மலேசியா மாமாவை வைத்து ரோகினி போட்ட புது திட்டம், முத்து என்ன செய்யப் போகிறார்? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் மூன்று ஜோடிகளுக்கு இடையே வாக்குவாதம் அதிகமாகி சண்டை வந்ததால் யாருமே பேசி கொள்ளவில்லை. பின் பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பித்தார்கள். மூன்று ஜோடியுமே கோபத்தில் இருப்பதால் போட்டியில் சரியாக விளையாடவே இல்லை.
கடைசி போட்டியில் வெற்றி பெறனும் என்று தங்களின் சண்டைகளை மறந்து பேசிக் கொண்டார்கள். ஒருவழியாக அவர்களுக்குள் இருந்த பஞ்சாயத்து முடிந்து விட்டது. மீனா அந்த நடிகரின் வீட்டின் விசேஷத்திற்கு டெக்கரேஷன் வேலை எல்லாம் செய்தார். இதை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்று சிந்தாமணி, மீனாவின் டெக்கரேஷனை அடித்து நொறுக்குவது போல கனவு கண்டு ரொம்ப சந்தோஷப்பட்டார்.
அதற்கான ஏற்பாடுகளும் நிஜத்திலும் செய்தார். ஆனால், அது நடக்கவில்லை. பின் அந்த நடிகர் மீனாவின் வேலையை பார்த்து பாராட்டி கூடுதலாக சம்பளம் தந்தார். ஆனால், சிந்தாமணி வேலை சரியாக செய்யவில்லை என்று அவளை திட்டி அவருடைய சம்பளத்தையும் குறைத்து விட்டார். இதனால் சிந்தாமணிக்கு மீனாவின் மேல் கோபம் அதிகமானது. இன்னொரு பக்கம் மனோஜ்- ரோகினி இருவரும் போலீஸ் மூலம் கதிர் வீடியோவை எடுக்க கோயிலுக்கு போனார்கள். இன்றைய எபிசோட்டில் போலீஸ் மூலம் மனோஜ்-ரோகினி இருவரும் கதிர் வீடியோவை வாங்கின விஷயத்தை மீனாவிடம் சொல்கிறார் சீதா.
சிறகடிக்க ஆசை:
பின் கோவிலில் கதிர் வீடியோவை சீதா வாங்கி கொள்கிறார். பின் முத்து, மலேசியாவில் வந்தவர்கள் நல்லபடியாக ஊருக்கு திரும்பி விட்டார்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கு. மலேசியா ஜெயிலில் அவருக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் மூலம் ரோகிணி அப்பாவை காப்பாற்றி விடலாம் என்று மனோஜிடம் சொல்கிறார். உடனே ரோகினி பதட்டமாகி, எங்கள் விஷயத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். தேவையில்லாமல் தலை இடாதீர்கள் என்று கோபப்பட்டு திட்டி விடுகிறார். இதனால் முத்து-மீனா இருவருக்கும் ரோகினியின் மீது சந்தேகம் இருக்கிறது.
இன்றைய எபிசோட்:
பின் மறுநாள் காலையில் பார்வதியிடம் ரோகினியை பற்றி இருவரும் விசாரிக்கிறார்கள். ஆனால், அவருக்கு பெரிதாக அவரைப் பற்றி எதுவுமே தெரியவில்லை. அதன் பின் ரோகினியின் தோழி வித்யா வீட்டிற்கு சென்று மீனா விசாரிக்கிறார். வித்யா, மீனாவின் கேள்விக்கு மாத்தி மாத்தி பதில் சொன்னதால் மீனாவிற்கு இன்னும் சந்தேகம் அதிகமானது. பின் இதைப் பற்றி முத்துவிடம் மீனா சொல்கிறார். அதன் பின் மீனா வேலைக்கு சென்று கொண்டிருக்கும்போது சிந்தாமணி ஆட்கள் அவருடைய பூ பெட்டியை எடுத்துக்கொண்டு சென்று விடுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அவர்களை துரத்திக் கொண்டே மீனா, சிந்தாமணி வீட்டிற்கு போகிறார். அப்போது சிந்தாமணி, நீ என்னிடம் வேலை செய். உனக்கு தேவையானதை செய்கிறேன் என்று சொன்னவுடன் மீனா முடியாது என்று அவரிடம் சவாலிட்டு வருகிறார். அதன் பின் வீட்டிற்கு வந்த முத்து, நாம் எல்லோரும் மலேசியா செல்லலாம். எல்லா செலவையும் ரோகினி அப்பா பார்த்துக் கொள்வார் என்று சொன்னவுடன் விஜயா ரொம்ப சந்தோஷப்படுகிறார். முதலில் அண்ணாமலை மறுத்தாலும் எல்லாருடைய கட்டாயத்தினால் ஒத்துக்கொள்கிறார். ஆனால் ரோகினி உள்ளுக்குள் ரொம்பவே பயப்படுகிறார்.
https://www.youtube.com/watch?v=3P2VhXWR8Tw
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், மலேசியா அங்கிள் முத்து வீட்டிற்கு வருகிறார். அப்போது அவர், உன்னுடைய அப்பாவை தொழில் எதிரிகள் சிறையிலேயே அவரை கொன்றுவிட்டார்கள். நீ அங்கு போக வேண்டாம். உன்னையும் கொலை செய்து விடுவார்கள் என்று சொல்கிறார். இதைக் கேட்டவுடன் ரோகினி கதறி அழுது மயங்கி விழுகிறார். உடனே அண்ணாமலை, மலேசியா போக வேண்டாம். ட்ரிப்பை கேன்சல் செய் முத்து என்ற உடன் ரோகினி உள்ளுக்குள்ளே சந்தோஷப்படுகிறார். ஆனால், முத்து- மீனாவிற்கு சந்தேகம் குறையவே இல்லை. இது ரோகினியின் திட்டமாக இருக்குமோ? என்றெல்லாம் யோசிக்கிறார்கள்.