முத்து அழைத்து வந்த சாட்சிகளை திணற விட்ட ரோகினி, மனோஜ் நிலைமை என்ன? சிறகடிக்க ஆசை

By subhashini · 10/2/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ஸ்ருதியின் ஹோட்டலுக்கு சென்ற ரவி மன்னிப்பு கேட்டுவிட்டு வேலை செய்ய ஒத்துக்கொண்டார். அது மட்டும் இல்லாமல் நீத்துவுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை உன் அப்பாவிடம் வாங்கி கொடுக்க வேண்டும் என்று கண்டிஷன் சொன்றார். கோபத்தில் ஸ்ருதி, எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்றார். ரவி, நீ அதை செய்தால் நான் வேலைக்கு வருகிறேன் என்றார். உடனே ஸ்ருதி, உனக்கும் நீத்துவுக்கும் சம்மந்தமில்லை என்று சோசியல் மீடியாவில் பேசி வீடியோ போடு என்றார்.

மீனா, சுருதிக்கு அட்வைஸ் செய்து ரவியை வேலையில் சேர்த்துக்கொள்ள சொன்றார். பின் ஸ்ருதி, ரவையை வேலை செய்து கொண்டார். ஆனால்,நீத்து ரவியை காதலிக்கவில்லை என்று வீடியோ போடும் வரை தன் அம்மா வீட்டில் இருப்பதாக சொல்லி விட்டார். இதைப் பற்றி ரவி வீட்டில் சொன்னார். இன்னொரு பக்கம் பின் முத்து, செல்வத்தை எப்படியோ ஜாமினில் வெளியே எடுத்து விட்டார். செல்வம் தன்னுடைய குடும்பத்தை பார்த்து ரொம்ப எமோஷனலாக கதறி அழுதார். அந்த சமயம் வந்த அருண், எப்படியோ ஜாமினில் வந்து விட்டாய்.

சிறகடிக்க ஆசை:

உன்னுடைய லைசன்சை கேன்சல் செய்து வேலை செய்ய விட மாட்டேன் என்று சவால் விட்டார். செல்வம் மன்னிப்பு கேட்டும் அருண் மனம் இறங்கவில்லை. முத்துவை பழி வாங்குவதாக நினைத்து செல்வத்தை
பழி வாங்கினார். அதற்குப்பின் கோர்ட்டில் மனோஜ்- ரோகினி விவாகரத்து கேஸ் நடக்கிறது. கோர்ட்டுக்கு வந்த ரோகிணி நக்கலாக விஜயாவிடம் நலம் விசாரித்துவிட்டு மனோஜிடம் பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோர்ட்டில் மனோஜ் தரப்பில் வழக்கறிஞர், வித்யாவை விசாரிக்க அழைக்கிறார். வித்யா, ரோகினி பற்றிய எல்லா உண்மையும் சொல்கிறார். உடனே ரோகினி, வித்யா பொய் சொல்கிறார். வித்யாவின் கணவர் முருகன், முத்துவிற்கு நல்ல நண்பர். அதனால் தான் பொய் சொல்கிறார் என்கிறார். பின் ரோகினி, முருகனை விசாரிக்கிறார். ரோகிணி மாத்தி மாத்தி கேட்ட கேள்வியில் முருகன் சிக்கிக் கொள்கிறார். இதனால் வித்யாவின் ஆதாரத்தை கோர்ட் எடுத்துக் கொள்ளவில்லை.

சீரியல் ட்ராக்:

அதற்கு பின் மலேசியா மாமாவாக நடித்த மணியை விசாரிக்கிறார்கள். மணியும் எல்லா உண்மையும் சொல்கிறார். அப்போது ரோகிணி, இவரும் பொய் சொல்கிறார். என் கணவர் அவருக்கு பணம் கொடுத்து நடிக்க சொன்னார் என்கிறார். ரோகிணி ஏற்கனவே மனோஜ் மொபைலில் இருந்து பணம் அனுப்பி இருந்தார். அந்த ஆதாரத்தை ரோகினி கோர்ட்டில் காட்டினார். இதனால் எல்லா சாட்சிகளும் மனோஜ்க்கு எதிராகவே திரும்பி நிற்கிறது. இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full