விஜயாவுக்கே விபூதி அடித்த நீத்து, ரோகினி செய்யும் சதியில் சிக்கிய மனோஜ் - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 23/2/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலை, கிரிஷை வேறு வழியில் சந்திக்கலாம். ரோகினி வீட்டிற்கு போக வேண்டாம் என்றார். இன்னொரு பக்கம் நீத்துவை சந்திக்க சுருதியின் அப்பா- அம்மா இருவரும் போனார்கள். நீத்து வழக்கம் போல ரவியை காதலிப்பதாக சொல்லிக் கொண்டிருந்தார். கோபத்தில் ஸ்ருதியின் அப்பா, இந்த ஊரை விட்டு சென்று விடு. என் மகளின் வாழ்க்கையில் தலையிடாதே என்றெல்லாம் மிரட்டினார். அதற்கு எல்லாம் பயப்படாமல் நீத்து சவால் விட்டார். இன்னொரு பக்கம் ரோகினியை சந்தித்த சிந்தாமணி, கிரிஷுக்கு மனோஜ் ஞாபகம் இருப்பதாக சொல்லி மனோஜை உன் பக்கம் கொண்டு வா என்றார்.

சிந்தாமணி, ரோகினியிடம் பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து சத்யா, ரோகினியின் வீட்டிற்கு வந்துவிட்டார். உடனே சிந்தாமணி ஒளிந்து கொண்டார். அப்போது சத்யா, அக்கா- மாமா இருவரும் கிரிஷிடம் பேச வேண்டும் என்று சொன்னார்கள். அதனால் தான் வீடியோ காலில் காண்பிக்க வந்தேன் என்றார். பின் வீடியோக்களில் முத்து-மீனா இருவரும் கிரிஷிடம் பேசி இருந்தார்கள். இன்னொரு பக்கம் மனோஜ் தூக்கத்திலேயே ரோகிணியிடம் பேசிக் கொண்டிருப்பது போல கனவு காண்கிறார். ரோகினின் பெயரை சொல்லிக் கொண்டிருப்பதால் கோபத்தில் விஜயா, மனோஜை அடித்து எழுப்பினார்.

சிறகடிக்க ஆசை:

அதற்குப்பின் ரூம் கிடைத்ததால் முத்து ஃபர்ஸ்ட் நைட் செட்டப்பில் ரூமை தயார் செய்து வைத்திருக்கிறார்.
முத்து-மீனா இருவரும் சந்தோஷமாக இருந்தார்கள். பின் மனோஜின் மொபைலுக்கு ஒரு வீடியோ வந்திருக்கிறது. அதில் ரோகினி, மனோஜ் இருவரும் சேர்ந்து நடனமாடியது போல இருக்கிறது. அதை விஜயா பார்த்து கோபப்பட்டார். பின் மனோஜிடம் விசாரிக்கிறார்., அது ai வீடியோ. நான் ஆடவில்லை என்றார். இருந்தாலும் விஜயா நம்பவில்லை. மனோஜை புரட்டி எடுத்து அடித்தார். பின் இதைப்பற்றி முத்துவிடம் விஜயா சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜயா, ரொம்ப பெருமையாக மனோஜை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், நீத்து அதை கண்டுகொள்ளாமல் ரவியை பற்றி தான் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் விஜயா, மனோஜை நீ திருமணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்கிறார். அதற்கு நீத்து, ரவிக்கு விவாகரத்து வாங்கி தந்து சுருதியை உங்கள் வீட்டை விட்டு அனுப்பி விடுங்கள். நானும் ரவியும் கல்யாணம் செய்து கொள்கிறோம் என்கிறார். இதனால் கடுப்பான விஜயா அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் மனோஜின் கடைக்கு சென்ற குறி சொல்பவர், மனோஜ் வாழ்க்கையில் நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லி மீண்டும் உங்கள் மனைவியை தான் நீங்கள் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்று சொல்கிறார். அதைக் கேட்டு டென்ஷன் ஆனா மனோஜ், அந்த குறி சொல்பவரை திட்டி அனுப்பி விடுகிறார். பின் ரோகிணியை சந்தித்த குறி சொல்பவர், நீங்கள் சொன்னது போலவே பேசிவிட்டேன். சிந்தாமணி அம்மாவிற்கு நான் விசுவாசமாக இருப்பேன் என்றெல்லாம் சொல்கிறார். இதனால் ரோகிணி ரொம்பவே சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் நிலா வேலை செய்யும் இடத்திற்கு சத்யா, ரேகா இருவரும் வருகிறார்கள். அப்போதுறை ஒரு புது ஆர்டரை ரேகா கொடுக்கிறார். மீனாவும் சந்தோஷமாக அதை ஏற்றுக் கொள்கிறார். அப்போது அங்கு வந்த சிந்தாமணி, ரேகாவை திட்டுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full