மலேசியா மாமாவால் பிரச்சனையில் சிக்கும் ரோகினி, அருணின் காதலை ஏற்றுக் கொள்வாரா சீதா? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் மனோஜ் டயட்டீசனை வீட்டிற்கு அழைத்து வந்தார். அவர், விஜயாவிற்கு என்னென்ன சாப்பிட வேண்டும்? எப்போது சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும்? என்றெல்லாம் ஒரு லிஸ்ட் கொடுத்தார். இதை பார்த்தவுடன் எல்லோரும் ஷாக் ஆகி இருந்தார்கள். பின் அதையெல்லாம் மீனாவை சமைக்க சொன்னார் விஜயா. பின் மனோஜ்க்கும் சேர்த்து சமைக்க சொன்னவுடன் அவர் முடியாது என்றார். உடனே முத்து, சமைத்துக் கொடுக்க வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும் என்ற உடன் வேறு வழி இல்லாமல் மனோஜ் ஒத்துக் கொண்டார்.
இன்னொரு பக்கம் அருண், வீட்டிற்கு சென்று பூ கொடுத்தார். சீதாவை பார்த்தவுடன் அருண் அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டு பேசி இருந்தார். அதற்குப்பின் அருண் வேலைக்கு கிளம்பி இருந்தார். இன்னொரு பக்கம் விஜயா- சிந்தாமணி இருவரும் சேர்ந்து நடனம் ஆடி இருந்தார்கள். அந்த சமயம் பார்த்து மீனா, விஜயாவிற்கு சாப்பாடு கொண்டு வந்தார். மீனாவை பார்த்தவுடன் வழக்கம்போல் விஜயா திட்ட ஆரம்பித்தார். பின் நக்கலாக சிந்தாமணியும் மீனாவை வம்பு இழுத்தார். அது தெரியாமல் விஜயா, மீனாவை திட்டி கொண்டு ஏளனமாக பேசி இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் சிந்தாமணியின் ஒவ்வொரு வார்த்தைக்குமே மீனா பதில் கொடுத்தார். இதெல்லாம் பார்த்து விஜயாவிற்கு பயங்கர கோபம் வந்து மீனாவை திட்டி இருந்தார். பின் மீனா எல்லோருக்கும் சமைத்து வைத்து இருந்தார். மனோஜ், விஜயாவிற்கு மட்டும் தனியாக டயட் புட்டை சமைத்து வைத்திருந்தார். அந்த சமயம் பார்த்து ரவி-சுருதி இருவரும் பீட்சா வாங்கி வந்தார்கள். அதை பார்த்தவுடன் சாப்பிட வேண்டும் என்ற ஆசை மனோஜ், விஜயாவிற்கு இருந்தது. இருந்தாலும் இருவரும் டயட் ஃபாலோ பண்ண வேண்டும் என்று சாப்பிடவில்லை.
நேற்று எபிசோட்:
அதற்குப்பின் இரவு வயிறு வலி தாங்க முடியாமல் மனோஜ், விஜயா இருவருமே மாற்றி மாற்றி பாத்ரூம் போனார்கள். வயிறு வலி தாங்க முடியாமல் இரண்டு பேருமே ரொம்ப சோர்வாகி விட்டார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வயிறு வலி தாங்க முடியாமல் மனோஜ்- விஜயா இருவரும் கத்தி புலம்பி கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து வீட்டில் உள்ள எல்லோரும் வந்து விடுகிறார்கள். திடீரென்று டயட் ஃபுட் எடுத்துக் கொண்டதால் தான் இந்த மாதிரி எல்லாம் என்று சுருதி சொல்கிறார். ஆனால், விஜயா இதற்கு எல்லாம் காரணம் மீனா தான்.
இன்றைய எபிசோட்:
அவள் தான் பொறாமையில் எங்களுக்கு சமைத்துக் கொடுத்தால் என்று வழக்கம்போல் அவளை திட்டுகிறார். உடனே அண்ணாமலை, விஜயாவை திட்டி அறிவுரை சொன்னார். பின் விஜயா- மனோஜ் இருவருமே இனிமேல் டயட் ஃபாலோ பண்ண வேண்டாம் என்று முடிவு எடுக்கிறார்கள். அதற்கு பின் மீனா இருவருக்கும் கஷாயம் வைத்து கொடுக்கிறார். மறுநாள் காலையில் சீதா கோயிலில் தன் அம்மாவிற்கு உதவி செய்து கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து அருண் தன் அம்மாவை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வருகிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது சீதாவிடம் அருண் தன்னுடைய காதலை வெளிப்படுத்துகிறார். ஆனால், சீதா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருக்கிறார். அருண், பொறுமையாக யோசித்து முடிவு சொல்லுங்கள் என்று அங்கிருந்து கிளம்புகிறார். இதையெல்லாம் பார்த்து சீதாவின் அம்மாவிற்கு
சந்தேகம் வருகிறது. இன்னொரு பக்கம் ஷோரூமில் மலேசியா மாமா தலையில் ஹெல்மெட் மாட்டிக் கொண்டு பொருட்களை எல்லாம் வாங்க வருகிறார். இதை பார்த்தவுடன் ரோகினி பயந்து கொண்டு திட்டுகிறார். அந்த சமயம் பார்த்து முத்து, அண்ணாமலை கடைக்கு வருகிறார்கள். மலேசியா மாமா ஹெல்மெட் போட்டு கொள்கிறார். ரோகினி ரொம்பவே பயப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.