தன் கணவர் வீட்டுக்கு வர வேண்டி விஜயா செய்யும் பூஜை, சிக்கி தவிக்கும் ரோகினி - சிறகடிக்க ஆசை

By subhashini · 2/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலை எழுதிய கடிதத்தை பார்த்த மீனா படித்தார். அதில், என்னை யாரும் தேட வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றிருந்தார். இதை பார்த்து விஜயா ரொம்பவே பதறிப் போய் மனோஜை திட்டி இருந்தார். முத்து, ரவி இருவரும் அண்ணாமலை தேடி போனார்கள். ஆனால், மனோஜ் மட்டும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அமைதியாக இருந்தார். ரோகிணி, எதற்காக சொத்தை பிரிக்க சொன்னாய் என்றார். கோபத்தில் மனோஜ், உன்னால் தான் இந்த பிரச்சனை என்று கோபப்பட்டு சண்டை போட்டார்.

வீட்டில் உள்ள எல்லோருமே அண்ணாமலை காணவில்லை என்று ரொம்ப கவலையில் இருந்தார்கள். முத்து- மீனா இருவரும் அண்ணாமலை தேடி சென்றார்கள். அப்போது முத்து, அண்ணாமலையின் நண்பர் வீட்டிற்கு மீனாவை அழைத்துக் கொண்டு போனார். பின் முத்து, நான் வந்தால் அவர் உண்மையை சொல்ல மாட்டார். நீயே பேசு என்று மீனாவை அனுப்பி வைத்தார். அண்ணாமலை நண்பர், உண்மையை சொல்லாமல் ஏதேதோ சொல்லி சமாளித்தார். இருந்தாலும் மீனாவிற்கு அண்ணாமலை நண்பர் மீது சந்தேகம் வருகிறது. பின் அண்ணாமலை நண்பர் சாப்பாடு எடுத்து கொண்டு போகும் போது பின்தொடர்ந்து முத்து வந்தார்.

சிறகடிக்க ஆசை:

அண்ணாமலை, தன் நண்பருக்கு போன் செய்து சாப்பாடு வேண்டாம் என்றார். பாதி வழியிலேயே அண்ணாமலையின் நண்பர் திரும்பி வந்தார். பின் முத்து, அவரை நிறுத்தி விசாரித்தார். அப்போது முத்து,
என் அப்பா இருக்கும் இடம் உங்களுக்கு தெரியும் என்று எனக்கு தெரியும். அவர் வீட்டுக்கு வரவில்லை என்றால் கண்டிப்பாக நான் சாப்பிட மாட்டேன். அவர் வரும் வரை குடித்துக் கொண்டு மட்டும்தான் இருப்பேன் என்று சபதம் விட்டு சென்றார். இன்னொரு பக்கம் ரோகினி வீட்டில் நடந்ததை எல்லாம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். அதற்கு மகேஸ்வரி, உன் மாமியார் பிரச்சனை செய்யக்கூடாது என்றால் தூக்கம் மருந்து கொடுத்து விடு. அதற்குள் உன் மாமனார் வந்து விடுவார் என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மாமியார் எந்த பிரச்சினையும் செய்யக்கூடாது என்பதற்காக தோழி கொடுத்த மருந்தை டீயில் கலந்து ரோகிணி கொடுக்கிறார். ஆனால், உண்மையில் அது தூக்க மருந்து கிடையாது. விட்டமின் மாத்திரை. அது முன்பிருந்தது போல அதிகமான சக்தியை கொடுக்கும் என்று மகேஸ்வரி, ரோகினிக்கு போன் செய்து சொல்கிறார். அதற்கேற்ப விஜயாவுமே வீட்டில் அலப்பறை செய்து கொண்டிருக்கிறார். அண்ணாமலை வீட்டிற்கு வரவில்லை என்று மனோஜ், முத்து எல்லோரையுமே விஜயா திட்டிக் கொண்டிருக்கிறார். பின் விஜயா, நான் பூஜை செய்ய போகிறேன் என்று மீனாவை ஏற்பாடு செய்ய சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

பூஜை செய்யும் போது ரோகினியும் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு தலையில் கொட்டிக்கொண்டு கையில் சூடத்தை எல்லாம் ஏற்றி வைத்து விஜயா டார்ச்சர் செய்கிறார். விஜயா, உன்னால்தான் மனோஜ் கடன் வாங்கினான் என்று மொத்த பலியையும் ரோகினி மீது போட்டு விடுகிறார். இதையெல்லாம் பார்த்து முத்து, அப்பா நாளைக்கு வரப்போகிறார் என்று பொய் சொல்லி விடுகிறார். அதை நம்பி விஜயாவும் அமைதியாக இருக்கிறார். அதற்குப்பின் அண்ணாமலை வீட்டிற்கு வருவார் என்று ரொம்ப எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் விஜயா. முத்து உண்மையை சொல்லும் நேரம் பார்த்து அண்ணாமலை வீட்டிற்கு வந்து விடுகிறார். விஜயா எமோஷனலாக அண்ணாமலையை கட்டிப்பிடித்து அழுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full