கிரிஷ் செய்த வேலையால் அதிர்ச்சியான ரோகினி, உண்மை அறிந்தாரா முத்து? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, முத்துவை பார்த்தவுடன் ஒளிந்து கொண்டார். பின் ஸ்கூலில் முத்து, கிரிஷ் காணாமல் போய் கிடைத்த விஷயத்தை பற்றி சொன்னவுடன் ஆசிரியரும் சந்தோஷப்பட்டு அவருடைய கார்டியனிடம் சொன்னார். பின் மகேஸ்வரி, கிரிஷ் எங்கே? என்று கேட்டதற்கு முத்து, அவன் பயந்து போயிட்டான். வீட்டில் இருக்கிறான். கிரிஷ் அம்மாவை நான் பார்க்க வேண்டும் என்றார். அதற்கு மகேஸ்வரி, அவர் வேலையாக இருக்கிறார். கிரிஷை கொண்டுவந்து ஸ்கூலில் விடுங்கள் என்றார்.
அதற்கு முத்து, அவன் கொஞ்சம் பயம் தெளிந்த பின்பு கொண்டு வந்து விடுகிறேன் என்றார். இதையெல்லாம் அறிந்த ரோகினி வீட்டில் கிரிஷ் தன்னுடைய தோழியின் தோழி மகன் என்று ஒரு புது கதையை கிளப்பி விட்டார். அப்போது முத்து, பையன் மீது அக்கறை இல்லாத அவரிடம் கிரிசை விட முடியாது. கிரிஷை பள்ளிக்கூடத்தில் விடனும் என்றால் அவர் அம்மாவை பார்த்து தீரனும். அதற்குப் பிறகுதான் அவனை ஸ்கூலில் விட முடியும் என்றார். இதையெல்லாம் கேட்டு என்ன செய்வது என்று புரியாமல் ரோகினி பயந்து போனார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் மீனாவின் அம்மா கிரிஷை நன்றாக கவனித்துக் கொண்டார். அதற்குப்பின் கிரிஷை அழைத்துக் கொண்டு முத்து- மீனா இருவருமே ஸ்கூலுக்கு போனார்கள். அங்கு கிரிஷ், மீனா ரொம்ப பயந்திருந்தார். அவன் எங்களுடனே இருக்கட்டும். அவர்களுடைய பெற்றோர்களிடம் எடுத்துச் சொல்லி புரிய வையுங்கள் என்றார். உடனே அந்த ஆசிரியர், மகேஸ்வரிக்கு போன் செய்து மீனா சொன்ன விஷயத்தை சொன்னார். பின் ரோகினி, நீ மகேஸ்வரி வீட்டுக்கு போ. மீனா வீட்டிற்கு போகாதே என்றார். கோபத்தில் கிரிஷ், மீனா ஆண்டி வீட்டுக்கு தான் போவேன். நீயா வந்து என்னை அழைக்கும் வரை நான் யார் வீட்டுக்கும் போக மாட்டேன் என்று அங்கிருந்து ஓடி விட்டார்.
நேற்று எபிசோட்:
இதனால் ரோகிணிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. இன்னொரு பக்கம் ஸ்ருதி, தன்னுடைய ரெஸ்டாரண்ட் திறந்து வைப்பதற்கு சினிமா பிரபலத்திடம் கேட்டார். ஆனால், அவர்கள் லட்சக்கணக்கில் பணம் கேட்பதால் சுருதி அமைதியாக வந்து விட்டார். அதற்குப் பின் வீட்டில் சீதா- மீனா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சீதா, எனக்கு தெரிந்த டாக்டரிடம் கிரிஷை கவுன்சிலிங்க்கு கூட்டிட்டு போகலாம். அவனுடைய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்றார். கடைசியில் வீட்டில் சுருதி ரெஸ்டாரன்ட் திறப்பதை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொன்னார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வீட்டில் எல்லோரும் ரெஸ்டாரண்ட் விஷயமாக மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ரவி தனக்கு எதுவுமே சம்மந்தமில்லை என்பது போல அமைதியாக இருந்தார்.
அதற்குப்பின் மீனா, கிரிஷை சீதாவின் ஹாஸ்பிடலுக்கு கவுன்சிலிங்க்கு அழைத்து போகலாம் என்று சொல்கிறார். அதற்கு முத்துவுமே சம்மதிக்கிறார். இதையெல்லாம் கேட்டு ரோகினி அதிர்ச்சியாகிறார்.
மறுநாள் காலையில் கிரிஷை அழைத்துக் கொண்டு முத்து- மீனா இருவரும் சீதா ஹாஸ்பிடல் போகிறார்கள். அந்த இடத்திற்கு சரியாக ரோகினி வருகிறார். அப்போது சீதா, இவர் தலைவலி விஷயமாக டாக்டரை பார்க்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் கிரிஷை தனியாக அழைத்து சென்று ரோகினி, என்னை பற்றி எந்த விவரமும் சொல்லக்கூடாது என்கிறார். அதற்குப்பின் கிரிஷை டாக்டர் கவுன்சிலிங் செய்தார். அதற்குப்பின் வெளிவந்த டாக்டர், கிரிஷுக்கு ஒன்றுமில்லை. அவருடைய அம்மா இல்லாத ஏக்கம் தான். மற்றபடி அவர் நன்றாக இருக்கிறார் என்கிறார். இன்னொரு பக்கம் கிரிஷ், ஒரு பையனை அடித்ததால் அந்த பையனுடைய பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்திருக்கிறார்கள். இதனால் போலீஸ் கிரிசை விசாரிப்பதற்காக ஸ்கூல் வந்திருக்கிறார்கள். அப்போது ஆசிரியர், மகேஸ்வரிக்கு போன் செய்து நடந்த விவரத்தை சொல்கிறார். இதை கேட்டு ரோகினி ஷாக் ஆகின்றார். இத்துடன் சீரியல் முடிகிறது.