விஜயாவிடம் வசமாக மாட்டி கொண்ட ரோகினி, உண்மை வெளிவருமா? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 12/1/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் கதிரை கண்டுபிடிப்பதற்காக நடிகரின் வீட்டிற்கு முத்து-மீனா இருவருமே போனார்கள். அப்போது முத்து, பங்களா விஷயத்தை பேசிய உடன் அந்த நடிகர், கதிர் பற்றி சொன்னார். உடனே முத்து, தன்னுடைய அண்ணன் ஏமாந்த உண்மையை எல்லாம் சொல்ல, அவர் ஆறுதல் சொல்லி கதிர் பற்றி தனக்கு தெரிந்த விஷயத்தை சொன்னார். அந்த சமயம் பார்த்து சிந்தாமணி வந்தார். பின் அந்த நடிகர், மீனா-சிந்தாமணிக்கு வேலையை பிரித்து கொடுத்தார். இதனால் கோபத்தில் சிந்தாமணி, மீனாவுக்கு சவால் விட, பதிலுக்கு பதில் முத்துவும் சவால் விட்டார்.

இன்னொரு பக்கம் வீட்டில் மீனா, கதிர் விஷயமாக தான் நாங்கள் போயிருந்தோம். கூடிய விரைவில் கண்டுபிடிப்போம் என்று சொன்னவுடன் ரோகினி, இனி நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் அதை விடுங்கள் என்று சொன்னார். நேற்று எபிசோட்டில் மீனா, எதற்கு வேண்டாம் என்று சொல்கிறீர்கள் என்று கேட்டவுடன் ரோகினி, இனிமேல் கதிரை நாங்கள் கண்டுபிடித்துக் கொள்கிறோம். முத்து கண்டுபிடித்தாலுமே மனோஜை மட்டம் தட்டி பேசுவார் என்று சொன்னவுடன் முத்து சண்டை போட்டார். அதற்குப்பின் முத்து- மீனா இருவருமே ரோகினி சொன்னதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

சிறகடிக்க ஆசை:

அதற்கு பின் முத்து-மீனா இருவரும் சத்யாவை சந்தித்து ரோகினி கடன் வாங்கிய விஷயத்தை பற்றி விசாரிக்க சொன்னார்கள். இன்னொரு பக்கம் வித்யாவின் வீட்டிற்கு சென்ற ரோகினி, சிட்டியிடம் கடன் வாங்கிய விஷயம் முத்துவிற்கு தெரிந்து விட்டது. இனிமேல் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லி சிட்டியை தனியாக பேச அழைத்தார். அப்போது ரோகினி, கதிர் விசயத்தை சொல்ல, இது தான் சந்தர்ப்பம் என்று சிட்டி நினைத்தார். பின் ரோகினி, கோயிலில் அவனுடைய வீடியோ ரெக்கார்டு ஆகி இருக்கும். அவனை அடையாளம் காண்பிக்கிறேன் கண்டுபிடியுங்கள் என்று சொல்ல, சிட்டியும் ஒத்து கொண்டார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோடில் மலேசியாவில் இருந்து வந்த வயதானவர்களை முத்து சவாரிக்கு அழைத்து வந்தார். அவர்கள் தங்களுக்கு 60-வது கல்யாணம் நாள் என்று சொன்னவுடன் முத்து மீனாவிடம் சொல்லி கோயிலில் ஏற்பாடு செய்தார். இன்னொரு பக்கம் சிட்டி, மீனா அம்மா வேலை செய்யும் கோவிலுக்கு சென்று கதிர் வீடியோவை கேட்க, அவர்கள் முடியாது என்று மறுத்தார்கள். இதையெல்லாம் பார்த்து மீனாவின் அம்மா, சத்யாவிற்கு சந்தேகம் வந்தது. இதைப் பற்றி அவர்கள் மீனாவிடமும் சொன்னார்கள்.

சீரியல் ட்ராக்:

அந்த சமயம் பார்த்து முத்து வந்த உடன் கோயிலில் அந்த வயதானவர்களுக்கு பூஜை நடந்தது. அதற்குப்பின் முத்து, இவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்து வைக்கலாம் என்று சொன்னார். உடனே மீனா, இவர்களும் மலேசியாவில் இருந்து வந்தவர்கள் தானே, ரோகினி அப்பாவை பற்றி விசாரிக்கலாம் என்றார். அதற்கு முத்து, சூப்பர் ஐடியா என்றார். இன்னொரு பக்கம் சிட்டி, கோயிலில் வீடியோ கிடைக்கவில்லை. நீங்களே ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று சொன்னார். அதற்கு ரோகினி, உன்னை யாராவது பார்த்து விட்டார்களா? என்று கேட்க, மீனாவின் அம்மா-சத்யா எல்லாம் பார்த்தார்கள் என்று சொன்னவுடன் ரோகினி
பயந்தார்.

https://www.youtube.com/watch?v=MSOxw4VUzRg

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் தன்னுடன் சவாரிக்கு வந்த வயதானவர்களை வீட்டிற்கு அழைத்து வருகிறார் முத்து. பின் அவர்களிடம் அண்ணாமலை விசாரிக்கிறார். அவர்கள், நாங்கள் மலேசியா என்று சொன்னவுடன் விஜயா வாயை பிளக்கிறார். உடனே விஜயா, என் மருமகளும் மலேசியா தான் என்று சொல்ல, மலேசியாவில் ரோகினி அப்பா இருக்கும் இடத்தை சுருதி சொல்கிறார். அவர்கள், எந்த இடம் சரியாக சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள். உடனே விஜயா, ரோகினியின் கதவை தட்டி அவரை கூப்பிடுகிறார். என்ன சொல்வது என்று புரியாமல் ரோகினி பயத்தில் உள்ளுக்குள்ளே தவித்துக் கொண்டிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full