தைப் பற்றி வித்யா சொல்கிறார். அதோடு முத்து, மீனாவுக்கு முதல் பத்திரிக்கை வைத்ததையும் வித்யா சொல்கிறார். இதைக் கேட்டு ரோகினிக்கு பயங்கர கடுப்பாகிறது. பின் வழக்கம் போல் இருவருக்கும் இடையே வாக்குவாதம் வருகிறது. அப்போது வித்யா, கிரிஷ் அம்மா போன் நம்பரை மீனா கேட்கும் விஷயத்தை சொல்கிறார். அதற்கு ரோகிணி, ஏதோ சொல்லி சமாளி என்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்கு வித்யா, பொய் சொல்ல மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அதற்கு ரோகினி, இந்த மீனாவை ஏதாவது செய்யணும் என்று நினைக்கிறார். இன்னொரு பக்கம்- முத்து மீனா இருவருமே ரூம் கட்டுவதை பற்றி ரொம்ப தீவிரமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் மனோஜ், தனக்கு தெரிந்த கிளைண்ட் ஒருவரின் வீட்டில் டெக்கரேஷன் வேலைக்கு ஆள். அதனால் மீனாவிடம் சொல்லலாம் என்கிறார். அதற்கு ரோகிணி, வேண்டாம் என்று சொல்லி வருகிறார். அதற்குப்பின் யோகா கிளாசில் பார்வதியை காதலிக்கும் நபர் போன் செய்து பேசுகிறார்கள். அந்த சமயம் வந்த ரோகினி, பூ ஆர்டரை பற்றி சிந்தாமணியிடம் சொல்கிறார். அப்போது ரோகினி, நான் உங்களுக்கு இந்த பெரிய ஆர்டர் தரணும் என்றால் நீங்கள் எனக்கு ஒரு வேலை செய்யணும். மீனா அம்மா வைத்திருக்கும் கடையை அடித்து நொறுக்க வேண்டும் என்று சொல்கிறார். இதை கேட்டு ரோகினி சிந்தாமணி ஷாக் ஆகிறார்.