கோர்ட்டில் அந்தர் பல்டி அடித்த ரோகினி, நீத்துவால் ஸ்ருதி-ரவி வாழ்க்கையில் வீசும் சூறாவளி - சிறகடிக்க ஆசை

By subhashini · 24/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, தன் அம்மா முதன் முதலாக போன் செய்தால் ரொம்பவே சந்தோஷப்பட்டார். பின் வக்கீல் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் முத்து பதில் சொன்னார். அதற்குப்பின் ரோகினி- மனோஜ் இருவரின் விவாகரத்து வழக்கு கோர்ட்டுக்கு வருவதால் ஆஜரானார்கள். மனோஜ் தரப்பு வக்கீல், ரோகினி செய்த எல்லா பித்தலாட்ட வேலைகளையும் சொன்னார். பின் நீதிபதி, ரோகினிடம் விசாரித்தார்.

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரோகினி, எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தை இருந்த விஷயம் மனோஜ்க்கு தெரியும். ஆனால், அவர் இப்போ பொய் சொல்கிறார். அவர் அம்மா மிரட்டி தான் இப்படியெல்லாம் செய்கிறார். எங்களுக்கு தயவு செய்து விவாகரத்து கொடுக்காதீர்கள் என்று ரொம்பவே அழுது டிராமா போடுகிறார். இதையெல்லாம் கேட்டு விஜயா, மனோஜிக்கு ஷாக் ஆக இருக்கிறது. விஜயா கோபத்தில் கொந்தளித்து கோர்ட்டிலேயே கத்துகிறார். பின் ரோகிணி தந்திரமாக மனோஜிடம் பேசி அவர் வாயிலேயே உண்மை தெரியும் என்று சொல்ல வைக்கிறார்.

சிறகடிக்க ஆசை:

பின் இந்த கேஸ் இழுத்துக்கொண்டே போவதால் நீதிபதி இந்த வழக்கை இன்னொரு தேதிக்கு தள்ளி வைத்து விடுகிறார். வீட்டிற்கு வந்த விஜயா, மனோஜை திட்டி அடிக்கிறார். முத்து-மீனா, ரோகிணியின் சாமர்த்தியத்தை புரிந்துகொண்டு அவருடைய வாயிலே உண்மை வரவைக்க மனோஜை போன் செய்து ரெக்கார்ட் பண்ண சொல்கிறார்கள். இதை அறிந்த ரோகினி, மீண்டும் திருப்பி திருப்பி பேசி மனோஜை குழப்ப வைக்கிறார். கோபத்தில் விஜயாவும் கத்துகிறார். அதற்குப்பின் ரோகினி, தனக்கு பண தேவை என்பதால் சிந்தாமணியிடம் உதவி கேட்கிறார்.

இன்றைய எபிசோட்:

சிந்தாமணி, என்னிடம் பணம் இல்லை. உன்னிடம் ஏதாவது பொருள் இருந்தால் கொடு. எனக்கு தெரிந்த பைனான்சியரிடம் சொல்கிறேன் என்று சாமர்த்தியமாக பேசுகிறார். அதற்குப்பின்
ரேகா தன்னுடைய அம்மாவை பார்க்க வருகிறார். அப்போது புது ஆர்டர் விஷயமாக சிந்தாமணி, ரேகாவிடம் சொல்கிறார். மீனாவிற்கு தான் இந்த ஆர்டர் கிடைக்க வேண்டும் என்று ரேகா, உங்களுக்கு என் மீது பாசம் இருந்தால் இந்த ஆர்டரை எடுக்கக் கூடாது என்று சொல்லி விடுகிறார். சிந்தாமணியும் அந்த ஆர்டர் வேண்டாம் என்று முடிவெடுத்து விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

பிறகு அந்த ஆர்டர் மீனாவிற்கு கிடைத்து விடுகிறது. இதை மீனா வீட்டில் சொல்லி ரொம்பவே சந்தோஷப்படுகிறார். அந்த சமயம் பார்த்து நீத்துவின் மொபைலில், ரவி ஐ லவ் யூ என்று மெசேஜ் போட்டு இருக்கிறார். இதை அறிந்த சுருதி பயங்கரமாக கொந்தளித்து கடைக்கு போகிறார். அங்கு நீத்து, ரவியிடம் காதலை சொல்ல கேக் வைத்துக் கொண்டு இருக்கிறார். ஸ்ருதி, கேக்கை நீத்துவின் மீது அடித்து விட்டு சண்டை போடுகிறார். நீத்து, நான் உங்களை காதலிக்கிறேன் ரவி என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனால் ரவியுமே கோபப்படுகிறார். சுருதி, ரவியை திட்டிவிட்டார் சென்று விடுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full