பேய் வேஷம் போட்டு ரோகினி செய்யும் அட்ராசிட்டி, பீதியில் தவிக்கும் மனோஜ் - சிறகடிக்க ஆசை

By subhashini · 8/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, சிந்தாமணி ஆட்களை வைத்து கடத்திருக்கிறார். அதனால் தான் அவன் அப்படி இருக்கிறான். சிந்தாமணி வெறும் அம்பு தான். அதை ஏவி விட்டது அம்மாதான் என்றார். வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆனார்கள். விஜயாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை பயந்து கொண்டிருந்தார். பின் அண்ணாமலை, என்ன காரியம் செய்தாய்? என்று கேட்டார். அதற்கு விஜயா, எனக்கு அவன் இங்கு இருப்பது பிடிக்கவில்லை. அதனால் தான் இப்படி செய்தேன் என்றார். கோபத்தில் அண்ணாமலை விஜயாவை அடிக்கப் போனார்.

முத்து தடுத்து விட்டார். பின் அண்ணாமலை, போலீசுக்கு போன் செய்து விஜயாவை கைது செய்ய சொன்னார். வீட்டில் எல்லோருமே கேட்டுக் கொண்டதால் அண்ணாமலை அமைதியாகி விட்டார்.
அதற்குப்பின் விஜயா, சிந்தாமணியிடம் ஃபோன் செய்து முத்து அந்த பையனை காப்பாற்றி விட்டான் என்று திட்டி விட்டார். இன்னொரு பக்கம் மீனா, கிரிஷை வீட்டுக்கு கொண்டு வருவது தான் என்னுடைய வேலை. அவன் உன்னுடைய அறையில் தூங்க வைத்து மனோஜுடன் பழக வைப்பது உன்னுடைய வேலை. சீக்கிரம் அந்த வேலையை செய்து முடி. வீட்டில் உண்மையைச் சொல்ல பாரு என்றார்.

சிறகடிக்க ஆசை

மனோஜ், கிரிஷ் இங்க இருக்க கூடாது. இருந்தால் தேவையில்லாத பிரச்சினை வரும். ஒழுங்கு மரியாதையாக எங்கேயாவது கொண்டு போய் விடுங்கள் என்று கோபத்தில் முத்துவை திட்டி இருந்தார். இன்னொரு பக்கம் நீத்து, ரவியை ஹக் செய்து இருக்கும்மாறு எடுத்த போட்டோவை ஸ்ருதிக்கு கடுப்பேற்ற அனுப்பி விட்டார். ஸ்ருதி, ரவிக்கு போன் செய்து எனக்கு எதற்கு இப்படி எல்லாம் போட்டோ அனுப்பனும்.என்றார். உடனே ரவி, என்னுடைய பர்சனல் வாழ்க்கையில் நீங்கள் தலையிட வேண்டாம். ரெஸ்டாரன்ட் சம்பந்தமாக மட்டும் பேசுங்கள். தேவையில்லாமல் ஸ்ருதிக்கு மெசேஜ் அனுப்பாதீர்கள் என்றெல்லாம் நீத்துவிடம் சொன்னார்.

சீரியல் ட்ராக்:

அதற்கு பின் வீட்டில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். மீனா, கிரிஷை எழுப்பி ரோகினியிடம் தூங்க வைப்பதற்கு அனுப்பி வைத்தார். கிரிஷ் ரோகிணியுடன் சேர்ந்து தூங்கினார். காலையில் க்ரிஷ் பக்கத்தில் படுத்திருப்பதை பார்த்த மனோஜ் கத்திக்கொண்டு வீட்டில் பிரச்சினையை செய்தார். விஜயா, மீனாவையும் கிரிஷையும் திட்டிக் கொண்டிருந்தார். பின் அண்ணாமலை, விஜயாவை திட்டி அறிவுரை சென்றார். அதற்குப்பின் சிந்தாமணி, விஜயா, ரோகினி மூவருமே பார்வதி வீட்டிற்கு சென்று மீண்டும் கிரிஷை என்ன செய்வது என்று திட்டம் போடினார்கள். இதை பார்த்து ரோகினிக்கு கோபம் தான் வந்தது.

https://www.youtube.com/watch?v=zNX4C7_kKnw

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் மீனா, கிரிஷை உன்னுடன் வைத்து கொண்டு நீ தான் மனோஜ்க்கு பிடிக்குமாறு செய்ய வேண்டும். மீண்டும் என்னை பேச வைக்காதே. செத்துப்போன ஆவி என் உடம்பில் வந்துவிட்டது என்று ட்ராமா எல்லாம் போடாதே என்று சொல்கிறார். உடனே ரோகினி உடம்பில் கிரிஸ் அம்மாவின் ஆவி வந்துவிட்டது போல டிராமா செய்து மனோஜை பயமுறுத்துகிறார்.

behindtalkies AMP · Quick view
View full