கண் பார்வையை இழந்தாரா மனோஜ்? வேதனையில் தவிக்கும் ரோகினி, விஜயா - சிறகடிக்க ஆசை

By subhashini · 1/3/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' டயட் ஃபுட் எடுத்துக் கொண்டதால் விஜயா-மனோஜிற்கு ஒத்துக்கவில்லை. ஆனால், மீனா தான் அதற்கு காரணம் என்று விஜயா வழக்கம்போல் மீனாவை திட்டி இருந்தார். பின் விஜயா- மனோஜ் இருவருமே இனிமேல் டயட் ஃபாலோ பண்ண வேண்டாம் என்று முடிவு எடுத்தார்கள். அதற்கு பின் மீனா, இருவருக்கும் கஷாயம் வைத்து கொடுத்தார். மறுநாள் காலையில் சீதா கோயிலில் தன் அம்மாவிற்கு உதவி செய்து கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து அருண் தன் அம்மாவை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வந்தார்.

அப்போது சீதாவிடம் அருண் தன்னுடைய காதலை வெளிப்படுத்த, சீதா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார். அருண், பொறுமையாக யோசித்து முடிவு சொல்லுங்கள் என்று அங்கிருந்து கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் மனோஜ் ஷோரூமில் மலேசியா மாமா தலையில் ஹெல்மெட் மாட்டிக் கொண்டு பொருட்களை எல்லாம் வாங்க வந்தார். இதை பார்த்தவுடன் ரோகினி பயந்து கொண்டு திட்டி இருந்தார். அந்த சமயம் பார்த்து முத்து, அண்ணாமலை கடைக்கு வந்தார்கள். மலேசியா மாமா ஹெல்மெட் போட்டு கொண்டார்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் மலேசியா மாமா தலையில் ஹெல்மெட் போட்டதால் எப்படியோ முத்துவிடம் இருந்து தப்பித்து விட்டார். இன்னொரு பக்கம் மனோஜ் போனில் பேசிக் கொண்டு வரும்போது தன்னை ஏமாற்றிய கதிரை பார்த்து விட்டார். உடனே அவரை துரத்தும் மனோஜ், வரும் வழியில் இருக்கும் ஆட்கள் எல்லாம் தள்ளி, அடித்து விட்டு போனார். இதனால் அவர்களும் மனோஜை துரத்திக் கொண்டே வந்தார்கள். ஒரு கட்டத்தில்
மனோஜ் அந்த ஆட்களுக்கு பயந்து ஓடி வரும் போது எதிர்பாராத விதமாக வண்டியின் மீது மோதி விட்டார். அதில் அவருடைய கண்களில் கண்ணாடி துண்டுகள் இறங்கி விட்டது.

நேற்று எபிசோட்:

பின் ரோகினி, மனோஜ்க்கு ஆக்ஸிடெண்ட் ஆன விஷயத்தை சொன்னவுடன் விஜயா பயங்கரமாக கதறி அழுதார். பின் குடும்பமே பதறி அடித்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு போனார்கள். அப்போது டாக்டர், ஆபரேஷன் முடிந்தது. கண் கட்டை திறந்த பிறகு தான் என்ன என்று சொல்ல முடியும் என்றார். இதனால் ரோகினி, விஜயா இருவரும் வேதனையில் அழுது கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து மனோஜை துரத்தி வந்த நபர்கள் முத்துவிடம் பணத்தை கேட்க, பின் நடந்ததை விசாரித்த முத்து, எல்லோருக்கும் பணத்தை கொடுத்து அனுப்பி விட்டார். யாரை துரத்துவதற்காக மனோஜ் ஓடி வந்தான் என்று முத்து-மீனா இருவருமே யோசித்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் டாக்டர், மனோஜ்க்கு இன்னும் சில டெஸ்ட் எடுக்க வேண்டி இருக்கு. அது முடிந்தவுடன் தான் ரிசல்ட் சொல்ல முடியும் என்று என்றவுடன் ரோகினி இன்னும் ரொம்ப வேதனைப்படுகிறார். அதற்குப்பின் எல்லோரும் மனோஜை பார்க்கிறார்கள். மனோஜ் ரொம்ப எமோஷனலாக பேசுகிறார், எல்லோருமே அவருக்கு ஆறுதல் சொல்கிறார்கள். அந்த சமயம் பார்த்து போலீஸ், மனோஜை
பார்க்க வருகிறது. அப்போது மனோஜ், நான் கதிரை துரத்தி போனேன். அப்போதுதான் எதிர்பாராமல் எல்லோர் மேலையும் மோதிட்டேன் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

உடனே போலீஸ், அந்த கதிரை நாங்கள் கண்டுபிடிக்கிறோம் என்று சொல்கிறார். பின் டிராபிக் போலீஸ் இடம் முத்து மன்னிப்பு கேட்டு அனுப்பி வைக்கிறார். அதற்குப்பின் மனோஜ், எனக்கு இனிமேல் பார்வை வராதா? என்னால் யாரையும் பார்க்க முடியாதா? என்று ரொம்ப எமோஷனலாக பேச, ரோகினி அவருக்கு ஆறுதல் சொல்லி பேசுகிறார். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் 75 ஆயிரம் ரூபாய் பில் கட்ட சொல்கிறர்கள். என்ன செய்வதென்று புரியாமல் முத்து -மீனா இருவருமே தவிக்கிறார்கள். யாரிடமும் அதைப்பற்றி சொல்லாமல் இருவருமே பணத்தை ரெடி பண்ண பார்க்கிறார்கள். மறுநாள் காலையில் ஹாஸ்பிடலுக்கு போவதற்காக விஜயா, மீனாவை கூப்பிடுகிறார். ஆனால், அவர் வீட்டில் இல்லை. வழக்கம் போல் மீனாவை திட்டிக் கொண்டிருக்கிறார் விஜயா. இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full