மீனாவுக்கு கிடைத்த வெற்றி, சதி வேலையை செய்தவரை கண்டுபிடிப்பாரா முத்து? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து-அருண் இடையே கோபமாக வாக்குவாதம் நடக்குது. இதையெல்லாமே முத்து வாக்குவாதம் செய்தார்கள். அருண், இங்கிருந்து கிளம்பவில்லை என்றால் போலீஸ் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார்கள் என்று மிரட்டி இருந்தார். வேறு வழியில்லாமல் முத்து தன்னுடைய நண்பர்களை அழைத்துக் கொண்டு சென்று விட்டார். இதையெல்லாம் தூரமாக நின்று பார்த்த சத்யா, மீனாவிற்கு போன் செய்து தகவல் சொன்னார். பின் முத்து வீட்டுக்கு குடித்து வந்ததை பார்த்த மீனா பயங்கரமாக சண்டை போட்டார். பிரச்சனை இருந்தால் குடிப்பது தான் தீர்வா? என்றெல்லாம் கோபப்பட்டார். ஆனால், முத்து வேதனையில் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார்.
மறுநாள் காலையில் முத்து, வீட்டு வேலையெல்லாம் செய்தார். இதை பார்த்த விஜயா ரொம்ப சந்தோஷப்பட்டு முத்துவை ஏளனம் செய்தார். இதனால் கோபத்தில் மீனா முத்துவைத் திட்டி இருந்தார்.
இதை பார்த்த விஜயா, ஷாக்காகி அமைதியாகி விட்டார். அதற்குப்பின் சிட்டி, ரோகினியை போன் செய்து வரவைத்தார். அப்போது சிட்டி, என்னிடம் ரொம்ப பழமையான நகை இருக்கு. இதன் மதிப்பு 3 லட்சம். ஆனால், எனக்கு ஒரு லட்சத்திற்கு தந்தார்கள். இதை நீங்கள் வாங்கி கொள்ளுங்கள். நீங்கள் செய்த உதவிக்கு தான் தருகிறேன். பணம் பொறுமையாக தாருங்கள் என்று சொன்னார். ரோகினியும் நம்பி விட்டார்.
சிறகடிக்க ஆசை:
தனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரி வீட்டிற்கு சென்று இருந்தார் மீனா. அஅங்கு அவர், உன் கணவன் குடித்துவிட்டு அருண் வீட்டின் முன்பு கல் எடுத்து அடித்து தகராறு செய்திருந்தார். இதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று முத்துவை திட்டி இருந்தார். பின் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த மீனா, அங்கு ஒரு போலீஸ் அதிகாரிக்கு தன் கணவரின் காரை ஓட்டி சென்று தான் அடிபட்டது என்ற உண்மை தெரிந்தது. பின் மீனா, அவரிடம் கெஞ்சி கேட்டு,அழுது புலம்பி உண்மையைக் கேட்டார். ஆனால், அவர் கீழே விழுந்ததாக பொய் சொன்னார். அதற்கு பின் வெளியே மீனா, கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு உதவி செய்தார். இதை அந்த போலீஸ் பார்த்தார்.
கடந்த வாரம் எபிசோட்:
அதற்குப்பின் முத்துவை போலீஸ் அழைத்து வந்தார்கள். மீனாவை போலீஸ் ஸ்டேஷனில் முத்து பார்த்தவுடன் கோபப்பட்டார்கள். பின் அந்த அதிகாரி, நீ அருண் வீட்டிலேயே கல் அடித்து பிரச்சனை செய்வாயா? என்று சொல்லி முத்துவை கைது செய்ய சொன்னார்கள். உடனே மீனா, போலீசிடமும் கெஞ்சி கதறி இருந்தார். அப்போது மனம் தாங்காமல் அந்த கையில் அடிபட்ட போலீஸ், உண்மையிலேயே வண்டியில் பிரேக் பிடிக்கவில்லை. அதன் மூலம் தான் எனக்கு அடிபட்டது என்று சொன்னார். அருண் வேண்டாம் என்று கண்ணால் சைகை பண்ணி இருந்தார். ஆனால், அந்த போலீஸ் கேட்காமல் உண்மையை சொல்லி விட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் போலீஸ் அதிகாரி, உண்மையிலேயே அந்த வண்டியில் பிரேக் பிடிக்கவில்லை. மெக்கானிக் ஒருவர் தான் என்னை காப்பாற்றி வண்டியையும் சரி செய்தார். இந்த விஷயத்தை நான் அருணிடம் சொன்னேன். அவர்தான் சொல்ல வேண்டாம் என்றார். இதனால் உயர் அதிகாரி அருண் மீது கோபப்பட்டு ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து விடுகிறார். அதற்குப்பின் முத்துவை விடுதலை செய்து அறிவுரை சொல்லி அனுப்புகிறார்கள். அதோடு மீனா தனக்காக கஷ்டப்பட்டதை நினைத்து முத்து சந்தோசப்படுகிறார். பின் வீட்டிற்கு வந்த முத்து, போலீஸ் ஸ்டேஷனில் நடந்த விஷயத்தை எல்லோரிடமும் சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் முத்து தானாக பிரேக் பிடிக்காமல் போகவில்லை. இந்த வீட்டில் இருந்து தான் யாரோ ஒருவர் என்னுடைய வண்டி சாவியை எடுத்துக் கொடுத்திருக்கிறார் என்று மனோஜை பார்க்கிறார். மனோஜ், நான் எதுவும் செய்ய வில்லை என்று உடன் ரோகினி பக்கம் திரும்புகிறார் முத்து. உடனே ரோகினி, எதற்கு என் மீது வீண் பழி போடுகிறீர்கள். எனக்கே 1008 பிரச்சனை இருக்கிறது. ஆண்டியிடம் தினமும் திட்டு வாங்கிக் கொண்டு இருக்கிறேன். இவர் மாட்டி வைத்த சாவியை நான் கொண்டு போய் கொடுத்தேனா? என்று கேட்கிறார். அதற்கு முத்து, நான் மாட்டி வைத்தேன் என்று சொல்லவே இல்லையே என்பதால் ரோகிணி திருத்திரு என்று விழிக்கிறார். முத்து உடன் சேர்ந்து சுருதியும் ரோகினியை கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். அண்ணாமலை, உண்மை தெரியாமல் தேவையில்லாமல் பேச வேண்டாம். அமைதியாக இருங்கள் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது