கிரிஷை வீட்டிற்கு அழைத்து வந்த முத்து, பயத்தில் தவிக்கும் ரோகினி- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சத்யா, வேலைக்கு தான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நல்ல வேலை கிடைத்தால் சேர்ந்து விடுவேன் என்றார். உடனே அருண், தனக்கு தெரிந்தவரின் மூலம் சத்யாவிற்கு ஒரு நல்ல வேலை வாங்கித் தந்தார். இதனால் மீனாவின் அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் மீனாவின் அம்மா, சத்யா, மீனா எல்லோருக்குமே அருண் துணி கொடுத்தார். இதை பார்த்து மீனாவின் அம்மாவிற்கு சந்தோசமாக இருக்கிறது. சீதாவிற்கு நல்ல வாழ்க்கை கிடைத்தது நினைத்து மீனா சந்தோஷப்பட்டார்.
இன்னொரு பக்கம் ரோகினி, நீத்துவின் ஹோட்டலுக்கு போனார். அப்போது ரவியிடம் ரோகினி சமையல் ஆர்டர் விஷயமாக பேச வந்தேன் என்று சொன்னார். ரவி சென்ற பிறகு ரோகினி, நீத்துவிடம் கல்யாணம் பற்றி பேசி இருந்தார். அதற்கு நீத்து, ரவி போல் மாப்பிள்ளை கிடைத்தால் பண்ணுவேன் என்று ரவியை பற்றி ரொம்ப புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் ரோகினி, சுருதி அம்மாவிற்கு ஃபோன் செய்து பேசி இருந்தார். இதனால் ஸ்ருதி அம்மாவிற்கு இன்னும் கோபம் வருகிறது. இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த மீனா, அருண் வீட்டில் நடந்ததை எல்லாம் முத்துவிடம் சொல்லி சந்தோஷப்பட்டார். அதற்கு பின் தன் மாமியார் சரியில்லை என்று மீனா வருத்தப்பட, முத்து ஆறுதல் சொன்னார்.
சிறகடிக்க ஆசை:
விஜயா, மீனாவிற்கு மாத்தி மாத்தி ஆர்டர் போட்டுக் கொண்டிருந்தார். இதை பார்த்து கடுப்பான முத்து, என்ன வேண்டும் என்று முதலில் சொல்லுங்கள். அவள் ஒன்னும் இந்த வீட்டு வேலைக்காரி இல்லை என்று மீனாவிற்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார். ஸ்ருதி, ரவி, அண்ணாமலை எல்லோருமே மீனாவிற்கு சப்போர்ட் செய்து பேசுவதால் விஜயாவால் எதுவுமே பேச முடியவில்லை. அதற்குப் பின் ஷோரூமில் ரோகினி, ஹோட்டலில் மேக்கப் போட பெரிய ஆர்டர் கிடைத்திருப்பதால் மனோஜை அழைத்தார். மனோஜ், தன்னுடைய அம்மா திட்டுவார் என்று பயந்து கொண்டு இருந்தார்.
கடந்த வாரம் எபிசோட்:
பின் முத்து, மீனாவின் கடைக்கு போனார். அங்கு மீனா- மூர்த்தி இருவருமே தெரிந்து கொள்ளாதவர்கள் போல் சண்டை போட்டுக் கொண்டார்கள். அந்த சமயம் பார்த்த அருண், முத்துவை பார்த்து முறைத்தார். பின் முத்து தன்னுடைய அப்பாவை அழைத்துக் கொண்டு பள்ளிக்குப் போனார். தன் அப்பாவை விட்டு வரும் வழியில் க்ரிஷ் அழுது கொண்டிருப்பதை முத்து பார்த்தார். அப்போது ஒருவர், வண்டிக்காரன் அந்த அம்மா மீது ஏற்றிவிட்டு சென்றுவிட்டான் என்றார். உடனே முத்து பதறி அடித்துக் கொண்டு கிரிஷ் பாட்டியை காரில் ஏற்றுக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு சென்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராணி லேகியத்தை கொண்டு வந்து ரோகினிடம் கொடுக்கிறார். ரோகினி, மனோஜ் தன்னிடம் சந்தோசமாக பேசி பழகுவது போல் கனவு காண்கிறார். அதற்குப்பின் முத்து, கிரிஷை அழைத்து வருகிறார். அதை பார்த்தவுடன் ரோகிணி பதறிப் போகிறார். முத்து வீட்டில் உள்ள எல்லோரையும் அழைக்கிறார். இதனால் ரோகினி, தன்னை பற்றி உண்மை தெரிந்து விட்டதா என்று ரொம்பவே பயந்து நிற்கிறார். அப்போது முத்து, கிரிஸ் பாட்டிற்கு அடிபட்டு இருக்கு. நான் அவரை ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டு கிரிஷை அழைத்து வந்தேன். பத்து நாட்களுக்கு கிரிஸ் இங்கே தான் இருப்பார் என்று சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
இதனால் விஜயா பயங்கரமாக கோவப்பட்டு திட்டுகிறார். ரோகினியா;
எதுவும் பேச முடியவில்லை. வீட்டில் உள்ள எல்லோருமே தங்குவதற்கு கிரிஷ் தங்குவதற்கு சம்மதம் செல்கிறார்கள். விஜயா மட்டும் ரொம்ப மோசமாக கிரிசையும் அவருடைய குடும்பத்தையும் பற்றியும் பேசுகிறார். கடைசியில் அங்கேயே கிரிஷ் தங்குக்கிறார். அதற்குப்பின் ரோகினி தன்னுடைய அம்மாவை பார்ப்பதற்காக ஹாஸ்பிடல் போகிறார். அங்கு ரோகினி, தன் அம்மாவைப் பற்றி விசாரிக்காமல் திட்டி கொண்டு இருக்கிறார். இதனால் கோபப்பட்டு அவருடைய அம்மா, ரோகினியை திட்டுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது