மீனாவை வெறுத்து ஒதுக்கும் முத்து, ரோகினிக்கு அடைக்கலம் கொடுத்தாரா சிந்தாமணி? சிறகடிக்க ஆசை

By subhashini · 12/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ், ரோகிணி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார். ரோகினி, ரொம்ப நன்றி மீனா.எல்லா உண்மையும் முத்துவிடம் சொல்லிவிட்டீர்கள் தானே என்றார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே மீனா பக்கம் திரும்பினார்கள். முன்னாடியே உண்மை தெரியுமா என்று விஜயா, முத்து, அண்ணாமலை எல்லோரும் மாத்தி மாத்தி மீனாவை கேள்வி கேட்டார்கள். ஒரு கட்டத்தில் மீனா நடந்ததை எல்லாம் சொல்லி விட்டார். விஜயா, எல்லோரும் சேர்ந்து என் மகன் வாழ்க்கையை அழித்து விட்டீர்கள் என்றார். முத்து, ரோகிணி செய்தது தவறு என்றால் நீ செய்ததும் தவறுதான் என்றார்.

முத்து, பயங்கரமாக கோபப்பட்டு மீனாவை திட்டிக் கொண்டிருந்தார். ஸ்ருதி- ரவி எல்லோருமே மீனாவிற்கு எதிராக தான் பேசினார்கள். மீனா, தன் பக்கம் இருக்கும் ஞாயத்தை எடுத்துச் சொல்லி புரிய வைத்தார். ஆனால், யாருமே கேட்பதாக இல்லை. அதற்குப்பின் ஸ்ருதி, நீங்கள் எதுவாக இருந்தாலும் வீட்டில் சொல்லி இருக்கணும். அட்லீஸ்ட் என்னிடம் ஆவது சொல்லி இருக்கணும் என்று சொன்னார். மீனா, என்ன நடந்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று எமோஷனலாக பேசி அழுதார்.

சிறகடிக்க ஆசை:

அதற்குப்பின் மனோஜ், ரோகினி உடைய நினைவுகளை அழுது கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் மீனா, மகேஸ்வரியின் வீட்டிற்கு சென்று நடந்ததை எல்லாம் சொன்னார். இதைக்கேட்ட மகேஷ்வரின் கணவர், உன் தோழி இங்கு தங்கத் தேவையில்லை. அவர்கள் வேறு எங்காவது தங்கி கொள்ளட்டும் என்றார். இதை கேட்ட ரோகிணி அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப்பின் வித்யா வீட்டிற்கு சென்ற ரோகிணி நடந்தது எல்லாம் சொன்னார். அப்போது முருகன், முத்து அண்ணன் ரொம்ப பழக்கம். ரோகினி இங்க தங்குவதற்கு நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்றார் இதனால் இடிந்து போய் ரோகிணி உட்கார்ந்து கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வித்யா கணவர், ரோகினி தங்குவதற்கு
ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் ரோகிணி எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
அதற்குப்பின் ரோகினி, பார்வதி வீட்டிற்கு தான் செல்கிறார். அப்போது பார்வதி, நீ செய்தது மிகப்பெரிய தவறு. இருந்தாலும் உன்னை பார்த்தால் பாவமாக இருக்கிறது. இங்கு உன்னை தங்க வைத்தால் எனக்கும் விஜயாவிற்கும்பிரச்சனை வரும் என்று பணம் கொடுக்கிறார். ரோகிணி பணத்தை வாங்காமல் அங்கிருந்து கிளம்பி விடுகிறார். இன்னொரு பக்கம் மனோஜ், ரோகினி செய்த துரோகத்தை நினைத்து ரொம்பவே புலம்பி கத்திக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

இதையெல்லாம் பார்த்து விஜயாவிற்கு கஷ்டமாக இருக்கிறது. அதற்குப்பின் மீனா, தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கிறார். ஆனால், முத்து ஏற்றுக்கொள்ளவே இல்லை, மீனாவை திட்டிக் கொண்டிருக்கிறார். மீனா, எவ்வளவோ சொல்லி புரிய வைக்க பார்க்கிறார். ஆனால், முத்து கேட்கவில்லை. அதற்குப்பின் ரோகினி, சிந்தாமணி இருக்கும் இடத்திற்கு செல்கிறார். அங்கு சிந்தாமணி, ரோகினிக்கு ஆதரவாக பேசி
பேசுகிறார். அதோடு ரோகினி தங்க இடம் கொடுக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full