ரோட்டிலேயே விழுந்து கிடக்கும் ரோகினி அம்மா, முத்து செய்த வேலை - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து வீட்டுக்கு வருகிறார். அங்கு இருக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு பார்த்து மீனாதான் சமைத்தார் என்று தெரிந்து கொண்டு மீனா பெயரை கூப்பிட்டார். மீனாவும் ரூமில் இருந்து வெளியே வந்துவிட்டார். பின் முத்து, மீனா இருவருமே சந்தோசமாக பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் சுருதி-ரவி இருவரும் மீனா- முத்து இணைந்ததை நினைத்து சந்தோஷப்பட்டார்கள். அடுத்த நாள் மீனாவிற்கு போன் செய்த சீதா, என் மாமியார் வீட்டில் விருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். நீயும் மாமாவும் வந்துவிட வேண்டும். அருண் சொல்ல சொன்னார் என்றார்.
பின் இதைப் பற்றி மீனா, முத்துவிடம் சொன்னார். அதற்கு முத்து, நான் அங்கு வந்தால் தேவையில்லாமல் பிரச்சனையாகும். நீ நல்லபடியாக போயிட்டு வா என்று சொல்லி அனுப்பினார். அதற்குப்பின் அருண் வீட்டிற்கு வந்த மீனாவிடம் முத்து வராததை பற்றி விசாரிக்க, மீனாவும் ஏதோ சொல்லி சமாளித்து விட்டார். அதற்குப்பின் சீதா, மாமியார் இருவருமே சந்தோஷமாக பரிமாறிக் கொண்டு பேசி கொண்டார்கள். இதை பார்த்து அங்கிருந்தவர்கள், மாமியார் மருமகள் போல் தெரியவில்லை என்றெல்லாம் சொன்னார்கள். உடனே சீதா தன் மாமியாருக்கு சுத்தி போட்டார். இதை எல்லாம் பார்த்து மீனாவிற்கு தன் மாமியார் நடத்தும் விதத்தை நினைத்து வருத்தப்பட்டார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் அருண் வீட்டில் சத்யாவின் வேலையை பற்றி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது சத்யா, வேலைக்கு தான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நல்ல வேலை கிடைத்தால் சேர்ந்து விடுவேன் என்றார். உடனே அருண், தனக்கு தெரிந்தவரின் மூலம் சத்யாவிற்கு ஒரு நல்ல வேலை வாங்கித் தந்தார். இதனால் மீனாவின் அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் மீனாவின் அம்மா, சத்யா, மீனா எல்லோருக்குமே அருண் துணி கொடுத்தார். இதை பார்த்து மீனாவின் அம்மாவிற்கு சந்தோசமாக இருக்கிறது. சீதாவிற்கு நல்ல வாழ்க்கை கிடைத்தது நினைத்து மீனா சந்தோஷப்பட்டார்.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் ரோகினி, நீத்துவின் ஹோட்டலுக்கு போனார். அப்போது ரவியிடம் ரோகினி சமையல் ஆர்டர் விஷயமாக பேச வந்தேன் என்று சொன்னார். ரவி சென்ற பிறகு ரோகினி, நீத்துவிடம் கல்யாணம் பற்றி பேசி இருந்தார். அதற்கு நீத்து, ரவி போல் மாப்பிள்ளை கிடைத்தால் பண்ணுவேன் என்று ரவியை பற்றி ரொம்ப புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் ரோகினி, சுருதி அம்மாவிற்கு ஃபோன் செய்து பேசி இருந்தார். இதனால் ஸ்ருதி அம்மாவிற்கு இன்னும் கோபம் வருகிறது. இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த மீனா, அருண் வீட்டில் நடந்ததை எல்லாம் முத்துவிடம் சொல்லி சந்தோஷப்பட்டார். அதற்கு பின் தன் மாமியார் சரியில்லை என்று மீனா வருத்தப்பட, முத்து ஆறுதல் சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜயா, மீனாவிற்கு மாத்தி மாத்தி ஆர்டர் போட்டுக் கொண்டிருக்கிறார். இதை பார்த்து கடுப்பான முத்து, என்ன வேண்டும் என்று முதலில் சொல்லுங்கள். அவள் ஒன்னும் இந்த வீட்டு வேலைக்காரி இல்லை என்று மீனாவிற்கு சப்போர்ட் செய்து பேசுகிறார். ஸ்ருதி, ரவி, அண்ணாமலை எல்லோருமே மீனாவிற்கு சப்போர்ட் செய்து பேசுவதால் விஜயாவால் எதுவுமே பேச முடியவில்லை. அதற்குப் பின் ஷோரூமில் ரோகினி, ஹோட்டலில் மேக்கப் போட பெரிய ஆர்டர் கிடைத்திருப்பதால் மனோஜை அழைக்கிறார். மனோஜ், தன்னுடைய அம்மாவை திட்டுவார் என்று பயந்து கொண்டு சொல்கிறார். இதனால் கோபப்பட்டு ரோகினி, எப்பதான் நாம் சேர்ந்து வாழப்போறோம். அம்மாவுக்கு பயந்து கொண்டே இரு என்று புலம்புகிறார்.
சீரியல் ட்ராக்:
இதையெல்லாம் கேட்ட ராணி, உங்கள் கணவர் உங்க பேச்சைக் கேட்பதற்கு எங்கள் ஊரில் லேகியம் இருக்கிறது என்று சொல்கிறார். அதற்கு ரோகினி, சம்மதிக்கிறார். இன்னொரு பக்கம்
முத்து, தனக்கு தெரிந்தவர்களுக்கு பூ வேண்டும் என்பதால் மீனாவின் கடைக்கு அழைத்து வருகிறார். அங்கு மீனா- மூர்த்தி இருவருமே தெரிந்து கொள்ளாதவர்கள் போல் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். அந்த சமயம் பார்த்த அருண், முத்துவை பார்த்து முறைக்கிறார். பின் முத்து தன்னுடைய அப்பாவை அழைத்துக் கொண்டு பள்ளிக்குப் போகிறார். தன் அப்பாவை விட்டு வரும் வழியில் க்ரிஷ் அழுது கொண்டிருப்பதை முத்து பார்க்கிறார். அப்போது ஒருவர், வண்டிக்காரன் அந்த அம்மா மீது ஏற்றிவிட்டு சென்றுவிட்டான் என்கிறார். உடனே முத்து பதறி அடித்துக் கொண்டு கிரிஷ் பாட்டியை காரில் ஏற்றுக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு செல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது