விஜயாவின் முகத்திரையை கிழித்த ஹரணி குடும்பம், முத்துவிடம் மீனா அம்மா சொன்னது - சிறகடிக்க ஆசை

By subhashini · 20/4/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ஆட்டோவில் மனோஜ், ஹரிணி இருவரும் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது ஆட்டோவில் செல்வது செட் ஆகாதால் ஹரணிக்கு வாந்தி வந்து விட்டது. மனோஜ் கேரிங்காக ஹரிணியை பார்த்து கொண்டார். அதை பார்த்து ரோகிணிக்கு கோபம் வருகிறது. மனோஜ் இல்லாத நேரம் பார்த்து ஹரணியிடம் ரோகிணி பேசி இருந்தார். இன்னொரு பக்கம் சிந்தாமணி, சத்யா- ரேகா இருவரும் காதலிக்கும் விஷயத்தை பற்றி தன்னுடைய கணவரிடம் சொல்லி கோபப்பட்டார்.

சிந்தாமணி, அந்த சத்யா சரியில்லை.அவன் ஏற்கனவே திருட்டு வேலை செய்திருந்தவன். இப்போதுதான் அவன் வேலைக்கு வந்திருக்கிறான். அவன் குடும்பமே மோசமான குடும்பம் என்று ஒன்றுக்கு இரண்டாக ஏற்றி விட்டார். ரேகாவின் அப்பாவும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். ஒரு கட்டத்தில் சிந்தாமணி, ரேகாவை வேறு ஒரு இடத்திற்கு அனுப்பி வையுங்கள். அவள் வெளியே இருந்தால் காதலை மறந்து விடுவாள் என்றார். இன்னொரு பக்கம் சுருதியின் ஓட்டலுக்கு முத்து, மீனா, மனோஜ், ஹரிணி, ஸ்வேதா எல்லோருமே சென்று இருந்தார்கள்.

சிறகடிக்க ஆசை:

ஹரணிக்கு, ஸ்ருதியின் ஹோட்டல் ரொம்பவே பிடித்து விடுகிறது, பாராட்டினார். ஆனால், மனோஜ் வழக்கம்போல எல்லோரையும் கிண்டல் செய்தார். ஹரணிக்கு பிடிக்கவே இல்லை. அதற்குப்பின் ஹரிணி சாப்பிட்டார். மனோஜ் ஓவராக சீன் போட்டு கிண்டல் கேலி செய்தார். ஒரு கட்டத்தில் கடுப்பான ஹரிணி மனோஜை திட்டி விட்டார். அதற்குப்பின் ஹரிணி, ரோகினியின் பார்லருக்கு சென்றார். அங்கு ரோகினியின் மொபைலில் மனோஜ் போட்டோவை பார்த்த ஹரிணி விசாரித்தார். அதற்கு ரோகிணி, இவர்தான் என்னுடைய கணவர் என்றார். உடனே ஹரிணி, இவருடன் தான் எனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது என்றார். ரோகிணி அழுது டிராமா போட்டு நடித்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரோகினி, இன்னும் எங்களுக்கு விவாகரத்து கிடைக்கவில்லை. அதற்குள் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா? என்று அழுகிறார். பின் கோர்ட்டில் நடந்ததை எல்லாம் ரோகினி ஹரணியிடம் சொல்கிறார். இன்னொரு பக்கம் முத்துவை சந்தித்த மீனாவின் அம்மா, ரேகா நம்ம குடும்பத்துக்கு வேணாம். அவங்க அம்மாவால் நிறைய பிரச்சனை வரும். தயவுசெய்து உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார். உடனே முத்து, இதைப்பற்றி மீனாவிடம் விசாரிக்கிறார். மீனா, நான் தான் நடந்ததை எல்லாம் அம்மாவிடம் சொன்னேன் என்கிறார்.

சீரியல் ட்ராக்:

முத்து, எதற்குள் அவசரப்படுகிறாய்? சிந்தாமணி செய்த தவறுக்கு ரேகா என்ன செய்வாள் என்று எடுத்து சொல்லி புரியவைக்கிறார். ஆனால், மீனா கேட்கவில்லை. அதற்குப்பின் முத்து, மீனாவிற்காக தங்க தாலி செயினை வாங்கி தருகிறார். வழக்கம் போல விஜயா ஏளனம் செய்கிறார். அந்த சமயம் பார்த்து ஹரணியின் குடும்பம் வருகிறார்கள். அப்போது ஸ்வேதா, நீங்கள் இப்படி செய்வீர்கள் என்று நினைத்து பார்க்கவில்லை என்கிறார். ஹரணியின் அப்பா, அம்மா இருவருமே அண்ணாமலையை பார்த்து நீங்களும் இவ்வளவு பெரிய பொய் பித்தலாட்டம் செய்வீர்கள் என்று நினைக்கவில்லை என்று ரொம்ப மோசமாக பேசி விடுகிறார்கள். இதனால் அண்ணாமலைக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. விஜயா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full