ரோகினியின் மாஸ்டர் பிளான், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் முத்து - சிறகடிக்க ஆசை

By subhashini · 6/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கிரிஸ், அப்பாவை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. என்னுடைய அப்பா மனோஜ் தான் என்று எழுதிக் கொள்ளட்டுமா? என்றார். இதைக் கேட்டு ரோகிணி ரொம்பவே எமோஷனல் ஆனார். அதற்குப்பின் லட்சுமி, உன்னுடைய அப்பாவின் நினைவு நாள் வருகிறது. ஊருக்கு போய் திதி கொடுத்துவிட்டு வரலாம் என்று சொன்னார். அதற்கு ரோகிணி, தீபாவளிக்கு நாங்கள் பாட்டி ஊருக்கு போகிறோம். அதனால் வர முடியாது என்றார். உடனே லட்சுமி, அந்த ஊருக்கு பக்கத்தில் தான் அப்பாவுடைய சொந்த ஊர் இருக்கிறது என்று கெஞ்சி கேட்டார்.

கிரிஷ், கட்டாயப்படுத்தியதால் ரோகிணி தன் அப்பாவின் ஊருக்கு செல்ல ஒத்துக் கொண்டார். அதற்குப்பின் முருகனின் உறவினர்கள் ஹாஸ்பிடலுக்கு செல்ல டிரைவர் வேண்டும் என்பதால் முத்துவை பற்றி முருகன் சொன்னார். பின் முருகன், சவாரி இருக்கு போக முடியுமா? என்று முத்துவிடம் கேட்டார். அதற்குப்பின் தங்களுக்கு தெரிந்த தாத்தா, பாட்டிக்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்த உடன் முத்து, மீனாவை அவர்கள் இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்தார். அதற்குப்பின் க்ரிஷ் அப்பாவின் உறவினர்கள் லட்சுமிக்கு ஃபோன் செய்து ரோகினி இடம் பேசுவதற்கு கேட்டார்கள். இதைப் பற்றி லட்சுமி, ரோகினி இடம் சொன்னவுடன் பயங்கரமாக கோபப்பட்டார்.

சிறகடிக்க ஆசை:

பின் கிரிஷ் அப்பாவின் உறவினர்கள், ரோகினிக்கு போன் செய்து பேசி இருந்தார்கள். ஆனால், ரோகினி அவர்களை கண்ட மேனிக்கு திட்டி போனை வைத்து விட்டார் அதற்குப்பின் முருகன், தனக்கு தெரிந்த உறவினர் வீட்டுக்கு முத்துவை அழைத்து வந்தார். ஆனால், அவர்கள் கிரிஷ் அப்பாவின் உறவினர்கள் தான். ஆனால், இந்த விஷயம் முத்து- முருகனுக்கும் தெரியாது. பின் வித்யா அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது எல்லா உண்மையும் தெரிந்து கொண்டார். பின் வித்யா, நீ சீக்கிரமாகவே மாட்டிக்கொள்ளப் போகிறாய். முத்து சவாரி ஒட்டுவது க்ரிஷ் அப்பாவுடைய உறவினர்களை தான். எல்லா உண்மையும் தெரிந்து விடப் போகிறது என்றெல்லாம் சொல்வதால் ரோகிணி ரொம்பவே பயப்பட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் ரோகினி, முத்து அந்த சவாரியை எடுக்கவே கூடாது. உன்னுடைய கணவரிடம் பேசி எதாவது செய் என்று சொல்கிறார். அதற்கு வித்யா, என்னால் எல்லாம் எதுவும் பேச முடியாது என்று சொல்கிறார். ரோகிணி, விஜயாவிற்கு போன் செய்து லேடிஸ் கிளப்பிலிருந்து எனக்கு மூன்று டிக்கெட் கிடைத்திருக்கிறது. நாம் பாண்டிச்சேரி ட்ரிப் போகலாம் என்று சொல்கிறார். அதற்கு விஜயா ஒத்துக்கொள்கிறார். இன்னொரு டிக்கெட்டில் சுருதியை நம்முடன் அழைத்து செல்லலாம் என்று விஜயா சொன்ன உடன் ரோகினி சம்மதிக்கிறார். பின் ரோகினி, எந்த பெண்களுமே வீட்டில் கிடையாது. அதனால்
என் மாமனார் வீட்டில் தனியாகத்தான் இருப்பார்.

சீரியல் ட்ராக்:

இதனால் முத்து சவாரிக்கு போகாமல் தன்னுடைய அப்பாவை பார்த்துக் கொள்வார் என்று சொல்கிறார். பின் ட்ரிப் கிளம்புவதற்காக விஜயா, ஸ்ருதி, ரோகிணி இருவருமே தயாராகி செல்கிறார்கள். மனோஜ், வேண்டாம் என்று சொல்லியுமே ரோகினி கேட்கவில்லை கிளம்பி விடுகிறார். அதற்குப்பின் ட்ரிப்புக்கு சென்ற விஷயம் அறிந்த முத்து, நீங்கள் எப்படி வீட்டில் தனியாக இருப்பீர்கள் என்று தன்னுடைய தந்தைக்கு துணையாக இருக்கிறார். ரவியும் முத்துவுடன் இருக்கிறார். அதற்குப்பின் மனோஜ், வேலைக்கு போகாமல் வீட்டிலேயே தங்கி விடுகிறார். எந்த பெண்களும் வீட்டில் இல்லை என்பதால் நான்கு ஆண்களுமே சேர்ந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ரோகினி தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்து கிரிஷ் அப்பாவின் உறவினர்கள் பற்றி விசாரித்து வையுங்கள் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full