கிரிஷ் சொன்ன வார்த்தையால் ஆடிப்போன விஜயா, சிக்கி கொள்வாரா ரோகினி? சிறகடிக்க ஆசை

By subhashini · 18/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, கிரிஷ் தத்தெடுக்காததற்கு காரணம் எனக்கு ஒரு குழந்தை பிறந்தால் நான் கிரிஷை அதேபோல் நடத்துவேனே என்று தெரியவில்லை .எனக்கு பயமாக இருந்தது. அதனால் தான் வேண்டாம் என்று சொன்னேன் என்றார். மீனாவின் நியாயத்தை புரிந்து கொண்ட முத்து மன்னிப்பு கேட்டார். பின் விஜயாவுமே மீனாவின் எண்ணத்தை பாராட்டினார். இன்னொரு பக்கம் முத்து தன்னை அடித்ததால் உண்மையை சொல்லாமல் ஒன்னுக்கு ரெண்டாக வழக்கம் போல அருண் கதையை அவிழ்த்து விட்டார். இதைக் கேட்ட அருண் அம்மா, இனிமேல் நீ உன்னுடைய அக்கா, மாமாவுடன் பேசக்கூடாது என்றார்.

அதற்குப்பின் முத்து-மீனா இருவரும் சீதாவிடம் பேசுவதற்காக மீனாவின் அம்மா வீட்டுக்கு வந்திருந்தார்கள். அப்போது வந்த சீதா, என்ன சொல்கிறார்கள் என்று கூட கேட்கவில்லை. வழக்கம் போல வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தார். மீனா, முத்து தரப்பு பற்றி சொல்லியுமே சீதா கேட்கவில்லை. கோபத்தில் சீதா, இந்த உறவு எங்களுக்கு தேவையில்லை. இனிமேல் நான் முத்து-மீனாவிடம் பேசப்போவதில்லை. யாரும் எங்களுக்கு தேவையில்லை. எங்கள் வாழ்க்கையை பார்த்துக்கொள்ள தெரியும் என்றெல்லாம் மோசமாக பேசி இருந்தார். இதைக் கேட்டு மீனா கோபப்பட்டு திட்ட, முத்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

சிறகடிக்க ஆசை:

இன்றைய எபிசோட்டில் க்ரிஷ் படித்து நல்ல மதிப்பெண் எடுத்திருப்பதால் சர்டிபிகேட் வாங்குவதற்காக பள்ளியில் பெற்றோர்களை வர சொல்கிறார்கள். க்ரிஷ், மனோஜ்க்கு போன் செய்து பள்ளிக்கு வர சொல்கிறார். ரோகினி, நீதான் இந்த வீட்டில் படித்தவர் என்பதால் கிரிஷ் உன்னை சூஸ் பண்ணி இருக்கிறான். நீயே போய் சர்டிபிகேட் வாங்கு என்று சொல்வதால் மனோஜ் ஒத்துக்கொள்கிறார். இன்னொரு பக்கம் உண்மை அறியாமல் முத்து-மீனா இருவரும் க்ரிஷ் பள்ளிக்கு வருகிறார்கள். பின் முத்து- மனோஜ் இடையே வாக்குவாதம் நடக்கிறது. பின் மீனா சொன்னதால் முத்து அமைதியாகி விடுகிறார். மனோஜ்-ரோகிணி இருவரும் சென்று கிரிஷுக்கு சர்டிபிகேட் வாங்கிக்கொண்டு வெளியே வருகிறார்கள்.

சீரியல் டிராக்:

அதற்குப்பின் கிரிஷை அழைத்துக் கொண்டும் மனோஜ்- ரோகிணி இருவரும் வீட்டிற்கு வருவதை பார்த்த விஜயா, வழக்கம் போல ருத்ர தாண்டவம் ஆடுகிறார்.ரோகினியால் எதுவும் பேச முடியவில்லை. அந்த சமயம் வந்த அண்ணாமலை, கிரிஷ்க்கு பிடித்திருப்பதால் தான் மனோஜிடம் செல்ல விரும்புகிறார். இது எல்லாம் நீ தடுக்கக்கூடாது என்றெல்லாம் திட்டுகிறார். அந்த சமயம் பார்த்து ரவி வந்து விடுகிறார். பின் ரவி, தான் வெற்றி பெற்றதை சொல்லி வீட்டில் எல்லோருக்கும் வாங்கி வந்த கிபிட் கொடுக்கிறார். ரூமில் ரவி தான் எடுத்து வந்த துணிகள் எல்லாம் அடுக்கி வைக்கிறார். அப்போது நீத்து துணியை பார்த்து சுருதி கோபப்படுகிறார்.

https://www.youtube.com/watch?si=_pDzrUDfW1kUEh_R&v=P-EHwaT7PIM&feature=youtu.be

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் ரோகினி சொன்னபடி கிரிஸ் மனோஜை பார்த்து அப்பா என்று அழைக்கிறார். இதைக்கேட்டு வீட்டில் உள்ள எல்லாருமே ஷாக் ஆகிறார்கள். அதற்குப்பின் கிரிஷை அழைத்து அண்ணாமலை, உன்னை யார் அப்பா? என்று அழைக்க சொன்னார்கள் என்று கேட்கிறார். அதற்கு க்ரிஷ், ரோகினி தான் என்று கை காண்பிக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full