ரோகினியை பார்த்து கிரிஷ் சொன்ன வார்த்தை, அதிர்ச்சியில் விஜயா - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சிட்டியின் ஆட்கள் முத்துவின் பெயரை சொல்லி தீபன் குடும்பத்தை அடித்து விட்டார்கள். இது தெரியாமல் வீட்டிற்கு வந்த முத்து, தீபன் வீட்டில் பேசிவிட்டேன். பணமெல்லாம் கொடுக்கத் தேவையில்லை. நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னார். அந்த சமயம் பார்த்து வீட்டுக்கு வந்த போலீஸ் முத்துவை கைது செய்தார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே பதறினார்கள். அப்போது போலீஸ், முத்து அடியாட்களை வைத்து தான் தீபன் வீட்டில் பிரச்சனை செய்திருக்கிறார் என்று சொன்னார்கள். முத்து நான் எந்த தவறும் செய்யவில்லை என்று சொன்னார்.
போலீஸ் முத்துவை கைது செய்து சென்று விட்டார்கள். அண்ணாமலை, மீனா எவ்வளவு சொல்லியும் போலீஸ் கேட்கவில்லை. ரோகினி உள்ளுக்குள் சந்தோஷப்பட்டார். பின் மீனா தனக்கு தெரிந்தவர்கள் மூலம் முத்துவை வெளியே எடுக்க போராடிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் முத்து கைதானதை அறிந்த அருண் உள்ளுக்குள் சந்தோசப்பட்டு வெளியில் நல்லவன் போல நாடகமாடினார். பின் அருண் வீட்டிற்கு சென்ற மீனா, நடந்ததை சொல்லி உதவி கேட்டார். அதற்கு அருண், இது கொஞ்சம் கஷ்டம் என்றார். பின் மீனா, ரதியை சந்தித்து நடந்ததை பற்றி சொன்னார்.
சிறகடிக்க ஆசை:
பின் ரதி, தீபனுக்கு போன் செய்து அங்கு நடந்ததை பற்றி விசாரித்தார். அப்போது தீபன், அடித்தவுடன் சிட்டி பெயரை சொன்னான். உடனே மீனாவுக்கு இது சிட்டி செய்த வேலைதான் என்று தெரிந்து கொண்டார். பின் இதைப் பற்றி மீனா போலீஸிடம் சொன்னார். சிட்டியை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தார்கள். அப்போது வலி தாங்க முடியாமல் சிட்டி, இது எல்லாம் செய்ய சொன்னது ரோகிணி தான். எனக்கும் அவங்களுக்கும் சின்ன சின்ன டீலிங் இருக்கு என்று சொன்னார். இதை கேட்டவுடன் மீனா-முத்து இருவரும் ஷாக் ஆனார்கள். சிட்டி குருப்பை போலீசார் கைது செய்தார்கள். பின் முத்துவை விடுதலை செய்தார்கள்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் போலீஸ் ரோகினியை அழைத்து வரச் சொன்னார்கள். கோபத்துடன் வீட்டிற்கு வந்த மீனா, என் வீட்டுக்காரரை கைது செய்யும் போது கூட உண்மையை சொல்லவில்லை. நீங்கள் இவ்வளவு மோசமாக நடந்து கொள்வீர்கள் என்று எனக்கு தெரியாது என்று கத்தி இருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே என்ன ஆனது? என்று கேட்டார்கள். அதற்கு மீனா, என் கணவர் கைதானத்திற்கு காரணம் ரோகினி தான் என்று சொன்னார். உடனே ரோகினி, நான் எதுவுமே செய்யவில்லை. என் மீது பழி போடாதீர்கள் என்று சொல்ல, மனோஜும் ரோகினிக்கு சப்போர்ட் செய்தார். அப்போது மீனா, நடந்ததை எல்லாம் சொன்னார். இதை கேட்டவுடன் ரோகினிக்கு ஷாக் ஆனது. அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த போலீஸ், ரோகினி செய்த வேலையை சொன்னார்கள்.
சீரியல் ட்ராக்:
இதை கேட்டு மொத்த குடும்பமும் ஷாக் ஆனது. பின் வீட்டில் உள்ள எல்லோருமே ரோகினியை திட்டினார்கள். பின் போலீசும் ரோகினியை கைது செய்து சென்றார்கள். போலீஸ் ஸ்டேஷனில்
ரோகினி, நான் எந்த தவறும் செய்யவில்லை. சிட்டி எனக்கு தெரிந்தவர் என்பதால் தான் அவரிடம் பேச சொன்னேன். ஆனால், அவரை நான் அடிக்க சொல்லவில்லை என்று சிட்டி பக்கம் திருப்பினார். போலீஸ் ரோகினியை திட்டி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஏதாவது நடந்தால் மர்டர் கேஸ் போடுவேன் என்று சொன்னார். சப்போர்ட் செய்த மனோஜையும் இந்த கேசில் இழுத்து கொண்டார்கள்.
https://www.youtube.com/watch?v=8CVE4yPrl5k
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் க்ரிஷ், கோயிலில் தன்னுடைய அம்மா ஜெயிலில் இருந்து வெளிவர வேண்டும் என்று சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார். அங்கு வந்த ரவி, அண்ணாமலை எதற்காக இங்கு இருக்கிறாய்? என்று கேட்கிறார்கள். அதற்கு கிரிஷ், என்னுடைய அம்மா அம்மாவை போலீஸ் பிடித்து போய்விட்டது என்று சொல்ல, அண்ணாமலை ஷாக் ஆனார். பின் கிரிஷ் ஏதேதோ சொல்லி சமாளித்து விடுகிறார். அதற்குப்பின் வீட்டிற்கு ரோகினி, மனோஜ் இருவரும் வருகிறார்கள். அப்போது ஓடிப்போய் ரோகினியை கட்டிப்பிடித்து அம்மா என்கிறார். அதிர்ச்சியில் விஜயா பார்க்கிறார்.