கிரிஷ் சொன்ன வார்த்தையை கேட்டு உடைந்து போன ரோகினி, சிந்தாமணி போட்ட சவால் - சிறகடிக்க ஆசை
கிரிஷ் சொன்ன வார்த்தையை கேட்டு உடைந்து போன ரோகினி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ஜோதிடர், இனிமேல் உங்கள் எல்லோரையும் இப்படி தான் கூப்பிடனும் என்றார். இன்னொரு பக்கம் ரேகா-சத்யா இருவரும் கிராமத்தை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது கிராம மக்கள் எல்லோருமே ரேகா- சத்யா இருவரும் போட்டோ, ரீல்ஸ் எல்லாம் போடுவதைப் பார்த்து கோபப்பட்டு பாட்டியிடம் கம்ப்ளைன்ட் செய்தார்கள். பாட்டி, உங்கள் பிள்ளைகள் போனை பார்த்து கெட்டுப் போவதை விட இவர்கள் ஊரை சுற்றி பார்ப்பது மூலம் தான் கெட்டுக் போகிறார்களா? என்று திட்டி ஊர் மக்களை விரட்டினார்.
மனோஜ், தன்னுடைய அம்மாவை தனியாக அழைத்து ஜோதிடர் சொன்ன விஷயத்தை எல்லாம் சொன்னார். விஜயாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. பின் மனோஜ், என்னுடைய பெயரை பப்பரப்பா மனோஜ் என்ற அழைத்தால் என்னுடைய வியாபாரம் கோடி கணக்கில் போகும். தயவு செய்து வீட்டில் எல்லோரையும் அப்படியே கூப்பிட சொல்லுங்கள் என்றார். விஜயாவும் இதைப்பற்றி வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொன்னார். மனோஜ் உடைய புதிய பெயர் கேட்டவுடன் வீட்டில் உள்ள மொத்த பேரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இதனால் கொந்தளித்த விஜயா எல்லோரிடமும் சண்டை போட்டார்.
சிறகடிக்க ஆசை:
முத்து, பப்பரப்பா மனோஜ் என்று கிண்டலாகவே சொல்லி கூப்பிட்டார். இன்னொரு பக்கம் கிரிஷ் ஸ்கூலில் ஒழுங்காக படிக்காமல், பொய் பேசுதல், ரவுடித்தனம் செய்கிறான், ஏமாற்றுகிறான் என்று புகார் கொடுத்தார்கள். இதை ரோகினி இடம் அவருடைய அம்மா சொன்னார். இதைக்கேட்டு ஷாக் ஆன ரோகிணி, கிருஷிடம் விசாரித்தார். ஆனால், கிரிஷ் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். ரோகினி அம்மா, நீ ஒழுங்கா குழந்தையை கவனி. அவனை கண்டுகொள்ளாததால் இப்படி எல்லாம் செய்கிறான் என்றெல்லாம் அறிவுரை சொன்னார். ஆனால், ரோகிணி அதை கேட்டுக் கொள்ளவில்லை.
இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோட்டில் ரோகிணி, யாரிடம் இப்படி பொய் பேச கற்றுக் கொண்டாய்? எதற்காக இப்படி செய்கிறாய் என்று கேட்டார். கிரிஷ், உன்னிடம் தான் நான் கற்றுக் கொண்டேன். நீ தான் என்னை பொய் பேச சொன்னாய். என்னிடம் எல்லாரிடமும் நீ கோபப்படுகிறாய் என்று ரோகிணி தவறை சுட்டிக்காட்டுகிறார். எதுவும் பேசாமல் அங்கிருந்து அழுது கொண்டே ரோகினி வெளியே வந்து விடுகிறார். பின் தன் மகனின் வாழ்க்கை தன்னாலே கெட்டுப் போனது நினைத்து ரோகினி வருத்தப்படுகிறார். அது மட்டும் இல்லாமல் தன் மகனை நல்ல வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்றெல்லாம் ரோகினி நினைக்கிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் முத்து-மீனா இருவரும் சத்யா- ரேகா இருவருக்கும் திருமணம் செய்வது பற்றி வீட்டில் பேசுகிறார்கள். விஜயா, சீக்கிரமாகவே திருமணம் ஏற்பாடு செய். அந்த சிந்தாமணி முகத்தில் கறியை பூச வேண்டும் என்று சொல்கிறார். பின் தாம்பூல தட்டோடு சிந்தாமணியின் வீட்டிற்கு சென்று ரேகா-சத்யா திருமணத்தை பற்றி முத்து-மீனா பேசுகிறார்கள். இதனால் கொந்தளித்த சிந்தாமணி, என்னை மீறி நீ எப்படி திருமணத்தை நடத்துகிறாய்? என்று சவால் விடுகிறார். முத்து, கண்டிப்பாக இந்த திருமணம் நடக்கும் என்று பதிலுக்கு சவால் விட்டு வருகிறார்.