பீதியை கிளப்பிய வித்யா, முத்துவிடம் சிக்குவாரா ரோகினி? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ் பாட்டு பாடியதால் கடுப்பான சுருதி கதவைத் தட்டி வாயை மூடி அமைதியாக தூங்குங்கள் என்று திட்டி விட்டார். அதற்குப்பின் க்ரிஷ், ரோகினிக்கு போன் செய்து வீட்டிற்கு வாருங்கள் என்கிறார். இன்னொரு பக்கம் நீத்து, ஹோட்டலில் வியாபாரம் குறைகிறது. அதற்கு காரணம் நீங்கள் உங்கள் மனைவி ஹோட்டலை பிரபலப்படுத்த இங்கு சரியாக வேலை செய்யவில்லையா? ஏன் ஒழுங்காக சமைக்க வில்லை? என்றெல்லாம் வேண்டுமென்று வம்பு இழுத்தார். இதனால் ரவி கோபப்பட்டு அங்கிருந்து சென்றார். பின் நீத்து, ஸ்ருதி ஹோட்டலை காலி செய்ய திட்டம் போடுகிறார்.
அதற்குப்பின் முத்து, புதிதாக கல்யாணமான வித்யா- முருகனுக்கு விருந்து கொடுக்க வீட்டிற்கு அழைப்பதாக சொன்னார். இதை கேட்டு வழக்கம் போல விஜயா தாண்டவம் ஆடினார். இதனால் முத்து, ஸ்ருதி ஹோட்டலில் விருந்து வைக்க ஏற்பாடு செய்தார். இதை அறிந்த ரோகினி, வித்யாவிற்கு போன் செய்து என்னைப் பற்றி எதுவும் சொல்லாதே என்றார். அதற்கு வித்யா, எனக்கு வேற வேலை இல்லையா? நான் ஜாலியாக இருக்க போகிறேன். உன்னை பற்றி ஏன் பேசணும் என்று நக்கலாக பதில் சொல்லி போனை வைத்து விட்டார்.
சிறகடிக்க ஆசை:
அதற்குப்பின் கிரிஸ், ஸ்கூலில் எஸ்ஏ எழுதி வர சொல்லி இருக்கிறார்கள். ஆனால், என்னால் எழுத முடியவில்லை. அப்பாவை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. என்னுடைய அப்பா மனோஜ் தான் என்று எழுதிக் கொள்ளட்டுமா? என்றார். இதைக் கேட்டு ரோகிணி ரொம்பவே எமோஷனல் ஆனார். அதற்குப்பின் லட்சுமி, உன்னுடைய அப்பாவின் நினைவு நாள் வருகிறது. ஊருக்கு போய் திதி கொடுத்துவிட்டு வரலாம் என்று சொன்னார். அதற்கு ரோகிணி, தீபாவளிக்கு நாங்கள் பாட்டி ஊருக்கு போகிறோம். அதனால் வர முடியாது என்றார். உடனே லட்சுமி, அந்த ஊருக்கு பக்கத்தில் தான் அப்பாவுடைய சொந்த ஊர் இருக்கிறது என்று கெஞ்சி கேட்கிறார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோடில் க்ரிஷ், கட்டாயப்படுத்தியதால் ரோகிணி தன் அப்பாவின் ஊருக்கு செல்ல ஒத்துக் கொள்கிறார். அதற்குப்பின் முருகனின் உறவினர்கள் ஹாஸ்பிடலுக்கு செல்ல டிரைவர் வேண்டும் என்பதால் முத்துவை பற்றி முருகன் சொல்கிறார். பின் முருகன், சவாரி இருக்கு போக முடியுமா? என்று முத்துவிடம் கேட்கிறார். அதற்குப்பின் தங்களுக்கு தெரிந்த தாத்தா, பாட்டிக்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்த உடன் முத்து, மீனாவை அவர்கள் இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைக்கிறார். அதற்குப்பின் க்ரிஷ் அப்பாவின் உறவினர்கள் லட்சுமிக்கு ஃபோன் செய்து ரோகினி இடம் பேசுவதற்கு கேட்கிறார்கள். இதைப் பற்றி லட்சுமி, ரோகினி இடம் சொன்னவுடன் பயங்கரமாக கோபப்படுகிறார்.
சீரியல் ட்ராக்:
பின் கிரிஷ் அப்பாவின் உறவினர்கள், ரோகினிக்கு போன் செய்து பேசுகிறார்கள். ஆனால், ரோகினி அவர்களை கண்ட மேனிக்கு திட்டி போனை வைத்து விடுகிறார் அதற்குப்பின் முருகன், தனக்கு தெரிந்த உறவினர் வீட்டுக்கு முத்துவை அழைத்து வருகிறார். ஆனால், அவர்கள் கிரிஷ் அப்பாவின் உறவினர்கள் தான். ஆனால், இந்த விஷயம் முத்து- முருகனுக்கும் தெரியாது. பின் வித்யா அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது எல்லா உண்மையும் தெரிந்து கொள்கிறார். பின் வித்யா, நீ சீக்கிரமாகவே மாட்டிக்கொள்ளப் போகிறாய். முத்து சவாரி ஒட்டுவது க்ரிஷ் அப்பாவுடைய உறவினர்களை தான். எல்லா உண்மையும் தெரிந்து விடப் போகிறது என்றெல்லாம் சொல்வதால் ரோகிணி ரொம்பவே பயப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.