கிரிஷை பற்றி தெரிந்து கொள்ள முத்து-மீனா எடுத்த முயற்சி, மாட்டிக்கொள்வாரா ரோகினி? சிறகடிக்க ஆசை

By subhashini · 7/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கிரிஷ், முத்து கார் என்று தெரியாமல் அவருடைய கார் டிக்கியில் எரி ஒளிந்து கொண்டார். இதை அறியாமல் முத்துவும் காரை எடுத்துக் கொண்டு சென்றார். பின் முத்து வரும் வழியில் மீனாவையும் அழைத்துக் கொண்டு வந்தார். அப்போது அண்ணாமலையின் நண்பர் ரோட்டில் இருப்பதை பார்த்த முத்து, அவர்களையும் வீட்டில் கொண்டு போய் விட்டு உதவி செய்தார். அதற்குப்பின் மீனாவின் அம்மா வீட்டிற்கு முத்து கிளம்பினார். இன்னும் அந்த சமயத்தில் ரோகினி, மீனாவிற்கு போன் செய்தார்.

ரோகினி, கிரிஷ் பார்த்த மாதிரி இருக்கிறது என்று உண்மை தெரிந்து கொள்வதற்காகத்தான் மீனாவிடம் போன் செய்தார். மீனா, முத்துவிடம் கிரிஷ் இல்லை என்று தெரிந்தவுடன் ரோகினி வருத்தப்பட்டார். அதற்குப்பின் கிரிஷை கண்டுபிடிக்க ரொம்பவே கஷ்டப்பட்டு கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் முத்து-மீனா இருவருமே மீனாவின் வீட்டிற்கு சென்று விட்டார்கள். அப்போது முத்து, கார் டிக்கியை திறக்கும்போது கிரிஷ் இருப்பதை பார்த்து ஷாக் ஆனார். பின் கிரிஷ் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி இருந்தார்.

சிறகடிக்க ஆசை:

கிரிஷ், கண் விழித்து இது உங்களுடைய கார் என்று எனக்கு தெரியாது. ஸ்கூலில் என்னை போலீசில் பிடித்துக் கொடுப்பேன் என்று மிரட்டினார்கள் என நடந்ததை சொன்னார். பின் முத்து, பாட்டியை ஊருக்கு அனுப்பிவிட்டு கிரிஷ் உடைய அம்மா இவனை ஹாஸ்டலில் சேர்த்து விட்டு எங்கேயே சென்று விட்டார் என்றார். அதற்கு அப்புறம் மீனா வீட்டில் எல்லோரும் க்ரிஷ் அம்மா பற்றி விசாரித்தார்கள். ஆனால், கிரிஷ் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் கிரிஷ் நிலைமையை புரிந்து கொண்டு முத்து- மீனா இருவருமே ஸ்கூலுக்கு சென்று இருந்தார்கள். அப்போது ஸ்கூலில் இருந்த ரோகினி, முத்துவை பார்த்தவுடன் ஒளிந்து கொண்டார். பின் ஸ்கூலில் முத்து, கிரிஷ் காணாமல் போய் கிடைத்த விஷயத்தை பற்றி சொன்னவுடன் ஆசிரியரும் சந்தோஷப்பட்டு அவருடைய கார்டியனிடம் சொன்னார். பின் மகேஸ்வரி, கிரிஷ் எங்கே? என்று கேட்டதற்கு முத்து, அவன் பயந்து போயிட்டான். வீட்டில் இருக்கிறான். கிரிஷ் அம்மாவை நான் பார்க்க வேண்டும் என்றார். அதற்கு மகேஸ்வரி, அவர் வேலையாக இருக்கிறார். கிரிஷை கொண்டுவந்து ஸ்கூலில் விடுங்கள் என்றார்.

சீரியல் ட்ராக்:

அதற்கு முத்து, அவன் கொஞ்சம் பயம் தெளிந்த பின்பு கொண்டு வந்து விடுகிறேன் என்றார். இதையெல்லாம் அறிந்த ரோகினி வீட்டில் கிரிஷ் தன்னுடைய தோழியின் தோழி மகன் என்று ஒரு புது கதையை கிளப்பி விட்டார். அப்போது முத்து, பையன் மீது அக்கறை இல்லாத அவரிடம் கிரிசை விட முடியாது. கிரிஷை பள்ளிக்கூடத்தில் விடனும் என்றால் அவர் அம்மாவை பார்த்து தீரனும். அதற்குப் பிறகுதான் அவனை ஸ்கூலில் விட முடியும் என்றார். இதையெல்லாம் கேட்டு என்ன செய்வது என்று புரியாமல் ரோகினி பயந்து போனார்.

https://www.youtube.com/watch?v=WNdvuRW2Ke8

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் முத்துவிடம் மீனா, கிரிஷை சீதா வேலையும் செய்யும் ஹாஸ்பிடலுக்கு கவுன்சிலிங்காக அழைத்து போலாம் என்கிறார். இதை கேட்ட ரோகினி ஷாக் ஆனார். அதற்குப்பின் ஹாஸ்பிடலுக்கு கிரிஷை அலைத்துக் கொண்டு முத்து- மீனா இருவரும் போகிறார்கள். அதே ஹாஸ்பிடலுக்கு ரோகிணி வருகிறார். உடனே சீதா, அவர் ஒரு டாக்டரை பார்ப்பதற்காக வந்தார் என்று சொல்லி விடுகிறார். பின் கிரிஷிடம் ரோகினி, நீ என்னை பற்றி டாக்டரிடம் எதுவும் சொல்லக்கூடாது என்கிறார். அதற்குப்பின் கிரிஷிடம் மீனா, உன் மனதில் என்ன இருக்கிறதோ அதைப் பற்றி டாக்டரிடம் சொல் என்கிறார். ரோகினி ரொம்பவே பயந்து கொண்டு இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full