கிரிஷை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ரோகினி, உண்மையை அறிந்தாரா முத்து? சிறகடிக்க ஆசை

By subhashini · 15/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, உன்னை மாதிரி என்னால் குடும்பத்திற்கு துரோகம் செய்ய முடியாது. இவ்வளவு பொய்யா? உன்னிடம் உண்மையே இல்லையா? என்று பயங்கரமாக வெளுத்து வாங்கினார். லக்ஷ்மி தன் மகளுக்காக சப்போர்ட் செய்து பேசினார். ஆனால் மீனா அவர்களையும் திட்டி விட்டார். கடைசியில் மீனா, நான் உண்மையை வீட்டில் சொல்லத்தான் போகிறேன் என்றார். அப்போது ரோகினி, நீ உண்மையை சொன்னால் நான் செத்து விடுவேன் என்று மிரட்டினார்.

ரோகினி, மீனாவின் காலில் விழுந்து கெஞ்சி கதறினார். ஆனால், மீனா கேட்கவே இல்லை. பின் ரோகினி-கிரிஷ் உடன் ஆற்றில் குதிக்க சென்றார். அப்போது லட்சுமி, நீ உண்மையை சொன்னால் என் மகளும் என் பேரனும் செத்துவிடுவார்கள் என்றார். இதனால் மீனா எதுவும் சொல்லாமல் அங்கிருந்து அமைதியாக வந்து விட்டார். மீனா, வீட்டிலும் யாரிடமும் எந்த உண்மையையும் சொல்லவில்லை. ரோகினி பயத்தில் அமைதியாகவே இருந்தார். பின் கோயிலில் பூஜை நல்லபடியாக முடிந்து விட்டது. அந்த சமயம் வந்த சாமியாடி, உண்மை வெளிவந்துவிட்டது. ஆனால், நல்லவர் அந்த உண்மையை சொல்லப்போவதில்லை.

சிறகடிக்க ஆசை:

இருந்தாலுமே நீ சீக்கிரத்தில் மாட்டிக் கொள்வாய் என்றெல்லாம் ரோகினியை பார்த்து சொல்லிக் கொண்டிருந்தார். இதை பார்த்து மீனாவிற்கு கோபம் அதிகமானது. இன்னொரு பக்கம் லட்சுமி, கிரிஸ் இருவரும் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது லட்சுமி, மீனாவிற்கு தெரிந்த உண்மை மொத்த வீட்டிற்கு தெரிந்தால் ரோகினி நிலைமை என்ன ஆகுமோ? என்று தன் மகளைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து முத்து அங்கு வந்து விட்டார். பின் முத்து, எப்ப வந்தீர்கள் என்றெல்லாம் விசாரிக்கிறார். அதற்கு லட்சுமி, என் கணவருக்கு திதி கொடுக்கணும் என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து, லட்சுமி- கிரிஷ் இருவரையும் வீட்டில் அழைக்கிறார். முடிந்தவரை லட்சுமி முடியாது என்று மறுக்கிறார். இருந்தாலுமே முத்து கேட்கவில்லை. அவர்கள் இருவரையும் வீட்டிற்கு அழைத்து வருகிறார். இன்னொரு பக்கம் மீனா கோபத்தில் இருக்கிறார். ரோகினியிடம் உண்மையை சொல்ல சொல்கிறார். ரோகினி, நேரம் வரும்போது சொல்கிறேன். தயவு செய்து அமைதியாக இருங்கள் என்று கெஞ்சுகிறார். அந்த சமயம் பார்த்து லக்ஷ்மி, கிரிஷ் இருவரையும் முத்து வீட்டில் அழைத்து வருகிறார். இதை பார்த்து ரோகிணி ரொம்பவே பயந்து விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

மீனாவிற்கு அவர்களை பார்த்தவுடன் இன்னும் கோபம் அதிகமாகிறது. பின் அண்ணாமலை, பாட்டி எல்லோருமே அவர்களை வரவேற்கிறார்கள். அதற்குப்பின் வீட்டில் உள்ள எல்லோருமே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சாப்பிடும் போது மனோஜ், முட்டையை சோத்தில் மறைத்து வைத்துவிட்டு எனக்கு முட்டை வைக்கவில்லை என்று சொல்கிறார். உடனே, கிரிஷ் உண்மையை சொல்கிறார். இதனால் அண்ணாமலை, பாட்டி திட்டிக் கொண்டிருக்கிறார்கள். முத்து, இந்த வீட்டிலேயே பொய் சொல்லி மறைப்பது மனோஜ் தான் என்கிறார். இதையெல்லாம் கேட்டு ரோகிணி உள்ளுக்குள்ளே ரொம்பவே பதறிக் கொண்டு இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full